நாம் பயணிக்கும் ரயில்களின் பின்னால் இருக்கும் 'X' என்ற எழுத்திற்கு என்ன அர்த்தம் என விளக்கியுள்ளது ரயில்வே அமைச்சகம்.
ரயில்கள் மற்ற போக்குவரத்து சாதனங்களை போலவே மிகக் கடினமான ஒரு வடிவமைப்பை கொண்டவை.
ரயில் தண்டவாளத்தின் அமைப்புகள் தொடங்கி, ரயிலின் வடிவங்கள் வரையில் ஒவ்வொன்றிற்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. அப்படி நம் கண்ணில் படுமொன்று, ரயில் பெட்டிகளின் பின்னால் குறிப்பிடப்பட்டிருக்கும் 'X' என்ற எழுத்து.
இதன் பொருள் என்ன என்று ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது.
“உங்களுக்கு தெரியுமா?
ரயில் பெட்டியின் பின்னால் இருக்கும் 'X' என்ற எழுத்து, ஒரு ரயிலின் கடைசிப் பெட்டியை குறிக்கிறது. இது எந்த பெட்டிகளையும் அந்த ரயில் விட்டுவிடாமல் கடந்து செல்கிறது என்பதை உறுதிப்படுத்தும் சின்னம்” என விளக்கமளித்திருந்தது.
ரயில்வே அமைச்சகத்தின் இந்த ட்வீட் பலரது கவனத்தை பெற்றுவருகிறது
என்னதான் நிறைய முறை ரயில் பயணம் செய்திருந்தாலும், இத்தனை நாட்களாக எங்களுக்கு இது தெரியவில்லை என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.
பகிரப்பட்டதிலிருந்து சுமார் 2 லட்சம் பார்வைகளையும், மூன்றாயிரம் லைக்குகளையும் பெற்று வருகிறது இந்த பதிவு.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust