Rajasthan’s Bera village, where humans and leopards live together! Canva
இந்தியா

Bera : மனிதர்களும் சிறுத்தைகளும் ஒன்றாக வாழும் இந்திய கிராமம்- அசரடிக்கும் தகவல்கள்

தற்போதை காலக்கட்டத்தில் மனிதர்களும் விலங்குகளும் ஒன்றாக வாழ்வது என்பது ஜங்கிள் புக் கதைகளில்தான் முடியும் என கூறப்படும் நிலையில் ராஜஸ்தானின் பெரா கிராமத்தில் சிறுத்தைகளும் மனிதர்களும் ஒன்றாக வாழ்கின்றனர்.

Priyadharshini R

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சிறுத்தைகளும் மனிதர்களும் ஒன்றாகவே வாழ்கின்றனர் , அது எப்படி சாத்தியம் வாருங்கள் தெரிந்து கொள்வோம்

ஆதிகால மனிதர்கள் விலங்குகளுடன் வாழ்ந்தனர். புதிய கற்காலம் தொடங்கியவுடன் மனித இனம் தனியாகவும், விலங்குகள் தனியாகவும் வாழும் முறை உருவானது.

தற்போதைய காலம் வரை காட்டு விலங்குகள் மனிதர்கள் இருக்கும் பகுதிக்கு வருவதில்லை. ஆனால் விலங்குகளின் வாழ்விடத்தை மனிதர்கள் ஆக்கிரமித்துள்ளனர் என்பதுதான் கசப்பான உண்மை.

இன்றைய நவீன காலத்திலும் காட்டுவிலங்குகளான யானைகள், புலிகள், சிறுத்தைகள் போன்றவை மனிதர்கள் வாழும் பகுதிக்கு வந்தால் அவை கடும் தாக்குதலுக்கு உள்ளாகி விரட்டியடிக்கப்படுவதை அன்றாட செய்திகளாக நாம் பார்க்க முடிகிறது.

தற்போதை காலக்கட்டத்தில் மனிதர்களும் விலங்குகளும் ஒன்றாக வாழ்வது என்பது ஜங்கிள் புக் கதைகளில்தான் முடியும் என கூறப்படும் நிலையில் ராஜஸ்தானின் பெரா கிராமத்தில் சிறுத்தைகளும் மனிதர்களும் ஒன்றாக வாழ்கின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூருக்கும் ஜோத்பூருக்கும் இடையில் அமைந்துள்ளது பெரா கிராமம்.

பாலைவனமும் ஆரவல்லி மலை பகுதியும் ஒருங்கே அமைந்துள்ள இந்த கிராமத்தில் ராபாரி பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர்.

நாடோடி சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் பலுசிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் இங்கிருக்கும் சிறுத்தைகளை சிவன் மற்றும் பார்வதியின் அம்சங்களாக கருதுகின்றனர்

இங்கு உள்ள மலைக்கோயிலில் சிறுத்தைக்கு சிலை வைத்து காவல் தெய்வமாக வணங்குகின்றனர் இப்பகுதி மக்கள்.

இந்தியாவில் 14,000த்துக்கும் அதிமான சிறுத்தைகள் உள்ளன. அவற்றில் அதிக அளவு பெரா கிராமத்தில் தான் உள்ளன (ராஜஸ்தான் மாநிலத்தின் பெரா கிராமத்தை சிறுத்தைகளின் நாடு என கூறுகின்றனர்).

இந்த கிராமம் சிறுத்தைகள் அதிகம் வாழும் பகுதியாக மாறியதில், இந்த பகுதி சுற்றுலா தளமானது. இதனால் மக்கள் வருகை அதிகரித்தது வணிகப் பகுதியாகி போனது.

ஆகவே பல ரிசார்ட்டுகளும், ஹோட்டல்களும் சிறுத்தைகளின் வாழ்விடத்தை கம்பி வேலி போட்டு ஆக்கிரமித்து அவைகளின் அழகை பைனாகுலர் மூலம் ரசிக்கின்றனர்.

அதே சமயம் பழங்குடியின மக்கள் இருக்கும் பகுதியில் சிறுத்தைகள் தற்போது வரை காவல் தெய்வமாக பார்க்கப்படுகிறது.

பெரா கிராமத்தின் கோயில் பகுதிகளில் சங்கிலிகள் எதுவும் இல்லாமல் சிறுத்தைகள் சுதந்திரமாக சுற்றி வருகின்றன. அவை இந்த ஊர்மக்களின் கால்நடைகளை சில சமயம் வேட்டையாடுகின்றன.

அதனை இந்த பழங்குடி மக்கள் அனுமதிக்கின்றனர். காரணம் சிறுத்தையினை கடவுள் அவதாரமாக இவர்கள் நம்புகின்றனர்.

அதே சமயம் இங்குள்ள பழங்குடியின மக்களை சிறுத்தைகள் தாக்குவதில்லை என கூறப்படுகிறது.

எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ராஜஸ்தானின் பெரா கிராமத்தில் சிறுத்தைகளும் மனிதர்களும் ஒன்றாக வாழ்வதன் மூலம் அழியும் நிலையில் உள்ள சிறுத்தை இனம் மனிதனுக்கு கூறும் செய்தி ’நீயும் வாழு எங்களையும் வாழவிடு’!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?