ரம்யா ரவி கர்நடகாவைச் சேர்ந்த பெண் தொழிலதிபர். தனது பாட்டியின் கையால் பிரியாணி சாப்பிட்டு வளர்ந்த இவர் இப்போது ஊருக்கே பிரியாணி கொடுத்து கோடீஸ்வரராக வளர்ந்திருக்கிறார்.
பிரியாணி லக்னோ, ஹைதராபாத் போன்ற இடங்களில் படு ஃபேமஸ். ஆனால் கர்நாடகாவில் பிரியாணிக்கு தனி மரியாதை எல்லாம் கிடையாது. ஒரு ஊரின் சுவை மற்றவருக்கு பிடிக்காமல் இருக்கலாம், மற்றொரு ஊரின் சுவை ஓரளவு பிரபலமாக இருக்கலாம்.
எல்லாருக்குமாக ஒரே சுவையில் எல்லாரும் விரும்பி சாப்பிடும் பிரியாணியை வழங்க முடிவு செய்தார் ரம்யா.
கொரோனா லாக்டவுனின் போது பெங்களூரில் அவரது சொந்த தொழிலைத் தொடங்கினார். வெறும் 5 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட அந்த நிறுவனம் இப்போது 10 கோடி லாபம் தரும் நிறுவனமாக மாறியிருக்கிறது.
ரம்யா பெங்களூரில் பிறந்தவர். அவருக்கு ஸ்வேதா, ரவீனா என இரண்டு சகோதரிகள் உள்ளனர். பெங்களூரு கிரிஸ்ட் கல்லூரியில் தான் பள்ளிக் கல்வியை நிறைவு செய்தார்.
ரம்யாவின் குடும்பத்தினர் ஹோட்டல்கள் நடத்தி வந்தாலும், சுயமாக தனது தொழிலைத் தொடங்கி வெற்றியும் பெற்றுள்ளார்.
ரம்யாவின் தந்தை ரவிச்சந்தர் தனது மகள்களுக்கு புதிய பிசினஸ்களைத் தொடங்க ஊக்கமளித்து வந்துள்ளார். திறமையாக தொழிலை நடத்துவதற்காக ரம்யா ஹாவேர்ட் யூனிவர்சிட்டியில் தொழில் மேலாண்மை குறித்து படித்துள்ளார்.
தந்தையின் தொழிலை பார்த்து வளர்ந்ததால் அவரிடம் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டுள்ளார் ரம்யா.
தந்தையின் தொழிலை எடுத்து பார்த்துக்கொள்ளும் வாய்ப்பு இருந்த போதும் RNR பிரியாணி என்ற தனது சொந்த தொழிலை தொடங்கியிருக்கிறார் ரம்யா.
பெங்களூரில் நாகரபாவி என்ற இடத்தில் 200 சதுர அடி இடமுள்ள கடையில் தொடங்கப்பட்ட இந்த RNR பிரியாணி முதல் மாதமே 10,000 டெலிவரிகளை செய்தனர்.
காலப்போக்கில் பிசினஸ் நன்றாக வளர 2021ம் ஆண்டு இறுதியில் பெங்களூரு ஜெயன் நகரில் சொந்தமாக ரெஸ்டரண்டை தொடங்கிய ரம்யா, வெற்றி எனும் வார்த்தைக்கு இலக்கணமாக திகழ்கிறார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust