நித்யானந்தா  Twitter
இந்தியா

நித்யானந்தா: ”என் உயிருக்கு ஆபத்து...” - இலங்கையில் அடைகலம் கேட்டு ரணிலுக்கு கடிதம்

அவரால் உருவாக்கப்பட்ட தீவாக கூறப்படும் ஸ்ரீ கைலாசத்தில் மருத்துவ உள்கட்டமைப்பு பற்றாக்குறை இருப்பதாகவும் கடித்ததில் குறிப்பிட்டிருக்கிறார்.

Priyadharshini R

உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி மருத்துவ சிகிச்சை பெற இலங்கையில் அடைக்கலம் தரும்படி அதிபர் ரணில் விக்ரமசிங்கேயிடம் நித்யானந்தா கோரிக்கை வைத்துள்ளார்.

தன்னை தானே ஒரு ஆன்மீகத் தலைவராகச் சொல்லிக் கொண்டு வலம் வரும் நித்யானந்தா, ரணில் விக்ரமசிங்கேக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் தனக்கு உடல் நலம் சரியில்லை என்றும் அவசரமாக மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் நித்யானந்தா குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அவரால் உருவாக்கப்பட்ட தீவாக கூறப்படும் ஸ்ரீ கைலாசத்தில் மருத்துவ உள்கட்டமைப்பு பற்றாக்குறை இருப்பதாகவும் கடித்ததில் குறிப்பிட்டிருக்கிறார்.

நித்யானந்தா

நித்யானந்தா உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரம் ஒன்று இந்தியா டுடேக்கு உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பரில் நித்யானந்தாவை, சீடர்கள் இருவரைக் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் குஜராத் போலீஸார் கைது செய்தது. இதனையடுத்து அவர் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்றார் என்பது நினைவிருக்கலாம்.

நித்யானந்தா

கர்நாடகாவில் நித்யானந்தா மீது பாலியல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, தன்னை கடவுள் என்று சித்திரித்துக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறினார். இதனையடுத்து கைலாசம் என்ற தீவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

நித்யானந்தா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், அவரது உண்மையான பெயர் ராஜசேகரன் என்று கூறப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?