interview  canva
இந்தியா

இன்டெர்வியூ இப்படி தான் நடக்கிறதா? Pristyn Care துணை நிறுவனரின் பதிவால் சர்ச்சை

இதை பற்றி பிரபல பிரிஸ்டீன் கேர் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனர் தனது LinkedIn பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவரது பதிவு சற்று நேரத்திலேயே பல கண்டனங்களைப் பெற்றது.

Keerthanaa R

வேலைத் தேடி அலைபவர்களிடம் கேட்டால் தெரியும், ஒரு நேர்காணலை அட்டென்ட் செய்வது எப்படி இருக்கும் என்று. நம் திறன், பொறுமை, ஆட்களை கையாளும் விதம் என பலவற்றை சோதிக்கும் விதமாக தான் இன்டெர்வியூ இருக்கும்.

அவற்றையெல்லாம் கடந்து வந்து ஒரு வேலையில் சேருவது சாதாரண காரியமில்லை. ஆனால், இந்த நேர்காணல்கள், நிறுவனங்களின் பார்வையில் எப்படி இருக்கும்?

இதை பற்றி பிரபல பிரிஸ்டீன் கேர் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனர் தனது LinkedIn பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவரது பதிவு சற்று நேரத்திலேயே பல கண்டனங்களைப் பெற்றது.

பிரிஸ்டீன் கேர் நிறுவனத்தின் துணை நிறுவனர் ஹர்சிமர்பீர் சிங் தன் LinkedIn பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்தார். அதில், அவரது நிறுவனத்தில் வழக்கமாக கையாளப்படும் நேர்காணல் செயல்முறையை பற்றி எழுதியிருந்தார். அந்த பதிவில் வேலைக்கு விண்ணப்பித்தவர்களைக் கையாண்ட விதம் குறிப்பிடப்பட்டிருந்தது.

கேண்டிடேட்டை காலை 8 மணிக்கே தொடர்பு கொண்டது முதல், வேண்டுமென்றே முதல் சுற்றை 11 மணிக்கு நடத்தியது, 6 முதல் 8 மணி நேரம் அலுவலகத்திலேயே காக்கவைத்து அவர்களின் பொறுமையை சோதித்தோம் என்பது வரை தெரிவித்திருந்தார்.

பின்னர் ஒருமுறை இரவு ஒன்பது மணிக்கு நேர்காணல் நடத்தியதையும், முக்கியமாக ஞாயிற்றுக் கிழமைகளில் நேர்காணல் நடத்துவதை வாடிக்கையாக வைத்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், வெளியூரிலிருந்து யாரேனும் வேலைக்கு விண்ணப்பித்திருந்தால், அவர்களை கட்டாயமாக நேரில் வரவழைத்ததாகத் தெரிவித்திருந்தார்

இப்படி ஒரு நாளில் வெவ்வேறு நேரத்தில் நடத்தப்படும் நேர்காணல்கள் வெவ்வேறு நேரங்களில் வேலை செய்பவர்களின் திறனை தெரிந்துகொள்வதற்காக என அவர் தெரிவித்தார். மேலும், நிறுவனத்தில் சேருபவர்களுக்குப் பொறுமையும் நிதானமும் இருக்கிறதா என்பதை சோதிக்கவும் இம்முறை கையாளப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

இதனை பதிவிட்ட சிறிது நேரத்திலேயே LinkedIn பயனர்கள் ஹர்சிமர்பீருக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். மேலும், வேலை தேடுபவர்கள் யாரும், சுயமரியாதை என்ற ஒன்று தங்களுக்கு இருந்தால் இந்நிறுவனத்தில் வேலைக்கு செல்ல வேண்டாம் எனவும் பதிவிடத் துவங்கினர். எதிர்ப்புகள் குவியவே, தனது பதிவை ஹர்சிமர்பீர் நீக்கிவிட்டார். எனினும், அவரது பதிவினை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்திருந்த பயனர்கள், அதை பகிர்ந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

அதே நிறுவனத்தில் பணி புரிந்த ஒருவர் கூறுகையில், "நான் இங்கு மூன்று மாதங்கள் வேலை பார்த்தேன். அனைவரையும் கட்டாயமாக 12 மணி நேரமாவது வேலை செய்ய சொல்வார்கள். 60,70 பேர் முன்னிலையில் தான் பணியாளர்களிடம் கடிந்து கொள்வார். பலர் தாங்க முடியாமல் அழுவதை நான் பார்த்திருக்கிறேன்." எனக் கூறினார்.

மேலும், ஊழியர்கள் எப்போது வேலைக்கு வருகின்றனர், எப்போது வேலை முடித்து கிளம்புகிறார்கள் எனவும் பார்ப்பார். மாலை 7 மணிக்கு கிளம்புவதையே சீக்கிராமாக ஏன் கிளம்புகிறீர்கள் என கேள்வி எழுப்புவார் எனவும் அவர் தெரிவித்தார்.

ஒரு வேளை நீங்கள் பிரிஸ்டீன் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களாக இருந்தால் கூறுங்கள். நல்ல கம்பனியில் வேலைக்கு சேர நான் உங்களுக்கு உதவுகிறேன் எனவும் அவர் தெரிவித்தார்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?