நாம் யாரையாவது தொடும்போது, அல்லது கதவு கைப்பிடியை பற்றும்போது, திடீரென முழங்கை எங்காவது இடித்தால், ஷாக் அடிப்பது போன்ற ஒரு உணர்ச்சி தோன்றும்.
இது நம்மில் நிறைய பேருக்கு பல முறை நடந்திருந்தாலும், ஏன் அப்படி ஆகிறது என்று நாம் யோசித்திருக்கமாட்டோம். இதற்கு பின்னால் ஒரு அறிவியல் காரணம் இருக்கின்றது.
உடலின் இந்த செயல்பாட்டை ஸ்டாடிக் எலெக்ட்ரிசிட்டி என்று கூறுகின்றனர். தமிழில் நிலைமின் தூண்டல்.
இந்த உலகில் எல்லாமே அணுக்களால் ஆனது. அணுவின்றி அசையாது உலகு என்பதை கேள்விப்பட்டிருப்போம். இந்த அணுக்களில் எலக்டிரான், ப்ரோடான், நியூடிரான் ஆகியவையால் ஆனது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மின்னணு மற்றும் கருவியல்துறை பேராசிரியர் முனைவர் ஜி சக்திவேல் கூறுகையில், இந்த அணுவில் இருக்கும் ப்ரோட்டான் மற்றும் எலக்டிரான் சமமான அளவில் இருப்பது அவசியம். அதன் சமநிலையில் மாற்றம் ஏற்படும்போது இந்த நிலைமின் தூண்டல் உருவாகிறது என்கிறார்
ஒரு நபரை அல்லது பொருளை தீண்டும்போது, மின் சமநிலையை மீண்டும் நிலைநிறுத்த எலக்டிரான்கள் நேர்மறை மின்னூட்டம் கொண்ட் ஒரு பொருளுக்கு பயணிக்கும். அப்போது ஏற்படும் மின்னோட்டம் தான் இந்த ஷாக் அடித்தது போன்ற உணர்வு ஏற்பட காரணம்
“அணுக்களில் சமநிலை பாதிக்கும்போது எலெக்டிரான் வெளியேற முயற்சிக்கும். அப்படி ஒருவரிடம் கூடுதல் எலெக்டிரான் இருந்தால் அது நெகட்டிவ் சார்ஜ். இது பாசிட்டிவ் சார்ஜ் எலெக்டிரான் எங்கு உள்ளதோ அதை ஈர்க்க முயலும். இவ்வாறு எலெக்டிரான் இடம் மாறும்போதுதான் நமது உடலில் மிகச் சிறிய அளவில் ஷாக் அடித்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது," என விளக்குகிறார் சக்திவேல்.
அதேபோல் எலக்டிரான் அளவு இடம்மாறுவதை பொறுத்து ஏற்படும் உணர்வில் மாற்றம் இருக்கும். குறைந்த அளவில் எலெக்டிரான் இடம்பெயரும்போது ஊசி குத்துவது போன்று இருக்கும். அதிகளவில் எலெக்டிரான் இடம்பெயரும்போது ஷாக் அடித்தது போன்ற உணர்வு இருக்கும்.
பருவ காலமும் இந்த உணர்வு ஏற்பட காரணமாக இருக்கிறது. குளிர் காலத்தில் நம்மைச் சுற்றி வறண்ட காலநிலை இருக்கும். காற்றும் வறண்டு இருப்பதால் சருமத்தின் மேல் பரப்பில் எலக்டிரான்கள் சீக்கிரமாக உருவாகிவிடுகிறது.
ஆனால் எதிர்மறையாக வெயில் காலத்தின்போது காற்றின் ஈரப்பதம் நெகடிவ் எலக்டிரான்களை அழித்துவிடும்.
இதனால் குளிர்காலத்தில் அதிகமாக நிலைமின் தூண்டல் ஏற்படும், கோடையில் அது குறைவாக இருக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust