டெக்னாலஜியின் வளர்ச்சி, நாம் உண்ணும் உணவுகளையும் தென்படுகிறது. விரும்பி சாப்பிடும் ஸ்நாக் வகைகளில் ஒன்று சமோசா.
அதன் வடிவம், உள்ளே வைக்கப்பட்டிருக்கும் உருளைக் கிழங்கு, வெங்காயம் ஃபில்லிங்கிற்கு தனிச்சுவை இருக்கும். இதனாலே நம் நாட்டவர்கள் அல்லாமல் வெளிநாட்டிலும் சமோசாவுக்கு ரசிகர்கள் உண்டு.
அந்த வகையில் பெங்களூரில் ஒரு இடத்தில் கிடைக்கும் சமோசாக்கள் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. அந்த சமோசாக்களில் பெயர் அச்சிடப்படுவது தான் ஸ்பெஷல்!
பொதுவாக சமோசாக்களுக்குள் இருக்கும் ஃபில்லிங் என்னவென்று நமக்கு அதை திறந்து பார்க்கும் வரை தெரியாது.
உள்ளே வைத்திருப்பது என்ன ஃபில்லிங் என அடையாளம் கண்டுகொள்ள சில கடைகளில் ஒரு வகை சமோசாக்களுக்கு சிவப்பு நிறத்தில் டாட் ஒன்று வைத்து பொறித்தெடுப்பார்கள். இந்த பெங்களூரு சமோசா சற்றே முன்னேறி டெக் சாவி சமோசாவாக உள்ளது.
சோபித் பக்லிவால் என்ற நபர் தன் டிவிட்டர் பக்கத்தில் சமோசாக்களின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் சமோசாக்குள் என்ன ஃபில்லிங் இருக்கிறது என்பதை அச்சிட்டிருந்தார்கள்.
ஒன்றில் ஆலூ (உருளைக்கிழங்கு) என்றும் இன்னொன்றில் நூடுல்ஸ் என்றும் அச்சிடப்பட்டுள்ளது. "தி ரியல் ஃபுட் டெக்" என தலைப்பிட்டு அந்த பதிவை பகிர்ந்திருந்தார் சோபித்.
முன்பு போல அல்லாமல், சமோசாக்களில் தற்போது உருளைக்கிழங்கு, நூடுல்ஸ், கார்ன், சீஸ், சிக்கன், மட்டன் போன்றைவையும் வைத்து தரப்படுகின்றன.
இந்த புதிய டெக்னாலஜி, இணையவாசிகளின் மனதை கவர்ந்து வருகிறது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust