Nitin Gadkari Twitter
இந்தியா

வாகனங்களை போட்டோ எடுத்து அனுப்பினால் ரூ 500 சன்மானம் - எங்கு? ஏன்?

Priyadharshini R

என்னதான் பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்தாலும் ஒரு வீட்டில் ஒருவராவது இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் நிர்பந்தம் தொடர்கிறது.

வாகனங்களில் பயணிப்போரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் அரசு சார்பில் விதிக்கப்பட்டு வருகிறது.

இருசக்கர வாகனங்களில் பயன்பாடு இந்தியாவில் அதிகமாக இருப்பதால் சாலையில் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

No parking

இதனால் மற்ற வாகனங்களுக்கு இடையூறு, மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என்பதால் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இதற்காகத் தனியாக ஒரு சட்டம் ஒன்றை இயற்றவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அதில் வாகன நிறுத்துமிடம் இல்லாத இடங்களில் (No Parking) வாகனங்களை நிறுத்தும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதை அதிகரிக்க முடிவெடுத்துள்ளார்.

No parking

அதன்படி இதுபோன்ற நெரிசலான சாலைகளில் பார்க்கிங் இல்லாத இடங்களில் வாகனங்கள் நிறுவப்பட்டிருப்பதைப் புகைப்படம் எடுத்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பும் நபர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு வாகனத்திற்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டால் அதில் 500 ரூபாய் அந்த வாகனத்தைப் புகைப்படம் எடுத்துக் கட்டிக்கொடுத்த நபருக்கு சன்மானமாக வழங்க அரசு முடிவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?