சன்சல் ஷர்மா Twitter
இந்தியா

கணவரின் கொடுமை... துரத்தும் ஏழ்மை...1 வயது மகனை மடியில் கட்டிக்கொண்டு ரிக்ஷா ஓட்டும் பெண்

Antony Ajay R

நொய்டா நகரில் ஒரு வயது மகனை மடியில் கட்டிக்கொண்டு இ-ரிக்ஷா ஓட்டும் பெண் பலரை நெகிழச் செய்துள்ளார்.

நாட்டில் நம்முடன் வசிக்கும் சக மனிதர்களை திரும்பிப் பார்த்தால் இந்த வாழ்வு ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கடினமானதாக இருக்கிறது என்பது தெரியவரும். மனதை உருக்கும் கதைகளைக் கொண்ட பலர் நம் தெருக்களில் நம்முடன் சகஜமாக நடந்துக்கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட ஒருவர் தான் சன்சல் ஷர்மா.

சன்சல் ஷர்மாவின் கணவர் அவரை விட்டு விலகியது முதல் இ-ரிக்ஷா ஓட்டி தான் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். நொய்டாவில் ஒரு பெண் தனியாக ரிக்ஷா ஓட்டி சம்பாதிப்பது சாதாரண காரியமில்லை. ஆரம்பத்தில் ஆண் ரிக்ஷா ஓட்டுனர்கள் ஷர்மாவை ஒடுக்கினர். அவர் நினைக்கும் வழியில் பயணம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்றனர்.

போக்குவரத்து காவலர்களும் மற்றும் சிலரும் ஷர்மாவுக்கு உதவி செய்து இப்போது முக்கியமான சாலையில் தனது ரிக்ஷாவை ஓட்டி வருகிறார் ஷர்மா.

"இப்போது இ-ரிக்ஷா ஓட்டுவதனால் என் மகனை என்னோடு வைத்துக்கொள்ள முடிகிறது. மற்ற இடங்களில் இது முடியாது" எனக் கூறுகிறார் ஷர்மா.

தனது கணவரைப் பிரிந்த பின்னர் சில நாட்கள் அம்மாவுடனும், சில நாட்கள் சகோதரியுடனும் வாழ்ந்து வருகிறார் சன்சல் ஷர்மா.

பணத்திற்காகவும் தனது குழந்தையை வளர்ப்பதற்காகவும் கணவரிடமோ அல்லது வேறு யாரிடமோ எப்போதும் கையேந்தி நிற்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் ஷர்மா.

இப்போது ஒரு நாளுக்கு 300-400 லாபம் ஈட்டி வருகிறார். அதற்காக, தனது கைக் குழந்தையை வயிற்றுடன் கட்டிக்கொண்டு நாள் முழுவது ரிக்ஷாவில் நொய்டாவின் வெப்பமான தெருக்களை சுற்றி வருகிறார்.

கடந்த 2019ம் ஆண்டு சன்சல் ஷர்மாவுக்கு திருமணம் ஆனது. திருமணம் ஆனது முதலே அவரது கணவரால் துன்புறுத்தலுக்கும் சித்திரவதைக்கும் ஆளானார்.

இதனால் 2,3 மாதங்களில் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார். இன்னும் அந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தந்தை இல்லாமல் வளர்ந்த சன்சல் தனது சவாலான வாழ்க்கையை வைராக்கியத்துடன் வாழ்ந்து வருகிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?