Marriage Twitter
இந்தியா

” சாப்ட்வேர் இன்ஜினியர்கள் வேண்டாம்” - வைரலாகும் மேட்ரிமோனியல் விளம்பரம்

Priyadharshini R

"சாப்ட்வேர் இன்ஜினியர்கள் தயவுசெய்து தொடர்புகொள்ளாதீர்" என்ற மேட்ரிமோனியல் விளம்பரம் இணையத்தில் வைரலானதையடுத்து பல்வேறு தரப்பினர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

எல்லாமே டிஜிட்டல் மயமானதால் மக்கள் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேடும் முறை மாறியுள்ளது. திருமணத்திற்கு இணையம் வழியே வரன் தேடி வருகின்றனர்.

மேட்ரிமோனி சைட்களில் தங்களின் விவரங்களை அளித்தும், எப்படி மணமகன் அல்லது மணமகள் வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றனர்.

பெரும்பாலும் திருமண விளம்பரங்களில் தங்களுக்கு என்ன தேவை என்று தெளிவான விவரங்களை கொடுத்திருப்பார்கள். அதில் சில அவ்வபோது விவாதத்திற்கு உள்ளாகும். அந்த வகையில் ஒரு திருமண விளம்பரத்தில் “ மென்பொருள் பொறியாளர்கள் தயவு செய்து தொடர்பு கொள்ள வேண்டாம் என்று குறிப்பிட்டு இருந்தது.

Employee

விளம்பரத்தின்படி, மணமகன் ஐஏஎஸ்/ஐபிஎஸ் ஆக இருக்க வேண்டும். மருத்துவர்/தொழிலதிபர். இந்த தேவைகள் தவிர, விளம்பரத்தின் முடிவில் "மென்பொருள் பொறியாளர்கள் தயவுசெய்து அழைக்க வேண்டாம்" என்று ஒரு சிறப்பு அறிவுறுத்தலும் உள்ளது.

ஏற்கனவே இன்ஜினியர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்ற பிம்பம் உருவாகி இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே! தற்போது பொண்ணும் கிடைக்கவில்லை என்றால்...

இந்த விளம்பரம் தான் தற்போது டிவிட்டரில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

தலைப்பில், படத்தைப் பகிர்ந்த நபர், "ஐடியின் எதிர்காலம் அவ்வளவு சிறப்பாக இல்லை" என்று கேலி செய்தார். அதற்கு பல்வேறு தரப்பினர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?