Monuments Canva
இந்தியா

தாஜ் மஹால் முதல் குதுப்மினார் வரை - சர்ச்சையாகும் முகலாயர் கால நினைவிடங்கள்

Antony Ajay R

ஒரு அரச வம்சம் அவர்களின் ஆளுமைகளை, போர்களை, நிகழ்வுகளை, வெற்றிகளை, இழப்புகளைக் காலம் கடந்தும் நினைவுகூருவதற்கு நினைவுச் சின்னங்களை எழுப்புகின்றனர். கடந்த கால வரலாற்றுப் பண்பாட்டு முக்கியத்துவத்தை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு எடுத்துக்கூறுவது இந்த நினைவுச் சின்னங்களே. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நினைவுச் சின்னங்களுக்குச் சென்று பார்வையிடுவது எப்போதும் அலாதியான உணர்வைத் தரும்.

முகலாயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த முக்கியமான அரச வம்சத்தினராவர். இவர்களது கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக பல நினைவுச் சின்னங்கள் இந்தியாவில் இருக்கின்றன. பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை ஆட்சி செய்த முகலாயர்கள் கட்டிய உலக புகழ்பெற்ற கட்டிடங்கள் குறித்து இப்போது காணலாம்.

ஹுமாயூன் கல்லறை

முகலாயப் பேரரசர் ஹுமாயூன் மறைவுக்குப் பிறகு அவரது ராணி ஹமிதா பானு என்பவரது ஆணைப்படி கட்டப்பட்டது. தாஜ்மஹால் கட்டுவதற்குக் கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் முன்னர் இந்த கல்லறை கட்டப்பட்டிருக்கிறது. ஹுமாயூனுக்குப் பிறகு மன்னரான அக்பர் மேற்பார்வையில் சிகப்பு மணற்கற்கள், வெள்ளை பளிங்குகளுடன் ஓவியம் போல் அமைந்திருக்கிறது இந்த கட்டிடம்.

ஹுமாயூன் கல்லறை

ஃபதேபூர் சிக்ரி

'ஃபதேபூர் சிக்ரி' முகலாயர் காலத்தில் திட்டமிட்டு அமைக்கப்பட்ட முதல் நகரம். அக்பர் காலத்தில் இது கட்டப்பட்டது. அக்பருக்கும் முதலில் பிறந்த குழந்தைகள் இருவர் இறந்து விட, ஆக்ராவுக்கு அருகிலிருந்த ஒரு நகரத்தில் வசித்த சூஃபி, ஷேக் சலிம் சிஸ்டியை அக்பர் சென்று சந்தித்தார். அதற்குப் பிறகு அவருக்கு நூருத்தீன் சலீம் ஜஹாங்கிர் பிறந்தார்.

சூஃபிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அக்பர் அவரது மகனுக்கு சலீம் எனும் பெயரை வைத்தார். சூஃபியின் மகளை ஜஹாங்கீருக்கு வளர்ப்புத் தாயாக்கினார். தனது அரண்மனையை சூஃபி வாழ்ந்த சிக்ரி நகருக்கு மாற்றினார் அக்பர். அத்துடன் சூஃபியின் மறைவுக்குப் பிறகு அங்கு அவருக்காகக் கல்லறை ஒன்றைக் கட்டினார். இந்த நகரம் சூஃபியின் நினைவுச்சின்னமாகவும் பார்க்கப்படுகிறது. இங்குள்ள மசூதிகளும் மற்ற கட்டிடங்களும் இந்திய, பாரசீக மற்றும் இஸ்லாமியக் கட்டிடக்கலைகளின் கலவையுடன் முகலாய கட்டிடக்கலையின்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஃபதேபூர் சிக்ரி

குதுப் மினார்

டெல்லியில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நினைவுச் சின்னமாக குதுப்மினார் இருக்கிறது. கிபி 1193ம் ஆண்டு குதுப் - உத் - தின் ஐபெக் என்ற மன்னர் டெல்லியைக் கைப்பற்றினார். அவரது வெற்றியின் நினைவாக ஒரு ஸ்தூபியையும் எழுப்ப நினைத்தார். அதற்காகத் தான் குதுப்மினார் கட்ட தொடங்கினார். ஆனால் அவரால் அதனைக் கட்டி முடிக்க முடியவில்லை. அவரது வாரிசான இல்துமிஷ் தான் திட்டத்தை முடித்தார்.

குதூப்மினார் அடித்தளம் சுமார் 15 மீட்டர் விட்டமுடையது. உச்சி வரையில் 5 மாடிகளைக் கொண்ட குதுப்மினார், ஒவ்வொரு மாடியிலும் தனி பால்கனிகளைக் கொண்டது.

குதுப்மினார்

செங்கோட்டை

இந்தியச் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது தொலைக்காட்சியில் அனைவரும் செங்கோட்டையைப் பார்த்திருப்போம். இது மிகவும் பிரபலமான வரலாற்றுத் தளங்களில் ஒன்று. தாஜ்மஹாலைக் கட்டிய பேரரசர் ஷாஜகான் தான் செங்கோட்டையும் கட்டினார். தலைநகர் டெல்லிக்கு மாறிய போது, கிபி 1639 - 1648 ஆண்டுகளுக்கு இடையில் இது கட்டப்பட்டது.

செங்கோட்டை

பிபி கா மக்ரா

முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் மனைவியான தில்ரஸ் பானு பேகத்தின் நினைவாக, அவரது மகன் முகமது ஆசம் ஷாவால் மகாராட்டிர மாநிலம், அவுரங்காபாத் நகரத்தில் கிபி 1651 - 1661களில், ரூபாய் 16,68,203 பொருட் செலவில் எழுப்பப்பட்ட நினைவிடக் கட்டிடம் ஆகும். இக்கட்டிடம் தாஜ்மஹால் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளதால், இதனைச் சிறு தாஜ்மஹால் என்றும் அழைப்பர்.

பிபி கா மக்ரா

தாஜ்மஹால்

தாஜ்மஹாலின் வரலாறு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. காலத்தால் அழியாதது காதல் என்பதை இன்றும் சொல்லிக்கொண்டிருக்கிறது அந்த வெள்ளை மாளிகை அல்லது கல்லறை. சுற்றுலாப் பயணிகளைத் தினசரியும் குவித்து வரும் தாஜ் மஹால், பல பிரச்னைகளும் கடந்து போயிருக்கிறது. இந்தியாவிலுள்ள ஒரு நினைவிடத்தை வாழ்வில் ஒரு முறையேனும் அனைவரும் சென்று பார்த்துவிட வேண்டுமென்றால் அது தாஜ்மஹால் தான்.

தாஜ்மஹால்

முகலாயரல்லாத மன்னர்களின் இந்த கோட்டைகளையும் பார்வையிடலாம்.

ஜெய்சல்மார் கோட்டை

தார் பாலைவனத்தின் மத்தியில், திரிகுடா குன்றின் தலையில் சூட்டப்பட்ட கிரீடம் போல், தரையிலிருந்து முப்பது மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது இந்தக் கோட்டை. மஞ்சள் நிற மணல் கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கும் இக்கோட்டை, பகல் நேரத்தில் சூரியக் கதிர்களால் தங்கம் போல் ஜொலிக்கிறது. இதனால் தங்கக் கோட்டை என்றும் அழைக்கின்றனர்.

ஜெய்சால்மர் கோட்டையை 1156ல், பகதி ராஜபுத்திர வம்சத்தைச் சார்ந்த அரசர் ஜெய்சால் என்பவர் கட்டியிருக்கிறார். இதைக் கட்டி முடிக்க ஏழு ஆண்டுகள் ஆனதாம். போர்க்காலங்களில் பகைவர்களின் தாக்குதலை சமாளிக்கும்படி 3 பாதுகாப்பு சுவர்களைக் கொண்டிருக்கிறது இந்த காவல் கோட்டை. இப்போதும் ராஜஸ்தானில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக இந்தக் கோட்டை இருக்கிறது.

ஜெய்சல்மார் கோட்டை

கும்பல்கர்க்

இந்தக் கோட்டையின் சுற்றுச்சுவர் 36 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இது இந்தியப் பெருஞ்சுவர் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோட்டையில் 300 ஜெயின் கோவில்களும் 60 இந்து கோவில்களும் உள்ளது. இதுவும் ராஜஸ்தான் மாநிலத்தில் தான் அமைந்திருக்கிறது.

கும்பல்கர்க்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?