Spiti Valley: பனியுடன் உறவாட பெஸ்ட் ஸ்பாட் - எப்படியெல்லாம் என்ஜாய் செய்யலாம்? | Video Twitter
இந்தியா

Spiti Valley: பனியுடன் உறவாட பெஸ்ட் ஸ்பாட் - எப்படியெல்லாம் என்ஜாய் செய்யலாம்? | Video

ஸ்பிட்டி பள்ளத்தாக்குக்கு ஆண்டு முழுவதும் பயணம் செய்யலாம். ஒரே ஆண்டில் பல முறை கூட பயணம் செய்யலாம். ஏனென்றால் ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விதமான அனுபவத்தையும் உணர்வையும் வழங்கும் அற்புத தலம் அது.

Antony Ajay R

சின்ன வயசுல இருந்தே பனியில் துள்ளி குதித்து விளையாட வேண்டும் என்ற ஆசை நம் அனைவருக்கும் இருந்திருக்கும். அதற்கு சரியான இடம் ஸ்பிட்டி பள்ளத்தாக்கு. 

ஸ்பிட்டி என்றால் Middle Land என்று அர்த்தமாம். இந்தியாவுக்கும் திபெத்துக்கும் நடுவில் இந்த பள்ளத்தாக்கு இருப்பதனால் இதற்கு “ஸ்பிட்டி” என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

ஸ்பிட்டி பள்ளத்தாக்குக்கு ஆண்டு முழுவதும் பயணம் செய்யலாம். ஒரே ஆண்டில் பல முறை கூட பயணம் செய்யலாம். ஏனென்றால் ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விதமான அனுபவத்தையும் உணர்வையும் வழங்கும் அற்புத தலம் அது.

ஸ்பிட்டி பள்ளத்தாக்குக்கு அருகில் உள்ள நாகு கிராமத்தில் உறைந்த ஆறு மிகவும் பிரபலம். ஸ்பிட்டி சென்று வந்தால் அங்குள்ள மக்களை மெச்சிக்காமல் யாராலும் இருக்க முடியாது. அவ்வளவு அன்பான, நட்புறவுடன் பழகக்கூடிய மக்களை வேறெங்கும் பார்ப்பது கடினம் தான்.

இங்கு செல்லும் போது தங்குவதற்கு நாம் அதிக பணம் செலவழிக்க வேண்டியதில்லை. 200 ரூபாய் முதலே நமக்கு இரவு சாப்பாடு கிடைக்கும். இது ஒரு பெருநகர வாடகைக்கு சமமானது தான்.

ஸ்பிட்டிக்கு வரும் போது கிராமத்தில் உள்ள இடங்களில் தங்கி உள்ளூர் உணவுகளை சுவைக்க மறக்காதீர்கள். ஆச்சரியங்களை அள்ளித் தரக் கூடிய அவர்களது கலாச்சாரங்களையும் பழக்கவழக்கங்களையும் அப்போது தானே தெரிந்துகொள்ள முடியும்.

இங்கு கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்னாள் கட்டப்பட்டதாக கூறப்படும் தாபு மானஸ்ட்ரி (புத்த பள்ளி) இருக்கிறது. ஸ்பிட்டியில் நிச்சயம் பார்க்க வேண்டிய இடம் இது. ஸ்பிட்டியில் இன்னும் சில புத்தபள்ளிகளைப் பார்க்கலாம். 

ஸ்பிட்டி பள்ளத்தாக்கு பக்கத்தில் உள்ள ஸ்பின் பள்ளத்தாக்கு சென்று பனியில் விளையாடலாம். அந்த சில மணி நேரங்களில் பனியுடன் நாம் உருவாக்கிக்கொள்ளும் உறவு எப்போது மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். 

ஆசியாவிலேயே உயரமான பாலமான சிசாம் (Chicham Bridge) பாலத்துக்கு சென்று த்ரில்லான அனுபவத்தைப் பெறலாம். 

பனிச்சிறுத்தை, மலை ஆடுகள் போன்ற வன விலங்குகளைப் பார்க்கும் அதிர்ஷ்டமும் நமக்கு கிடைக்கலாம். இன்னும் இன்னும் ஸ்பிட்டி பள்ளத்தாக்கை எப்படியெப்படியெல்லாம் என்ஜாய் செய்யலாம் என வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்…

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?