அஞ்சு கடிவாடா ட்விட்டர்
இந்தியா

Nepal: தொடரும் துயரம்; முதலில் கணவர், தற்போது மனைவி- விமான விபத்தில் உயிரிழந்த தம்பதி

Keerthanaa R

கடந்த ஞாயிறு அன்று ஏற்பட்ட நேபாள் விமான விபத்து, உலகையே உலுக்கியது. காட்மண்டுவிலிருந்து போர்க்கானா வரை சென்ற விமானம், தரையிறங்கும் தருவாயில் வெடித்து விபத்துக்குள்ளானது.

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத, மிகவும் பயங்கர விபத்து இதுவென்று கூறப்படுகிறது. கடந்த 2000மாம் ஆண்டு முதல் ஏற்பட்ட மொத்தம் 17 விபத்துகளில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்

பயணித்த 72 பேரில், 68 பேர் இறந்துவிட்டதாக நேற்று செய்திகள் வெளியாகின. அதில், துணை விமானி அஞ்சு கடிவாடா என்பவரும் இறந்தார்.

இந்த அஞ்சு கடிவாடாவின் கதை தற்போது இணையத்தை கவர்ந்து வருகிறது.

16 ஆண்டுகளுக்கு முன், இதே போன்ற ஒரு விமான விபத்தில் தன் கணவரை இழந்தவர் அஞ்சு கடிவாடா!

துணை விமானி அஞ்சுவி கணவர், தீபக் போக்ரேல் நேபாளின் யெட்டி ஏர்லைன்ஸில் விமானியாக பணியாற்றினார். 2006 ஆம் ஆண்டு ஜும்லாவில், யெட்டி விமானம் விபத்துக்குள்ளானதில், அஞ்சுவின் கணவர் உயிரிழந்தார். இவர்களுக்கு அப்போது ஒரு குழந்தை இருந்தது

அதன் பின்னர், தன் கணவரின் கனவை நனவாக்குவது தான் வாழ்க்கையின் லட்சியம் எனக் கூறி, விமானியாக பயிற்சிகளை மேற்கொள்ள தொடங்கினார் அஞ்சு. வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தாலும், பயிற்சிகளை மேற்கொண்டு, கணவர் பணிபுரிந்த அதே யெட்டி ஏர்லைன்ஸில் 2010 ஆம் ஆண்டு சேர்ந்தார்.

பயிற்சிக்கான செலவுகளை மேற்கொள்ள கணவரின் இன்சூரன்ஸ் தொகை இவருக்கு உதவியது. முறையாக பயிற்சிகள் மேற்கொண்டு லைசன்ஸை பெற்றார்

44 வயதாகும் அஞ்சு மிகவும் அனுபவம் வாய்ந்த பயணி என யெட்டி ஏர்லைன்ஸ் ஊழியர் சுதர்ஷன் பர்துவாலா தெரிவித்தார். 6400 மணி நேரத்திற்கும் மேல் விமானத்தை இயக்கிய அனுபவம் அஞ்சுவுக்கு உள்ளது.

இதற்கு முன்னர் அஞ்சுவே பலமுறை நேபாள தலைநகர் காட்மண்டுவிலிருந்து நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான போக்காரா வரை விமானத்தை செலுத்தியிருக்கிறார்.

இப்படியிருக்க, கடந்த ஞாயிற்று கிழமை காட்மண்டுவிலிருந்து போகாரா சென்ற விமானத்தில் துணை விமானியாக பயணித்தார் அஞ்சு. போக்காரா விமான நிலையத்தில் தரையிறக்கப்படுவதற்கு முன், விமானி கமல் மாற்று ஓடுதளத்தில் விமானத்தை தரையிறக்க கோரிக்கை விடுத்துள்ளார்

தரையிறங்கும் நேரத்தில் தான் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் உயிரிழந்த 68 பேரில், விமானி கமல், மற்றும் துணை விமானி அஞ்சு ஆகியோரும் அடக்கம்.

கமலின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அஞ்சுவின் உடல் இன்னும் கிடைக்கவில்லை. இன்னும் மூன்று பேரின் உடல்களையும் மூன்றாவது நாளாக மீட்பு பணியாளர்கள் தேடி வருகின்றனர்.

விமானத்தின் கருப்பு பெட்டி கண்டறியப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?