Twin Towers Twitter
இந்தியா

3500 கிலோ வெடி வைத்து நாளை தகர்க்கப்பட இருக்கும் இந்தியாவின் இரட்டைக் கோபுரங்கள் - ஏன்?

தி சூப்பர்டெக் ட்வின் டவர் (The Supertech Twin Tower) இரட்டை கோபுரம் தகர்க்கப்பட உள்ளது. வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.30 மணிக்கு இக்கட்டடம் வெடி வைத்து தகர்க்க நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

NewsSense Editorial Team

ஒரு கட்டுமானம் சட்டத்துக்கு புறம்பாகக் கட்டப்பட்டு இருக்கும் போது, அல்லது பழைய கட்டுமானமாக இருந்தாலோ அல்லது அரசு கையகப்படுத்தப்பட்ட இடத்தில் அக்கட்டடம் அமைக்கப்பட்டு இருந்தாலோ அதை தகர்த்து புதிய கட்டுமானங்களை மேற்கொள்வது வழக்கம்.

அப்படி இந்தியாவில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் நொய்டா நகரத்தில் ஒரு இரட்டை கோபுரம் தகர்க்கப்பட உள்ளது. அதன் பெயர் தி சூப்பர்டெக் ட்வின் டவர் (The Supertech Twin Tower). வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.30 மணிக்கு இக்கட்டடம் வெடி வைத்து தகர்க்கப்பட உள்ளது.

ஏன் தகர்க்கப்படுகிறது இரட்டை கோபுரங்கள்

இந்த கோபுரங்கள் 2000ம் ஆண்டின் பாதியில் மரால்ட் கோர்ட் என்ற திட்டத்தில் கட்டப்பட்டது. சூப்பர்டெக் பில்டர்ஸ் என்ற அந்த நிறுவனம் அரசு அனுமதி வழங்கியதற்கு மிகையாக இதனை கட்டியுள்ளது.

இந்த கட்டடத்தை இடிக்கக் கூடாது என இங்கு வாழ்ந்த மக்கள் தசாப்த காலத்துக்கும் மேலாக சட்ட போராட்டம் நடத்தினர். ஆனால் நீதிமன்றம் இந்த 40 மாடி கட்டடத்தை உறுதியாக இடிக்க உத்தரவிட்டுள்ளது.

இதில் உள்ள ஒரு குடியிருப்பின் இன்றைய மதிப்பு 1 கோடி முதல் 3 கோடி வரை என்பது குறிப்பிடத்தக்கது. 2014ம் ஆண்டு வரை இந்த கட்டடத்தை கட்ட 70 கோடி ரூபாய் செலவிட்டதாகவும், 180 கோடி ரூபாய் வரை விற்றதாகவும் சூப்பர் டெக் நிறுவனம் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

இக்கட்டடத்தைத் தகர்க்க எமரால்ட் கோர்ட், ஏ டி எஸ் வில்லேஜஸ் என்கிற இரு குடியிருப்பு சமூகங்களில் வாழும் மக்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களிடம் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளது.

அதே போல நொய்டா காவல் துறை, தீயணைப்புத் துறை ஆகியோரிடமும் அனுமதி பெறப்பட்டுள்ளது. எடிஃபிஸ் இன்ஜினியரிங் (Edifice Engineering) என்கிற நிறுவனம் இப்பணியை மேற்கொண்டு வருகிறது. தற்போது கட்டடத்தைத் தகர்க்கும் பணிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

எப்படி தகர்க்கக் போகிறார்கள்?

சுமார் 100 மீட்டர் உயரம் கொண்ட 'தி சூப்பர்டெக் ட்வின் டவர்' இரட்டை கோபுரங்களை கிட்டத்தட்ட 3,500 கிலோ வெடி மருந்துகள் கொண்டு தகர்க்க உள்ளதாக எடிஃபிஸ் இன்ஜினியரிங் நிறுவனம் ஊடகங்களிடம் கூறியுள்ளது. இந்த இரட்டை கோபுரத்தைத் தகர்ப்பதால், எமரால்ட் கோர்ட் மற்றும் ஏ டி எஸ் வில்லேஜஸ் என்கிற இரு குடியிருப்பு சமூகங்களின் மீது தான் அதிக தாக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன?

எமரால்ட் கோர்ட் மற்றும் ஏ டி எஸ் வில்லேஜஸ் சொசைட்டீஸ் ஆகிய குடியிருப்பு பகுதியில் வாழும் 5,000 மக்களுக்கு மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்படுவர். அதே போல சுமார் 2,500 வாகனங்களும் இடம் மாற்றப்படும். இந்த வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க நொய்டா நகர நிர்வாகம் சில ஏற்பாடுகளைச் செய்ய உள்ளது.

எடிஃபிஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தின் அறிவுறுத்தலின் படி, ஆகஸ்ட் 28ஆம் தேதி, மேற்கூறிய இரு குடியிருப்புப் பகுதிகளில் வாழும் மக்கள் காலை 7 மணிக்கு வெளியேறி, மாலை 4 மணிக்குத் திரும்பலாம் என்கிறது.

கட்டடம் இடித்து தகர்க்கப்படும் போது எதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக களத்தில் இறங்க ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் தீயணைப்புத் துறை வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 28ஆம் தேதி மதியம் 2.15 மணி முதல் 2.45 மணி வரை கிரேட்டர் நொய்டா எக்ஸ்பிரஸ்வே சாலை மூடப்படும். அப்போது எந்த வித வாகனங்களும், மக்களும், விலங்குகள் கூட அந்த சாலையில் இருக்கவோ, பயணிக்கவோ அனுமதிக்கப்படாது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?