டெல்லி உயர்நீதிமன்றம் இந்திய தொல்லியல் ஆய்வு துறைக்கு (ASI) வழங்கியுள்ள புதிய உத்தரவு நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்து சேனா என்ற அரசு சாரா அமைப்பு தாஜ்மஹாலின் வரலாற்றை பாட புத்தகங்களில் மாற்றுவது குறித்து போட்ட வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ராஜா மான் சிங்-ன் அரண்மனை இடிக்கப்பட்டு தாஜ்மஹால் கட்டப்பட்டற்காக எந்த வரலாற்று தரவும் இல்லை எனக் கூறிய நீதிமன்றம், இது குறித்து முடிவு செய்ய இந்திய தொல்லியல் ஆய்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி சதீஷ் சந்தர் சர்மா மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலாவ் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு இந்து சேனா அமைப்பின் பொதுநல வழக்கை விசாரித்தது.
இந்த மனுவில் தாஜ்மஹாலின் வயது குறித்து ஆராய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தாஜ்மஹால் இருந்த இடத்தில் ராஜா மான் சிங் காலத்தில் 31.12.1631-க்கும் முன்னர் அவரது அரண்மனை இருந்ததாக கருதுகிறது. இது குறித்து தொல்லியல் ஆய்வுத் துறை நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
யாதவ் என்பவர் தொடுத்துள்ள வழக்கில் ராஜா மான்சிங் அரண்மனை இருந்த இடத்தில் தாஜ்மஹால் இருப்பதாக கூறப்பட்டதுடன், அரண்மனை வளாகத்தில் இருந்த கூம்பு வடிவ அரண்மனையில் மும்தாஜின் உடல் புதைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust