குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்த க்ஷமா பிந்து என்ற 24 வயதான பெண் கடந்த ஜூன் 11 ஆம் தேதி தன்னை தானே பெற்றோரின் ஆதரவுடன் திருமணம் செய்துகொண்டார்.
இந்த திருமணம் குறித்து அவர் கூறியிருந்ததில்
“நான் திருமணம் செய்துகொள்ள நினைக்கவில்லை. ஆனால், என்னை மணமகளாகப் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன்.
மேலும் சிலர் சுய திருமணத்தைப் பொருத்தமற்றதாக உணரலாம். ஆனால், இதன்மூலம் நான் கூற வருவது பெண்கள் முக்கியமானவர்கள் என்பதே.
எனது முடிவை குடும்பத்திடம் கூறும்போது அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்” என்றார்.
இவ்வாறு திருமணம் செய்துகொள்வது முறையானது அல்ல என்றும், வேடிக்கையாகவும் சிலர் இந்த திருமணம் குறித்து விமர்சனங்கள் செய்திருந்தனர்.
ஆனால் அவரது கண்ணாடி பிம்பத்திற்கு அவரே முத்தமிட்டுக் கொண்ட புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் படுவைரலாகப் பகிரப்பட்டுப் பார்க்கப்பட்டது.
திருமணத்திற்குப் பிறகு, க்ஷமா பிந்து கோவாவிற்குச் ஹனிமூன் செல்ல இருப்பதாகக் கூறியிருந்தார். தற்போது அங்கு செல்ல ஆயத்தமாகியுள்ளார் பிந்து
இந்த நிலையில் பிந்து அவரின் சுய திருமணத்திற்குப் பின் நடந்த சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
சுய திருமணம் செய்துகொண்ட பிந்துவை பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் நச்சரித்து வந்ததால், தன் வீட்டை காலி செய்து வேறு இடத்திற்கு மாற வேண்டிய சூழ்நிலை உருவானதாகக் கூறினார்.
மேலும் இதற்கு முன் பணிபுரிந்த வேலையை விட்டு நின்றுவிட்டதாகவும், தேனிலவு செல்ல போதுமான பணம் இருப்பதாகவும், இந்த பயணத்தை முடித்துவிட்டு வேறு வேலை செல்ல உள்ளதாகப் பிந்து தெரிவித்துள்ளார்.
இவர் ஹனிமூன் சென்று வந்த பிறகு தனது திருமணத்தை பதிவு செய்யவுள்ளதாகவும் கூறியிருக்கிறார்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust