வெளிநாட்டு பயணிகளை அதிகம் ஈர்க்கும் இந்தியாவின் 10 சுற்றுலாத்தலங்கள் இவை தான் Newssense
இந்தியா

வெளிநாட்டு பயணிகளை அதிகம் ஈர்க்கும் இந்தியாவின் 10 சுற்றுலாத்தலங்கள் இவை தான்

வெளியூரில் அல்லது வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு தான் நம் ஊரின் அருமைகளை அதிகம் மெச்சிப்பார்கள். அப்படி வெளிநாட்டிலிருந்து இந்தியா வருகைதரும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கின்ற 10 இடங்கள் எவைத் தெரியுமா?

NewsSense Editorial Team

தரம்சாலா - இமாச்சல பிரதேசம்

தரம்சாலா - இமாச்சல பிரதேசம்

இமாச்சல பிரதேசத்தின், எழில்மிகு காங்க்ரா பள்ளத்தாக்கில் அமைந்துள்ள தரம்சாலா, பெரும்பாலும் உலகத்தால் அறியப்படாத இடமாகவே உள்ளது. எனவே தான், அதன் சுத்தமான இயற்கை அழகு இன்னும் கச்சா கறைபடாமல் உள்ளது. மேலும், இது திபெத்திய மக்கள் வசிக்கக் கூடிய இடமாக இருப்பதால், நீங்கள் இங்கே இருக்கும் போது வேறொரு உலகத்தில் நுழைந்துவிட்ட உணர்வைப் பெறுவீர்கள். வெளிநாட்டுப் பயணிகள் சுற்றித் திரிவதற்கும், அறியப்படாத பல இடங்களை ஆராய்வதற்கும் சுவாரஸ்யமான ஓர் இடமாக தரம்சாலா திகழ்கிறது.

வாரணாசி - உத்தரப் பிரதேசம்

வாரணாசி - உத்தரப் பிரதேசம்

இந்தியாவின் புனித நதிகளில் ஒன்றான கங்கைக் கரையில் அமைந்திருக்கிறது இந்த வாரணாசி. இந்நகரத்தின் வரலாறு மிகப் பழமையானது. பாரம்பரியம் மிக்க ஒரு நகரம். இதனால் தான் இந்த இடத்தை பார்வையிட வெளிநாட்டினர் விரும்புகிறார்கள். மிக முக்கியமாக, இது வேறு எங்கும் அரிதாகவே காணக்கூடிய தனித்துவம் மிகுந்த ஆன்மீக அதிர்வை வெளிப்படுத்தக் கூடிய ஒரு நகரமாகும்.

3. ரிஷிகேஷ் - உத்தரகாண்ட்

3. ரிஷிகேஷ் - உத்தரகாண்ட்

உலகின் யோகா தலைநகரமாகத் திகழும் ரிஷிகேஷ், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ளது. தியானம் மற்றும் யோகா வகுப்புகளை கற்பிக்கும் அனைத்து வகையான ஆசிரமங்களுடனும் இந்த இடம் வெளிநாட்டுப் பயணிகளைக் காந்தம் போலக் கவர்ந்திழுக்கிறது. ஆன்மீகத்தைத் தேடுபவர்கள் செல்ல வேண்டிய முக்கியமான இடங்களில் ஒன்றாக மாறியுள்ளது. கூடுதலாக, வெளிநாட்டுப் பயணிகள் தங்கி ஆன்மீக சிகிச்சையை அனுபவிக்க அனுமதிக்கும் ஏராளமான ஆசிரமங்கள் உள்ளன. எனவே பல ஆண்டுகளாக, இது புத்துணர்ச்சி வழங்கும் மையமாக மாறியுள்ளது.

4. ஜெய்சல்மர் – ராஜஸ்தான்

4. ஜெய்சல்மர் – ராஜஸ்தான்

தார் பாலைவனம் மற்றும் ஜெய்சால்மர் கோட்டை ஆகியவை ஜெய்சல்மாரின் முக்கியமான சுற்றுலாத் தலங்களாகும். கோல்டன் சிட்டி என்று அன்புடன் அழைக்கப்படும் இந்த இடம், உங்களை மற்றொரு சகாப்தத்திற்குக் கூட்டிச் செல்லும் இடங்களில் ஒன்றாகும். தார் பாலைவனம், ஆடம்பர பாலைவன முகாம்கள், பொம்மை நிகழ்ச்சிகள், ஒட்டக சவாரி மற்றும் இரவு இசை நிகழ்ச்சிகள் போன்றவை, இங்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளிடையே பிரபலமானவை ஆகும்.

5. கோவா

கோவா

1960களில் இருந்து ஹிப்பி கலாச்சாரத்திற்காகப் புகழ்பெற்ற கோவா, இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாகும். கோவாவிற்கு அறிமுகம் தேவையில்லை. பல அழகான கடற்கரைகள் மற்றும் பார்ட்டி செய்வதற்குப் பிரபலமான இந்த இடம், கிட்டத்தட்ட ஆண்டு முழுவதும் பயணிகளால் நிரம்பி வழிகிறது. உலகின் எல்லா நாடுகளிலிருந்தும் கோவாவிற்கு வருகை தருகின்றனர். எனினும் பெரும்பாலும் ரஷ்யா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் பயணிகளிடையே பிரபலமான நகரமாகும்.

6. ஆக்ரா

ஆக்ரா

உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் அமைந்திருக்கும் இடம் என்பதால் ஆக்ரா ஒரு புகழ்பெற்ற நகரமாக விளங்குகிறது. மேலும், பல கண்கவர் ஈர்ப்பு மிக்க கட்டிடங்களுடன் இந்த இடம் முழுவதும் அழகு பரவியிருப்பதற்குக் காரணமாக உலகின் பல மூலைகளிலிருந்தும் பயணிகள் குவிந்தவண்ணம் உள்ளனர். ஏராளமான கல்லறைகள் மற்றும் பரந்து விரிந்த கோட்டை போன்றவற்றைக் காண்பதற்காகவே ஆக்ராவிற்கு வரலாம்.

7. கசோல் - இமாச்சல பிரதேசம்

கசோல் - இமாச்சல பிரதேசம்

இந்தியாவின் ஆம்ஸ்டர்டாம் என அழைக்கப்படும் கசோல், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. நடைபயணம், மலையேற்றம், ரிவர் ராஃப்டிங் மற்றும் பல வெளிப்புற கொண்டாட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை இந்நகரம் வழங்குகிறது. வெளிநாட்டுப் பயணிகளின் சொர்க்கம் என்று சொல்லுமளவிற்கு பிரமிக்க வைக்கும் இயற்கை சூழலைக் கொண்டிருக்கிறது.

8. ஹம்பி – கர்நாடகா:

ஹம்பி – கர்நாடகா:

பழங்காலத்தையும், சமகாலத்தையும் இணைக்கும் அழகான இடம் தான் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பி. நகரம் முழுவதும் காணப்படுகிற ஏராளமான பழங்கால இடிபாடுகள் வாயிலாக, புகழ்பெற்று விளங்கிய கடந்த காலத்தைப் பற்றி நாம் அறிந்து கொள்ள முடியும். கோயில்கள் மற்றும் பேரரசுகளின் கட்டிடக்கலை இடிபாடுகளை ஆராய விரும்பும் வெளிநாட்டுப் பயணிகளிடையே இந்த இடம் மிகவும் பிரபலமானதாகும். இது தவிர புகைப்படக் கலைஞர்களின் சொர்க்க பூமியாகவும் ஹம்பி திகழ்கிறது.

9. புதுச்சேரி

புதுச்சேரி

புதுச்சேரி போல ஏறக்குறைய உலகம் முடிவதிலுமிருந்து பயணிகளைக் கவர்ந்திழுக்க முடிந்த வேறு இடம் ஏதேனும் இருக்கிறதா? என்றால் அது ஆச்சரியம் தான். அழகான பிரஞ்சு கட்டிடக்கலை மற்றும் நகர அமைப்புடன், நீங்கள் இந்தியாவிற்குள் ஒரு பிரான்சுக்குச் செல்லக்கூடிய அனுபவத்தை புதுச்சேரி வழங்குகிறது. அதன் பழைய Bougainvillaea-வடிவமைக்கப்பட்ட பிரஞ்சு பாணி வீடுகள், வண்ணமயமான கஃபேக்கள், தேவாலயங்கள் மற்றும் சமீபத்தில் கட்டப்பட்ட பிரஞ்சு பாணி கடைகள் போன்றவை புதுச்சேரிக்குக் கவர்ச்சியான தன்மையைச் சேர்க்கின்றன.

10. ஜெய்ப்பூர் – ராஜஸ்தான்

ஜெய்ப்பூர் – ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலத்தின் மற்றுமொரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும், இது அதன் சுறுசுறுப்பான நகர வாழ்வின் இயல்புக்காக உலகளவில் சுற்றுலாவிற்காக விரும்பப்படுகிறது. ராஜஸ்தானின் இந்த வண்ணமயமான தலைநகரம் மன்னராட்சி கால கட்டிடக்கலையைச் சிறந்த முறையில் காட்சிப்படுத்துகிறது. உலகத் தரம் வாய்ந்த சில ஹோட்டல்கள், வரலாற்றுக் கட்டமைப்புகள் மற்றும் பல உணவு வகைகளின் உணவகங்கள் ஆகியவற்றின் தாயகமான பிங்க் சிட்டி வெளிநாட்டுப் பயணிகளுக்கான சொர்க்கம் என்பதை நிரூபிக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?