these tourist places in India, where you can travel for ‘FREE’ Twitter
இந்தியா

இந்தியாவின் சிறந்த சுற்றுலா தலங்களை FREE ஆக பார்க்கலாமா? என்னென்ன இடங்கள் தெரியுமா?

இலவசமாக செல்லக்கூடிய பல இடங்கள் இந்தியாவில் உள்ளன. அவற்றின் சிலவற்றை இங்கே காணலாம்.

Priyadharshini R

கோடை விடுமுறை என்றாலே நம் நினைவிற்கு வருவது சுற்றுலா தான். குடும்பத்துடனோ அல்லது நண்பர்களாகவோ உலகின் பல இடங்களை சுற்றி பார்க்க நினைப்போம்.

அதிலும் குறிப்பாக இந்தியா, இங்கு பல்வேறு வரலாற்று தளங்கள், இயற்கையின் அழகியல், அற்புதமான மலைகள் என பல்வேறு விஷயங்கள் அனுபவிக்க உள்ளன.

அவற்றை இந்த சம்மர் வெக்கேஷனுக்கு சென்று பார்த்து வாருங்கள். பயண செலவுகளை பற்றி கவலைப்பட வேண்டாம். இலவசமாக செல்லக்கூடிய பல இடங்கள் இந்தியாவில் உள்ளன. அவற்றின் சிலவற்றை இங்கே காணலாம்.

ஆக்ரா

இந்தியாவின் வரலாற்று பாரம்பரியத்தை பட்ஜெட்டில் ஆராய விரும்பினால், ஆக்ராவை விட சிறந்த இருக்க முடியாது.

தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, மெஹ்தாப் பாக், அக்பர் கல்லறை என ஆக்ராவில் பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன.

சில இடங்களை இலவசமாகவும், சில இடங்களை வெறும் 50-25 ரூபாய் டிக்கெட் கொடுத்தும் பார்க்கலாம். நீங்கள் ஆக்ராவில் தங்க திட்டமிட்டால், இங்குள்ள ஹோட்டல் கட்டணங்களும் மிகவும் மலிவானவை.

மேலும் ஆக்ராவின் தெரு உணவுகள் உங்கள் பாக்கெட்டைச் சேமிப்பதோடு மட்டுமல்லாமல், பெரிய உணவகத்தின் உணவைக் காட்டிலும் ருசி நன்றாக இருக்கும்.

ரிஷிகேஷ்

பட்ஜெட்டில் பசுமையான மலைகளையும் அழகான நதிக்கரையையும் அனுபவிக்க விரும்புகிறீர்களா? ரிஷிகேஷ் சிறந்த இடம். கங்கை நதிக்கரையில் உள்ள மலைவாசஸ்தலம் இந்தியாவின் மலிவான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும்.

மலிவான தங்குமிடம், குறைந்த இன்டர்சிட்டி கட்டணம் மற்றும் சுவையான உள்ளூர் உணவுகளுடன், பணம் செலவு அதிகம் இல்லாத இடம் இதுதான்.

திரிவேணி காட், பர்மார்த் நிகேதன், பீட்டில்ஸ் ஆசிரமம் மற்றும் லக்ஷ்மன் ஜூலா ஆகியவை நீங்கள் நிச்சயம் பார்வையிடக்கூடிய பிரபலமான தளங்களாகும்.

நீங்கள் சாகச விளையாட்டுகளை ரசிக்கிறீர்கள் என்றால், மற்ற மலை வாசஸ்தலங்களை விட ரிஷிகேஷ் ஒப்பீட்டளவில் மலிவானது.

வாரணாசி

நீங்கள் ஒரே இடத்தில் ஆனந்தத்தையும், உற்சாகத்தையும் அனுபவிக்க விரும்பினால், வாரணாசிக்குச் செல்லுங்கள்.

வாரணாசி இந்தியர்களை மட்டுமல்ல, வெளிநாட்டினரையும் அதிக எண்ணிக்கையில் ஈர்க்கிறது.

உலகின் பழமையான நகரங்களில் ஒன்றான வாரணாசியில் ஏராளமான மலைத்தொடர்கள் உள்ளன. அது மட்டுமில்லாமல் கலாச்சார ரீதியாக வளமான அனுபவத்தை அளிக்கும்.

தசாஸ்வமேத காட், அசி காட், மணிகர்ணிகா காட், ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் ராம்நகர் கோட்டை ஆகியவை இந்த நகரத்தில் பார்க்க வேண்டிய சில இடங்களாகும்.

நைனித்தால்

நைனித்தால் உத்தரகண்டில் உள்ள ஒரு அழகான இடம். பருவநிலை மாறும்போது வானிலை மிதமாகி பனிமூட்டம் சூழ்ந்திருக்கும். மலைகளால் சூழப்பட்ட நைனி ஜீல் முக்கிய ஈர்ப்பாகும்.

நைனித்தால் குறிப்பாக தம்பதிகளுக்கு, விடுமுறையைக் கழிக்கக்கூடிய மிகவும் மலிவான இடமாகும். அருகாமையே ரயில் நிலையம் உள்ளது. அங்கு ரயில் டிக்கெட் விலை வெறும் 100 ரூபாய் மட்டுமே. மேலும், நைனித்தாலில் மலிவு விலை ஹோட்டல்கள் மற்றும் விருந்தினர் மாளிகைகளுக்கு பஞ்சமில்லை.

நீங்கள் பட்ஜெட்டில் வெப்பத்தை வெல்ல விரும்பினால், நைனித்தால் உங்களுக்கான சிறந்த இடமாகும்.

கோகர்ணா

கர்நாடகாவில் உள்ள கோகர்ணா உங்களுக்கான சிறந்த பட்ஜெட் ஸ்பாட்டாகும்.

இந்த சிறிய நகரம் அதன் அமைதியான கடற்கரைகள் மற்றும் பனை மரங்களால் சூழ்ந்து, பிரமியமாக காட்சியளிக்கிறது.

சீசன் இல்லாத நேரத்தில் நீங்கள் சென்றால், 1000 ரூபாய்க்குள் பிரீமியம் கடற்கரையில் தங்கி மகிழலாம்.

கடற்கரைகள் தவிர, மகாபலேஷ்வர் கோயில், பெரிய நீர்வீழ்ச்சிகள் போன்ற புனித யாத்திரை தலங்களுக்கும் பெயர் பெற்றது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?