சமொசா விற்க வேலையை விட்ட தம்பதி - ஒரு நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா? வைரல் ஸ்டோரி  ட்விட்டர்
இந்தியா

சமோசா விற்க வேலையை விட்ட தம்பதி - ஒரு நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா? வைரல் ஸ்டோரி

Keerthanaa R

ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய் வருமானம் வரும் வேலையை விட்ட இந்த தம்பதியின் இன்றைய ஒரு நாள் வருமானம் ரூ.12 லட்சம்!

இவர்கள் கடந்த 8 ஆண்டுகளாக சமோசா விற்று வருகின்றனர். இதில் தான் இவ்வளவு லாபம் ஈட்டி வருகின்றனர் இந்த தொழில்முனைவோர் தம்பதி.

2015ல் தொடங்கியது இவர்களது சொந்த பிசினஸ் கனவு.

ஷிகர் வீர் சிங் மற்றும் அவரது மனைவி நிதி சிங் பி டெக் பயோடெக்னாலஜி படித்துக்கொண்டிருக்கும்போது முதன் முதலில் சந்தித்தனர்.

காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஷிகர் கல்லூரியில் படித்து வந்த காலத்திலிருந்தே, சமோசா விற்க வேண்டும் என்ற ஆசைக் கொண்டிருந்தாராம். ஆனால், நிதி சிங் அவரை படிப்பின் மீது கவனம் செலுத்த சொல்லியிருக்கிறார்.

படித்து முடித்து இவர்களது வாழ்க்கையும் மாறியது. ஷிகரின் சமோசா பிசினஸ் ஆசையும் மறைந்து போனது

திருமணமாகி ஐந்து ஆண்டுகள் கடந்திருந்த நிலையில் தான் இவர்கள் தங்களது வேலையை விட்டுவிட்டு, முழுவீச்சில் சமோசா பிசினஸ் தொடங்கும் முடிவிற்கு வந்துள்ளனர்.

அதன்படி 2015 ஆம் ஆண்டு இருவருமே வேலையிலிருந்து நின்றனர். எம்டெக் முடித்திருந்த ஷிகர் வீர் சிங் பயோகான் நிறுவனத்தில் பிரிசிபல் சயின்டிஸ்ட் ஆக பணியாற்றி வந்தார். இவரது மனைவி நிதி சிங் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் 17,000 ரூபாய் சம்பளத்திற்கு முதன் முதலில் பணியில் சேர்ந்தார். மெல்ல முன்னேறி, ஆண்டுக்கு 30 லட்சம் சம்பளம் வாங்கும் பதவிக்கு உயர்ந்தார்.

ஒரு நாள், இவர்கள் வெளியில் சென்றிருக்கும்போது ஒரு சிறுவன் சமோசா வேண்டும் என அடம் பிடித்து அழுவதை கவனித்திருக்கிறார் ஷிகர். அந்த தருணம் தான் அவருக்கு மீண்டும் தனது சொந்த பிசினஸுக்கான ஆசையை கிளரிவிட்டிருக்கிறது

வேலையை விட்ட இருவரும், பெங்களூரூவில் சமோசா சிங் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கினர். இவர்களது வியாபாரத்திற்கு பெரிய கிச்சன் தேவைப்பட்டபோது, தங்களது அடுக்குமாடி குடியிருப்பை இவர்கள் விற்றனர்.

அந்த பணத்தில் ஒரு ஃபேக்ட்டரியை வாடகைக்கு எடுத்தனர். பிசினஸுக்கு அங்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஒரு மாதத்திற்கு 30,000 சமோசாக்கள் வரை விற்றனர். மாத வருமானம் 45 கோடி என்கிறது தி வீக்கெண்ட் தளத்தின் அறிக்கை. எனில் சமோசா தம்பதியின் ஒரு நாள் வருமானம் ரூ.12 லட்சம்

தற்போது தங்கள் வியாபாரத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுசெல்ல முடிவெடுத்திருப்பதாக கூறியுள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?