மகாராஷ்டிராவின் சோலாபூர் என்ற இடத்தில் 72 பேர் கொண்ட ஒரு குடும்பம் வாழ்ந்து வருகிறது. இவர்கள் பல வருடங்களாகவே கூட்டுக் குடும்பமாக தான் வாழ்ந்து வருகின்றனர்.
இந்தியாவை மற்ற நாடுகள் வியந்து பார்க்கும் அம்சங்களில் ஒன்று கூட்டு குடும்ப வழக்கம். இப்போதெல்லாம், ஒரே வீட்டில் அம்மா, அப்பா, குழந்தைகள் சேர்ந்து வாழ்ந்தாலே அதை கூட்டு குடும்பம் எனக் கூறிவிடுகின்றனர்.
ஆனால், நம் பாட்டி தாத்தா சொல்லுவது போல ‘அந்த காலத்தில்’ கூட்டு குடும்பங்கள் தான் அதிகமாக இருந்தன. என்ன சண்டை சச்சரவுகள் வந்தாலும், இவர்கள் இணைந்தே வாழ்ந்தனர். காலம் மாற மாற, படிப்பு, வேலை போன்ற பல காரணங்களுக்காக நம் குடும்ப உறுப்பினர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய நிலை உருவாகி வருகிறது.
ஆனால், இன்றளவும் சிலர் அந்த கூட்டு குடும்பம் என்ற பாரம்பரியத்தை பின்பற்றி தான் வருகின்றனர். மகாராஷ்டிராவின் சோலாபூர் என்ற இடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 72 பேர் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். 4 தலைமுறையாக கூட்டு குடும்பமாக வாழ்ந்து வரும் இவர்கள் வர்த்தக நிறுவனம் ஒன்றை குடும்பமாக இணைந்து நடத்தி வருகின்றனர்.
இவர்கள் குடும்பத்தை பற்றி சமீபத்தில் பிபிசி தளத்தில் வீடியோ ஒன்று வெளியானது. அதில் பேசிய அஷ்வின் தோய்ஜோடே என்ற முதியவர், அவர்கள் வீட்டில் பயன்பாட்டிற்காக காலை ஒரு முறை மாலை ஒரு முறை பத்து லிட்டர் பால் வாங்குகிறார்கள். ஒரு நாளுக்கு 15 கிலோ காய்கறி வாங்குகிறார்கள். ஒரு வேளை உணவுக்காக 1000 முதல் 1200 ரூபாய் செலவிடப்படுகிறது.
இதை தவிர அசைவ உணவு சாப்பிடவேண்டும் என்றால், இது போல மூன்று முதல் நான்கு மடங்கு அதிக செலவாகும். “நாங்கள் ஒரு வருடத்திற்கான சாமான்களை வாங்கி சேகரித்து விடுவோம். அரிசி, கோதுமை, பருப்பு போன்றவை 40 முதல் 50 மூட்டைகள் வாங்குகிறோம். அதிக அளவில் வாங்குவதால், மொத்த விலைக்கே வாங்கிவிடுகிறோம்.
தோய்ஜோடே குடும்பத்தின் மருமகள் கூறுகையில் , ”இதே குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு ஏதும் வித்தியாசமாக தெரியாது. ஆனால் வெளியாட்கள் திருமணம் செய்துகொண்டு இங்கு வந்தால், பழகிக்கொள்ள சற்று கடினமாக தான் இருக்கும்” என்றார். முதலில் நானும் இத்தனை நபர்கள் இருப்பதை பார்த்து பயந்தேன், ஆனால், எனக்கு எல்லாரும் உதவினார்கள்.
”நாங்கள் சிறுவயதில் விளையாட தனியாக வெளியே சென்றதில்லை. எங்கள் குடும்பத்தில் நிறைய பேர் இருப்பதால், அவர்களுடன் பழகியதில் வேற்று மனிதர்களுடன் பேச எங்களுக்கு பயமில்லை.”
மேலும், இது நாள் வரை நாங்கள் யாரும் தனிமையை உணர்ந்ததில்லை என்ற அதிதி தோய்ஜோடே, இவர்களுக்குள் மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலும், அதை அனைவருடன் அமர்ந்து பேசி தீர்த்துக்கொள்வார்கள் எனவும் அவர் கூறினார்.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது சரி தானே!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust