சென்னை to சவுதி அரேபியா: கண்டம் விட்டு கண்டம் பைக்கில் செல்லும் பெண் - வாவ் ஸ்டோரி Twitter
இந்தியா

சென்னை to சவுதி அரேபியா: கண்டம் விட்டு கண்டம் பைக்கில் செல்லும் பெண் - வாவ் ஸ்டோரி

அவர் டீலக்ஸ் ஹோட்டல்களிலோ அல்லது விடுதிகளிலோ தங்கவில்லை, மாறாக இரவு வானத்தின் கீழ் வசதியான கூடாரங்கள் அமைத்தும், உள்ளூர்வாசிகளின் வீடுகளிலும் தங்கிருக்கிறார். சில நேரங்களில் பெட்ரோல் பங்க்களில் கூட ஓய்வெடுப்பாராம்.

Priyadharshini R

சென்னையைச் சேர்ந்த ரேஷ்மா காசிம் நூர் தனது கிளாசிக் 350 பைக்கில் இந்தியா முழுவதும் 9000 கிமீ பயணம் செய்துள்ளார். தற்போது தனது பைக்கில் சவுதி அரேபியா பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

ஒரு பயணத்தை மேற்கொள்ளப் பல வழிகள் உண்டு. சாலை, கடல், வான் என எப்படி வேண்டுமானாலும் செல்லலாம்.

சுதந்திர பறவையாகப் பறக்க ஒரு பைக் பயணம் தான் சரி என்று சொல்பவர்களும் உண்டு. அப்படி இந்தியா முழுக்க பைக் பயணம் சென்று வருகிறார் ரேஷ்மா என்ற பெண்மணி.

அவரது பயணம் பெங்களூரில் தொடங்கியது. இந்த பரபரப்பு நகரத்திலிருந்து மகாராஷ்டிரா, குஜராத், பீகார், டெல்லி, உத்தரபிரதேசம் என பல இடங்களுக்கு சென்றிருக்கிறார். ஒவ்வொரு ஊரிலும் அதன் கலாச்சாரம் , உணவு எல்லாவற்றையும் அனுபவித்து தனது பயணத்தை தொடர்கிறார் ரேஷ்மா.

மோட்டார் சைக்கிளில் 9,000 கி.மீ கடந்திருக்கும் அவர், இது வெறும் பயணம் மட்டுமல்ல, அனுபவம் என்கிறார்.

அவர் டீலக்ஸ் ஹோட்டல்களிலோ அல்லது விடுதிகளிலோ தங்கவில்லை, மாறாக இரவு வானத்தின் கீழ் வசதியான கூடாரங்கள் அமைத்தும், உள்ளூர்வாசிகளின் வீடுகளிலும் தங்கிருக்கிறார்.

சில நேரங்களில் பெட்ரோல் பங்க்களில் கூட ஓய்வெடுப்பாராம். அவரது பயணத்தின் நோக்கமே பிற பெண்களின் சுதந்திரத்தை ஊக்குவிப்பது என்கிறார்.

அடுத்ததாக சென்னையில் இருந்து சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் ரேஷ்மா.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?