பெருநகரங்கள் உருவாகையில் கிராமங்களில் இருந்து பிற நகரங்களில் இருந்தும் கொத்து கொத்தாக மக்கள் அங்கு குவிகின்றனர்.
அதீதமான மக்கள் தொகை அங்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது. பக்கத்து பக்கத்தில் கட்டப்பட்ட வீடுகள் காற்றோட்டத்தைத் தடுத்துவிடும். அதிக வாகனங்கள் காற்றை மாசுபடுத்திவிடும்.
சாலையில் நெரிசல் அதிகரித்துவிடும். 15 நிமிடம் செல்ல வேண்டிய பயணம் 1 மணி நேரத்துக்கும் அதிகமாக நீளும். மரங்கள் வெட்டப்படும். அதிகரிக்கும் மக்கள் நெருக்கடி ஒரு நகரத்தை முற்றிலுமாக மாற்றிவிடும்.
அப்படி இந்தியாவில் நெருக்கடி அதிகமான டாப் 10 நகரங்களைத் தான் பார்க்கப்போகிறோம்.
பெங்களூரு ட்ராஃபிப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை ட்ராஃபிக்கால் மொத்த நகரத்துக்கும் பல பிரச்னைகள் ஏற்பட்டிருக்கின்றன. ட்ராஃபிக் பல நிறுவனங்களின் செயல்பாடு குறைய காரணமாக இருக்கின்றது. மருத்துவர்கள் முதல் பல பணியாளர்கள் குறித்த நேரத்துக்கு வேலைக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.
ஒரு நாளில் சில மணி நேரங்களை ட்ராஃபிக்கில் செலவிடுகின்றனர். இது மக்களின் லைஃப் ஸ்டைலை பாதிக்கும்.
மும்பையிலும் சளைக்காத ட்ராஃபிக்கைப் பார்க்கலாம். எந்த இடத்துக்கும் குறித்த நேரத்தைவிட 30 முதல் 60 நிமிடங்கள் முன்பாக புறப்பட வேண்டும். அதிக ட்ராஃபிக் அதிக மாசுபாடுகளுக்கு வழிவகுக்கும். இது நகரவாசிகளின் உடல்நலம் குறித்து கவலைகளை ஏற்படுத்துகிறது.
டெல்லியின் காற்று மாசு குறித்து சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அந்த அளவு மாசுக்கு வாகனங்களில் இருந்து வரும் புகையும் காரணம். டெல்லி ஏன் இந்த நெருக்கடியான நகரங்கள் பட்டியலில் இருக்கிறது என்பது இதிலிருந்தே புரிகிறதா?
முக்கியமான நேரங்களில் அதாவது காலை மக்கள் அனைவரும் அலுவலகம் செல்லும் போதும், வீட்டுக்குத் திரும்பும் போதும் ட்ராஃபிக்கில் மாட்டிக்கொண்டால் கதை கந்தல்தான்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மற்றொரு பெருநகரம் புனே. இங்கும் மும்பையைப் போல மாசுபாடும், போக்குவரத்து நெரிசலும் இருக்கும்.
ஹைத்ராபாத்தும் அதிக நெருக்கடி காணப்படக்கூடிய நகரங்களில் ஒன்றாக உள்ளது. நெருக்கடி காரணமாக ஹைத்ராபாத்தில் தாமதமாக வருவதென்பது இயல்பானதாகவிட்டது.
சென்னை
சென்னை ட்ராஃபிக் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்த ட்ராஃபிக்கில் எங்கே சென்றாலும் சாலையில் திணறுவது நிச்சயம். அதிலும் முக்கியமான நேரங்களில் சொல்லவேத் தேவையில்லை.
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். இங்கு அதிக மாசுபாடு உள்ளதால் தங்கியிருக்கும் மக்கள் சுகாதாரமற்ற வாழ்க்கை முறையை கடைபிடிக்கும் நிலை இருக்கிறது.
குஜராத் தலைநகர் சூரத்தும் அதிக நெருக்கடி நிறைந்த நகரமாகும். இங்கும் மாசுபாடு காரணமாக சுகாதாரமற்ற நிலை உள்ளது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் மக்கள் கூட்டம் ஒருபோதும் குறைவதில்லை.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust