உலகின் பணக்கார குடும்பங்கள் பட்டியலில் இருக்கும் ஒரே இந்திய குடும்பம் - சொத்து மதிப்பு? Twitter
இந்தியா

உலகின் பணக்கார குடும்பங்கள் பட்டியலில் இருக்கும் ஒரே இந்திய குடும்பம் - சொத்து மதிப்பு?

இந்த ஆண்டுக்கான டாப் 10 பணக்கார குடும்பங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. உலகின் பணக்கார குடும்பங்களின் பட்டியல் குறித்தும், இதில் இடம் பெற்ற இந்திய குடும்பம் குறித்தும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Priyadharshini R

உலகின் பணக்கார குடும்பங்களின் பட்டியல் சர்வதேச அளவில் ஃபோர்ப்ஸ் மற்றும் பிற வணிக இதழ்களால் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான டாப் 10 பணக்கார குடும்பங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

தொழில்நுட்பம், சில்லறை வணிகம் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் இவர்கள் வருவாய் ஈட்டி வருகின்றனர்.

இந்தியா என்று எடுத்துக்கொண்டால் அம்பானி, அதானி என்போம். ஆனால் உலகளவில்... இந்த பதிவில், உலகின் பணக்கார குடும்பங்களின் பட்டியல் குறித்து தெரிந்துகொள்ளபோகிறோம்.

வால்டன் குடும்பம் - $247 பில்லியன்

வால்டன் குடும்பம் 242 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் பணக்கார குடும்பமாக அறியப்படுகிறது. இந்த குடும்பம் அமெரிக்காவைச் சேர்ந்தது.

இக்குடும்பம் சர்வதேச சில்லறை விற்பனையகமான வால்மார்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறது.

அரச குடும்பத்தைச் சேராத உலகின் பணக்கார குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ஸ் குடும்பம்

2வது இடத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல சாக்லேட் நிறுவனமான மார்ஸ் நிறுவனத்தை நடத்திவரும் மார்ஸ் குடும்பம் உள்ளது. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு சுமார் $150 பில்லியன் டாலர்.

கோச் குடும்பம்

இந்த பட்டியலில் 3வது இடத்தில், அமெரிக்காவின் இரண்டாம் பெரிய தனியார் நிறுவனமான கோச் நிறுவனத்தை நடத்திவரும் கோச் குடும்பம் இருக்கிறது. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 124 பில்லியன் டாலர்.

ஹெர்ம்ஸ் குடும்பம்

$112 பில்லியன் மொத்த நிகர மதிப்புடன், ஹெர்ம்ஸ் குடும்பம் 2023 இல் உலகின் முதல் 10 பணக்கார குடும்பங்களில் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.

1837 இல் நிறுவப்பட்ட ஒரு பிரெஞ்சு நிறுவனமாகும். இது தோல் பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள், வாசனை திரவியங்கள், நகைகள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பல பொருட்களின் பிராண்டாக உள்ளது.

அல் சவூத் குடும்பம்

ஐந்தாவது இடத்தில் சவுதியின் அரச குடும்பமான அல் சவூத் குடும்பம் உள்ளது. இக்குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 100 பில்லியன் டாலர்.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான சவுதி அராம்கோ, இந்த குடும்பத்தின் செல்வத்தின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாகும்.

உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 94 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டிய முதல் இந்திய நிறுவனம் ஆகும்.

6வது இடத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை நடத்திவரும் அம்பானி குடும்பம் உள்ளது. டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே இந்தியக் குடும்பம் அம்பானி குடும்பம்தான்.

7வது இடத்தில் பிரான்ஸைச் சேர்ந்த பிரபல ஆடை நிறுவனமான சேனலின் வர்தைமர் குடும்பம் உள்ளது. இவர்களின் சொத்து மதிப்பு சுமார் 62 பில்லியன் டாலராகும்.

புகழ்பெற்ற மருந்து நிறுவனமான ஜான்சன் & ஜான்சனின் உரிமையாளர்கள், ஜான்சன் குடும்பம் பணக்கார குடும்பங்களின் பட்டியலில் ஜான்சன் குடும்பம் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவர்களின் சொத்து மதிப்பு சுமார் 61 பில்லியன் டாலராகும்.

61 பில்லியன் மொத்த நிகர மதிப்புடன், தாம்சன் குடும்பம் இந்த பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

10 வது இடத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த போஹெரிங்கர், வான் பாம்பாக் குடும்பம் உள்ளது. இக்குடும்பம் போஹெரிங்கர் இங்கெல்ஹெய்ம் என்கிற நிறுவனத்தை நடத்திவருகிறது. இதன் மொத்த சொத்து மதிப்பு சுமார் 59 பில்லியன் டாலர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?