Top 5 Upcoming Biggest Space Missions In 2023 Twitter
இந்தியா

சந்திரயான் முதல் ககன்யான் வரை: சாதனை படைக்க தயாராகும் இஸ்ரோ- என்னென்ன விண்வெளி திட்டங்கள்?

2023ல் திட்டமிடப்பட்டுள்ள மிகப் பெரிய விண்வெளி பயணங்கள் என்ன என்பது குறித்து காணலாம்.

Priyadharshini R

சந்திரயான்-3, ககன்யான் விண்கலங்கள் உட்பட அறிவியல் சோதனைகள் பலவற்றை இந்தாண்டு மேற்கொள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது.

அப்படி 2023ல் திட்டமிடப்பட்டுள்ள மிகப் பெரிய விண்வெளி பயணங்கள் என்ன என்பது குறித்து காணலாம்.

சந்திரயான்-3

சந்திரயான்-3 என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) மூன்றாவது சந்திர ஆய்வுப் பணியாகும்.

இது இந்த ஆண்டு ஜூன் மாதம் GSLV Mk-III ( Geosynchronous Satellite Launch Vehicle Mark III) இல் ஏவப்பட உள்ளது. இது சந்திரயான்-2 பணியின் தொடர்ச்சி என கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே நிலவில் மெதுவாக தரையிறங்குவதில் சந்திரயான்-2 தோல்வியடைந்தது. முந்தைய இரண்டு பயணங்களை விட நீடித்ததாக இருக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

space

ககன்யான்

இந்தியாவின் இஸ்ரோ ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதன் பகுதியாக இந்த ஆண்டு முதல் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளது. எனினும் 2024 இறுதியில் அல்லது 2025 தொடக்கத்தில் வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ககன்யான் திட்டமானது மூன்று நபர்களைக் கொண்ட குழுவினரை 400 கிலோமீட்டர் சுற்றுப்பாதையில் மூன்று நாள் பயணத்திற்கு அனுப்புவதையும், அவர்களைப் பாதுகாப்பாக பூமிக்குத் திருப்பி அனுப்புவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஒசைரிசு-ரெக்சு ( OSIRIS-REx )

நாசாவின் OSIRIS-Rex என்பது சிறுகோள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுவதாகும்.

பூமிக்கு அருகில் உள்ள சிறுகோளான 101955 "பென்னு" விலிருந்து குறைந்தபட்சம் 60 கிராம் மாதிரியை சேகரித்து முழுமையான பகுப்பாய்வுக்காக பூமிக்கு கொண்டு வருவதே இந்த பணியின் முக்கிய நோக்கமாகும்.

Reusable Launch Vehicle Test

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுகணை வாகன (Reusable Launch Vehicle) ரன்வே லேண்டிங் சோதனையை நடத்த திட்டமிட்டுள்ளது.

விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்டுகள் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்திய பிறகு வெடித்துச் சிதறி கடலில் விழுந்து வீணாகி விடுவது வழக்கம்.

பலகோடி செலவில் உருவாக்கப்படும் ராக்கெட்டுக்கள் இவ்வாறு வீணாவதை தவிர்க்க அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா மறு பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கூடிய ராக்கெட்டுக்களை பயன்படுத்துகிறது.

இதே போன்று மறுபயன்பாட்டிற்கு ராக்கெட்டுக்களை கொண்டு வரும் சோதனையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இறங்கியுள்ளது.

ஜூஸ் மிஷன்

ஜூபிட்டர் ஐசி மூன்ஸ் எக்ஸ்ப்ளோரர் மிஷன் ஏப்ரல் 2023 இல் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியால் (ESA) தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வியாழன் (Jupiter) மற்றும் அதன் மூன்று நிலவுகளான கேனிமீட், காலிஸ்டோ மற்றும் யூரோபாவை ஆய்வு செய்ய ஜூபிட்டர் ஐசி மூன்ஸ் எக்ஸ்ப்ளோரர் (JUICE) மிஷன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

வியாழன் குறித்து ஆழமாக ஆராய்ந்து, அதன் அமைப்பைப் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது.

JUICE மிஷன் ஏப்ரல் 13-ம் தேதி ஐரோப்பாவின் ஸ்பேஸ்போர்ட்டின் பிரெஞ்சு கயானாவில் உள்ள குரோவில் இருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?