Travel gift ideas for women who love to explore Twitter
இந்தியா

பயணம் செய்ய விரும்பும் பெண்களுக்கு இந்த பொருட்களை Gift ஆக கொடுக்கலாம் - என்னென்ன?

Priyadharshini R

பயணம் என்பது ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் விருப்பமாக செய்யும் ஒரு விஷயமாக மாறிவிட்டது. பெண்கள் தற்போது சோலோ ட்ரிப்பை விரும்புகிறார்கள். தன்னந்தனியாக நீண்ட பயணத்திற்கு செல்ல தயாராகின்றனர்.

அவர்களை மகிழ்வாக குடும்பங்களும் நண்பர்களும் வழி அனுப்பி வைக்கின்றனர். அதனுடன் அவர்களுக்கு பயணத்தின் போது பயனுள்ள வகையில் இருக்கும் பொருட்களை பரிசாக கொடுத்தால், பயணம் எவ்வளவு இனிதாகும்.

என்ன பரிசு கொடுக்கலாம் என்று உடனே மண்டைக்குள் ஒடுகிறதா? கவலை வேண்டாம், பெண் பயண காதலர்களுக்கு பயனுள்ள சிறந்த பரிசுகள் குறித்து உங்களுக்கு தொகுத்துள்ளோம்.

சிப்பர்

பயணத்தின் போது நீரேற்றத்துடன் இருப்பது முக்கியம். தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்வது அவசியம்.

சிப்பர் பாட்டில்கள் மலைகள் வழியாக மலையேற்றம் செய்பவர்களுக்கு அல்லது வறண்ட பாலைவனங்களை ஆராய்வோருக்கு ஒரு சிறந்த தேர்வாகும்.

பவர் பேங்க்

இன்றைய உலகில், நாம் தொலைபேசிகள், டேப்லெட்டுகள் மற்றும் பிற மின்னணு சாதனங்களை பெரிதும் நம்பியுள்ளோம்.

குறிப்பாக பயணத்தின் போது, மறக்கமுடியாத தருணங்களை படம்பிடிக்க அல்லது அன்பானவர்களுடன் தொடர்பில் இருக்க, இந்த சாதனங்களில் தேவையான சார்ஜ் வைத்திருப்பது முக்கியம்.

பவர் பேங்க் என்பது எந்தவொரு பயணிக்கும் சரியான பரிசாகும்.

ட்ராவல் பில்லோ

பயணத்தின் போது சிறிது ஓய்வு பெற விரும்புவோருக்கு மிகவும் தேவையான ஒரு பொருளாக இந்த ட்ராவல் பில்லோ உள்ளது. குறிப்பாக விமான பயணத்தின் போது இந்த தலையணைகள் பயணிகளுக்கு அதிக பலனை அளிக்கிறது.

லக்கேஜ் ஸ்கேல்

லக்கேஜ் ஸ்கேல் டச்சியான பரிசாக இல்லாவிட்டாலும், நீங்கள் அவர்களுக்கு வழங்கக்கூடிய மிகவும் பயனுள்ள பரிசுகளில் இதுவும் ஒன்றாகும்.

ஒரு லக்கேஜ் ஸ்கேலை பரிசாக வழங்குவது உங்கள் அன்புக்குரியவரின் பயணத்தின் போது நேரம், பணத்தை சேமிக்க உதவும்.

ட்ராவல் அடாப்டர்

பயணம் செய்ய விரும்பும் உங்கள் நண்பருக்கு ஒரு சர்வதேச பயண அடாப்டரை வழங்குங்கள். காரணம், இந்தியாவிலிருப்பது போன்ற பிளக் பாயின்ட்கள் எல்லா நாடுகளிலும் இருக்காது.

வெளிநாட்டில் விடுமுறையை கழிக்கும் போது அவர்களின் சாதனங்களை சார்ஜ் செய்ய வேண்டியிருக்கும். அப்போது ட்ராவல் அடாப்டர் எளிதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

பேக் பேக்

எந்த ஒரு தனிப் பயணத்திற்கு இன்றியமையாத பொருளாக பேக் இருக்கிறது. உடைகள் முதல் தின்பண்டங்கள் வரை அனைத்தையும் சேமித்து வைக்கும் உதவியாக இருக்கிறது.

ஹைக்கிங் மற்றும் மலை ஏறுதல் போன்ற செயல்களுக்கு முதுகுப்பை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பரிசுகள் நிச்சயமாக ஒருவரின் பயணத்தின் போது பயனுள்ளதாக இருக்கும். இந்தப் பொருட்களைப் பரிசளிப்பதன் மூலம், உங்கள் அன்புக்குரியவர்கள் அதிக வசதியுடன் பயணிக்க முடியும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?