statue of sister Twitter
இந்தியா

விபத்தில் இறந்த தங்கைக்கு சிலை வைத்து ரக்ஷா பந்தன் கொண்டாடிய சகோதரர்கள் - எங்கே?

Priyadharshini R

இரண்டு சகோதரர்கள், விபத்தில் உயிரிழந்த தனது தங்கைக்கு சிலையை வைத்து ரக்ஷா பந்தன் கொண்டாடிய நெகிழ்ச்சி சம்பவம் ஆந்திர பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

சகோதரர் சகோதரிகளுக்கு இடையேயான உறவு, பந்தம் பிரிக்க முடியாதது. தங்களை விட்டுப் பிரிந்த சகோதரர் அல்லது சகோதரி நினைவாக பல்வேறு இடங்களில் அவர்களுக்கு மெழுகு சிலை வைக்கின்றனர்.

Raksha Bandhan

பண்டிகை, பிறந்தநாள், வீட்டில் நடக்கும் விசேஷங்களில் எல்லாம் இறந்து போனவர் இல்லையே என நினைத்து ஆதங்கப்படுவார்கள்.

அப்படிப்பட்ட சமயங்களில் அவர்களின் உருவத்தை மெழுகு சிலைகளாக தத்ரூபமாக கண்முன் கொண்டு வந்தது போன்ற உருக்கமான செய்திகளும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

அந்தவகையில் ஆந்திரப் பிரதேசம் காக்கிநாடா மாவட்டம் கத்திபுடி கிராமத்தைச் சேர்ந்த சிவா மற்றும் ராஜா ஆகிய இரண்டு சகோதரர்கள், ஏழு மாதங்களுக்கு முன் இறந்த தங்கையின் சிலையை வைத்து ரக்ஷா பந்தன் கொண்டாடியுள்ளனர்.

இதற்காக இரண்டு சகோதரர்களும் தங்களுடைய சகோதரி மணியின் மெழுகு சிலைக்காக 1.5 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளனர்.

இதே போல ராஜஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர், ராணுவத்தில் பணியாற்றி உயிர் தியாகம் செய்த தனது சகோதரரின் சிலைக்கு ராக்கி கட்டி ரக்ஷா பந்தன் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?