ஷாலினி சவுஹான் twitter
இந்தியா

அஜித் பட பாணியில் ராக்கிங் செய்பவர்களை கண்டுபிடிக்க காலேஜ் மாணவியான பெண் காவலர் - எங்கே?

Keerthanaa R

ராக்கிங்கில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை Under Cover -யில் சென்று பிடித்துள்ளார் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பெண் காவலர் ஒருவர்.

கல்லூரிகளில் ராக்கிங் என்ற விஷயத்தை சந்திக்காமல் தப்பித்தவர்கள் வெகு சிலரே. ‘நட்புக்கு ராக்கிங் கூட பாதை வகுக்கும்” என்று பாடினாலும், அதனால் ஏற்படும் ஆபத்துகள் அதிகம். சிலர் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு இந்த ராக்கிங் அவர்களுக்கு மன உளைச்சலை அளித்திருக்கிறது.

இதனால் நாடு முழுவதுமே ராக்கிங்கிற்கு எதிராக கடும் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. எனினும், அவ்வப்போது பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ராக்கிங் குற்றச்சாட்டுகள் எழுந்துக்கொண்டு தான் இருக்கின்றன.

இதனை கையாள மத்திய பிரதேச காவல்துறை மேற்கொண்ட யுக்தி பாராட்டுகளை பெற்று வருகிறது.

மத்திய பிரதேசத்தின் மகாத்மா காந்தி மெம்மோரியல் மருத்துவ கல்லூரியில் ராக்கிங் நடப்பதாக பெயர் குறிப்பிடாத சில மாணவர்கள் புகார் அளித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து ஷாலினி சவுஹான் என்ற 24 வயது பெண் காவலர், அந்த கல்லூரிக்கு மாணவியை போல சென்றிருக்கிறார்.

சுமார் மூன்று மாதங்கள் கல்லூரிக்கு செல்லும் மாணவி போல அங்கு சென்று மாணவ மாணவிகளின் நடவடிக்கைகளை கண்காணித்திருக்கிறார்.

இந்த மூன்று மாதங்களில் ராக்கிங்கில் ஈடுபட்ட 11 மாணவர்களை அடையாளம் காண உதவியுள்ளார் காவலர் ஷாலினி. ராக்கிங் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவர்கள் பெரும்பாலும் முதலாம் ஆண்டு மாணவர்கள் தான்.

இந்த மிஷனை பற்றி எண்டிடிவி செய்தி நிறுவனம், காவலர் ஷாலினி மற்றும் உயரதிகாரி தெஹசீப் காசி ஆகியோரிடம் பேசியது.

அப்போது பேசிய காவலர்கள், மருத்துவ கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்கள் சிலர் தாங்கள் ராக்கிங் செய்யப்படுவதாக புகார் அளித்ததாக கூறினர். தலையணையுடன் உடலுறவு கொள்ளும்படி அவர்களை வற்புறுத்தியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், பயத்தினால் யார் தங்களை இவ்வாறு செய்ய கூறினார்கள் என்ற பெயரை குறிப்பிடவில்லை. முதலில் கல்லூரிக்கு காவலர்கள் சென்று விசாரித்துள்ளனர். காவலர் சீருடையில் அவர்களை பார்த்ததும் மாணவர்கள் யாரும் முன்வந்து புகாரளிக்கவில்லை என தெரிவித்தது காவல் துறை.

இதனால் தான் இந்த ரகசிய திட்டத்தை அவர்கள் கையாண்டுள்ளனர்.

இது குறித்து பேசிய ஷாலினி, “நானும் மற்ற மாணவர்களைப்போல தினமும் கல்லூரிக்கு செல்வேன். அவர்களிடம் கேண்டீனில் உட்கார்ந்து பேசுவேன்.

மெல்ல அவர்களும் என்னோடு பேசத் தொடங்கினர். அவர்களை பற்றி பகிர்ந்துகொண்டனர். இது எனக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது.” என்றார்

மாணவர்களில் யாரும் தங்களை அடையாளம் காணவில்லையா எனக் கேட்டப்போது, ”சில சமயங்களில் அவர்கள் கேட்டிருக்கிறார்கள். ஆனால் நான் சாதுர்யமாக பேச்சை மாற்றிவிடுவேன். மாணவி போல தோற்றமளிக்க நான் மிகவும் பாடுபட்டேன். என் பையில் புத்தங்கள் இருக்கும். சுடிதார் அணிந்து மாணவிகளுடன் மாணவியாகவே இருந்தேன்” என்கிறார் ஷாலினி.

காவல்துறையின் இந்த செயலை பாராட்டி பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ராக்கிங்கில் ஈடுபட்ட மாணவர்களை விடுதியில் இருந்து வெளியேற்றி, மூன்று மாதங்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது கல்லூரி நிர்வாகம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?