Sleep Pexels
இந்தியா

900 மணி நேரம் உறங்கி 6 லட்சம் ரூபாய் வென்ற பெண் - எங்கே?

இரவில் கண்விழித்து, பகலில் ஒரு நாளைக்கு 9 மணி நேரம் வீதம், 100 நாட்களுக்கு உறங்கி போட்டியை வென்ற அவர், 6 லட்சம் ரூபாய் பரிசு தொகையையும் வென்றிருக்கிறார்

Keerthanaa R

மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் ஒருவர், ஒரு நாளைக்கு 9 மணி நேரம் உறங்கி புதிய சாதனையை படைத்துள்ளார்.

மனிதர்கள் சராசரியாக 8 மணி நேரம் உறங்கவேண்டும் என பலர் சொல்லி கேட்டிருப்போம். இது மனிதனின் வயதுக்கு ஏற்ப மாறலாம்.

அறிவியல் சொல்வதும், ஆரோக்கியமும் ஒரு புறம் இருக்கட்டும். தூக்கம் என்பது நம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. மனதில் என்ன குழப்பம் இருந்தாலும், அல்லது அலுப்பு, உடல் சோர்வு, என எது இருந்தாலும், கொஞ்சம் உறங்கி எழுந்தால் எல்லாம் தெளிவாகிவிடும். சிலருக்கு உறங்குவதே ஒரு ஹாபியாக இருக்கும்.

Sleep

இப்படி மனதிற்கு நெருக்கமான, உடல் நலத்திற்கும் முக்கிய செயலான உறக்கத்தை வைத்து உலகெங்கிலும் போட்டிகளும் நடக்கும். இங்கு அந்த போட்டியில் பங்கேற்று, உறக்கத்தில் புதிய சாதனையை படைத்திருக்கிறார் மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் ஒருவர்.

மேற்கு வங்கத்தை சேர்ந்த த்ரிபர்னா சக்கரவர்த்தி என்ற பெண் ஒரு நாளைக்கு 9 மணி நேரம் வீதம், 100 நாட்களுக்கு உறங்கி புதிய ரெக்கார்ட் படைத்துள்ளார். தகவலின்படி, இந்த போட்டி இந்தியளவில் நடத்தப்பட்டிருக்கிறது.

deep sleep

இப்போட்டியில் 4.5 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களில் அடுத்தக் கட்டத்திற்கு 15 பேர் மட்டுமே தேர்வாகினர்.

அந்த 15 பேரில் 4 பேர் இறுதிச் சுற்றுக்கு சென்றனர். இறுதிச் சுற்றுக்கு தேர்வான நால்வருக்கும் ஒரு மெத்தை மற்றும் உறக்கத்தை கண்காணிக்க Sleep Tracker உம் வழங்கப்பட்டது. டிராக்கரில் பதிவான தரவுகளை வைத்து, இறுதிச் சுற்றில் வென்றிருக்கிறார் த்ரிபர்னா.

இந்த போட்டிக் குறித்து இணையதளம் ஒன்றில் படித்ததாக கூறிய அவர், இரவில் முழித்திருந்து விட்டு பகலில் உறங்கியதாக தெரிவித்தார். இப்படி 100 நாட்களுக்கு, ஒரு நாளைக்கு 9 மணி நேரம் உறங்கி, போட்டியில் வென்றுள்ள த்ரிபர்னா, 6 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக பெற்றிருக்கிறார். கிடைத்த பரிசு தொகையை வைத்து தனக்கு விருப்பமானவற்றை வாங்கப் போவதாக கூறினார்.

அமெரிக்காவை மையமாக கொண்ட நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார் த்ரிபர்னா. அதனால், அந்நாட்டு நேரத்திற்கு ஏற்றவாறு இரவில் கண்விழித்து, பகலில் உறங்கியுள்ளார் இவர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?