இந்திய ரூபாய் நாணயங்களில் இருக்கும் குறியீடுக்கு காரணம் என்ன? Canva
இந்தியா

இந்திய ரூபாய் நாணயங்களில் இருக்கும் குறியீடுக்கு காரணம் என்ன? | Explained

இந்த உலோக நாணயங்கள் இந்தியாவில் நான்கு இடங்களில் தயாரிக்கப்படுகின்றன. நாணயங்கள் நொய்டா, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் மும்பையில் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை Security Printing and Minting Corporation of India தயாரிக்கின்றன

Keerthanaa R

இந்திய ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கம்.

நாம் பயன்படுத்தும் இந்த பணம், ரிசர்வ் வங்கி அங்கீகாரத்தை பெற்று வெளியிடப்படுவது என நாம் அறிவோம். எந்தெந்த ரூபாய் தாள்கள் புழக்கத்தில் இருக்கவேண்டும் என்பதை நிர்ணயிப்பது ரிசர்வ் வங்கி தான்.

இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக்கில் அச்சடிக்கப்படுகின்றன. 1950 முதல் இந்திய ரூபாய் நோட்டுகளும் நாணயங்களும் அச்சடிக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் புதிய நாணயங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்திய ரூபாய் நாணயங்கள்

தற்போது புழக்கத்தில் ஒன்று, இரண்டு, ஐந்து, பத்து மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் நம் கைகளில் இருக்கின்றன. இவற்றை தவிர சிறப்பு தருணங்களில், நினைவு நாணயங்களாக, ரூபாய் 25, 50, 75, 100, 500 ஆகியவை உற்பத்தி செய்யப்படும்.

இதில் முக்கிய மனிதர்களின் முகங்கள், 75வது சுதந்திர தினத்தின் சிறப்பு, இந்தியாவின் முக்கிய நினைவுச்சின்னங்கள் உள்ளிட்டவை அச்சிடப்படுகிறது

சரி இதுவெல்லாம் தெரிந்த கதை தானே? ஏன் இவற்றைப்பற்றி இங்கு சொல்லுகிறீர்கள் என்றால், இந்த பதிவில் சொல்லப்போகும் விஷயத்துக்கான முன்னுரை தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள்.

இந்த சில்லறை காசுகள் நம் அன்றாட வாழ்க்கையில் மிக முக்கியமானவை. இந்த நாணயங்கள் துருப்பிடிக்காத எஃகு நாணயங்கள் ஆகும்.

இந்த உலோக நாணயங்கள் இந்தியாவில் நான்கு இடங்களில் தயாரிக்கப்படுகின்றன. நாணயங்கள் நொய்டா, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் மும்பையில் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை Security Printing and Minting Corporation of India தயாரிக்கின்றன

இதனால், இந்திய நாணயங்களில் ஒரு ஒரு விதமான குறியீடு இருக்கும், இதனை வைத்து எந்த இடத்தில் இவை தயாரிக்கப்படுகின்றன என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். இந்த குறியீட்டை mint marks எனக் கூறுவோம் . நாணயங்கள் அச்சிடப்படும் ஆலயத்தை தான் மிண்ட் என குறிப்பிடுகிறோம்

இந்த குறியீடானது நாணயத்தின் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும். இதனை நீங்கள் கவனித்திருக்கலாம், அதன் பின்னிருக்கும் பொருள் இது தான்

என்னென்ன குறியீடு?

  • புள்ளி

  • நட்சத்திரம்,

  • டைமண்ட்

  • எந்த குறியீடும் இல்லை

என்ன பொருள்?

உங்களிடம் இருக்கும் நாணயத்தில் ஒரு புள்ளி இருந்தால் அவை டெல்லியில் தயாரிக்கப்படும் நாணயங்கள். இது 1984ல் தொடங்கப்பட்டது

நட்சத்திர வடிவம் இருந்தால் அவற்றின் அச்சிடம் ஹைதராபாத். இது 1903 நிஜாம் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது

டைமண்ட் வடிவம் இருந்தால் அவை மும்பையிலிருந்து வருபவை. இவற்றில் சில சமயங்களில் பி அல்லது எம் என்கிற குறியீடும் இருக்கும். இந்த மிண்ட் 1829ல் நிறுவப்பட்டது

இதுவே எந்த குறியீடும் இல்லாமல் இருந்தால் அவை கொல்கத்தா ஆலயத்தை சேர்ந்தவையாகும். கொல்கத்தா மிண்ட் 1757ல் நிறுவப்பட்டது

இப்படியாக இந்திய ரூபாய் நோட்டுகளிலும், நாணயங்களிலும் ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?