பாண்டிச்சேரி இல்லை; இந்தியாவிலேயே குறைந்த விலையில் மது விற்பனையாகும் இடம் எது தெரியுமா?  Twitter
இந்தியா

பாண்டிச்சேரி இல்லை; இந்தியாவிலேயே குறைந்த விலையில் மது விற்பனையாகும் இடம் எது தெரியுமா?

Priyadharshini R

இந்தியாவில் எங்கு மது குறைந்த விலையில் கிடைக்கும் என கேட்டால் உடனே நம்முடைய பதில் பாண்டிச்சேரியாக தான் இருக்கும். மதுவுக்கு குறைந்த வரி விதிக்கப்படுவதால் பாண்டிச்சேரியில் குறைந்த விலைக்கு மது கிடைக்கிறது.

ஆனால் சமீபத்தில் ஆய்வில் இந்தியாவிலேயே கோவாவில்தான் மிக மிக குறைந்த விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு காரணம் பாண்டிச்சேரியை விடவும் கோவாவில் மதுபான பாட்டில்களுக்கு மிகக்குறைந்த வரி விதிக்கப்படுகிறது.

கோவாவில் ரூ.100க்கு விற்பனையாகும் மது பாட்டில் கர்நாடகாவில் ரூ.513-க்கும், தெலங்கானாவில் ரூ.246க்கும், மகாராஷ்ராவில் ரூ.226-க்கும், ராஜஸ்தானில் ரூ.213-க்கும் , உத்தர பிரதேசத்தில் ரூ.197-க்கும், ஹரியானவில் ரூ.147-க்கும், டெல்லியில் ரூ.134 க்கும் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடகாவில் மது பாட்டில்களுக்கான வரி மிக மிக அதிகமாகும். பல்வேறு உள்ளூர் வரிகளின் காரணமாக டெல்லி மற்றும் மும்பை இடையே பிரபலமான ஸ்காட்ச் பிராண்டுகளுக்கு 20%க்கும் அதிகமான விலை ஏற்றம் உள்ளது.

டெல்லியில் 3,100 ரூபாய் விலையுள்ள பிளாக் லேபிளின் ஒரு பாட்டில், மும்பையில் கிட்டதட்ட ரூ.4,000 ஆக உள்ளது.

இது மட்டுமின்றி வரி வித்தியாசம் காரணமாக சட்ட விரோதமான முறையில் குறைவான வரி விதிக்கப்படும் பகுதிகளில் இருந்து அதிக வரி விதிக்கப்படும் பகுதிக்கு மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் மது பாட்டில் விலை மாறுபடுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?