மாதங்கி ஹஸ்ரா twitter
இந்தியா

மாதங்கி ஹஸ்ரா : 73 வயது முதியவரை கண்டு அஞ்சிய பிரிட்டன் அரசு - ஒரு வீரமிகு கதை

Keerthanaa R

இந்தியாவை பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுவித்து சுதந்திரம் அடைய போராடியவர்களில் கணிசமான எண்ணிக்கையில் பெண்களும் உண்டு.

ராணி லக்ஷ்மி பாய், சரோஜினி நாயுடு, ஆன்னி பெசண்ட், கேப்டன் லக்ஷ்மி சாகல் போன்ற பெயர்களை நாம் இந்த பட்டியலில் அடிக்கடி உச்சரித்திருப்போம். ஆனால், அறியப்படாத சில பெண் சுதந்திரப் போராட்ட தியாகிகளும் உள்ளனர். அவர்களில் ஒருவர் மாதங்கி ஹஸ்ரா. இவரை பெண் காந்தி என்றும் வரலாறு குறிப்பிடுகிறது.

யார் இவர்? இந்திய சுதந்திரத்துக்காக இவரின் தியாகங்கள் என்ன? இவர் உயிர்நீத்த கதை என்ன?

One Year of News Sense

இளம் வயதிலேயே விதவை

மேற்கு வங்கம் தம்லுக் மாவட்டம், மிட்னாபூர் என்ற இடத்தில், ஒரு ஏழைக் குடும்பத்தில் 19 அக்டோபர் 1870 ஆம் ஆண்டில் பிறந்தவர் மாதங்கி ஹஸ்ரா. இவருக்கு இல்லத்தில் வைத்த பெயர் மாதங்கி மைதி.

குடும்ப சூழல் காரணமாக, 12 வயதே ஆன சிறுமி மாதங்கி, ஒரு 60 வயது முதியவருக்கு மணம் முடிக்கப்பட்டார். இவரது கணவர், திரிலோச்சன் ஹஸ்ரா, வயது மூப்பு காரணமாக சில காலத்திலேயே உயிரிழக்க, 18 வயதில் விதவையானார் மாதங்கி. இவருக்கு குழந்தைகள் யாரும் இல்லை.

மீண்டும் வீடு திரும்பிய மாதங்கி, தனது கிராமத்தில் வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உதவிபுரிய தொடங்கினார்

திருப்புமுனை:

இவர் பிறந்து வாழ்ந்த காலம், இந்திய தேசம் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்தியாவின் சுதந்திர தாகம் இவருக்குள்ளும் இருந்தது. 1905ஆம் ஆண்டில், தனது 35வது வயதில் முதன்முதலில் சுதந்திர போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார் மாதங்கி.

இவரது கிராமமான மிட்னாபூரில் சுதந்திர போராட்டங்கள் நடைப்பெற்றன. இதில் பெரும்பாலும் பெண்களே பங்கெடுத்து போராடினர் என்கிறது வரலாறு. அவர்களில் மாதங்கியும் ஒருவர்.

ஜனவரி மாதம் 26 ஆம் தேதி, 1932. (இது அந்நாளில் இந்தியாவின் சுதந்திர தினமாக அனுசரிக்கப்பட்டது). இந்த நாள் தான் மாதங்கியின் வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது.

இவரது கிராமத்தை சேர்ந்த ஆண்கள், அப்போதைய அரசியல் சூழல் குறித்த விழிப்புணர்வு போராட்டம் ஒன்றை நடத்தினர். அதில் மாதங்கியும் ஒரு அங்கமாக பங்கேற்றார்.

Matangi spinning Khadi (rep)

காந்தி புரி (பெண் காந்தி) என்றழைக்கப்பட்ட மாதங்கி

மாதங்கி ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொள்ள முக்கிய உந்துகோலாக இருந்தவர், தேசத் தந்தை மகாத்மா காந்தி. காந்தியின் அகிம்சை முறை கொள்கைகளால் மிகவும் ஈர்க்கப்பட்டவர், தானும், வன்முறை வழிகளை ஏற்க மறுத்தார்.

வெளிநாட்டு உபகரணங்களை பயன்படுத்த மறுத்தார். காந்தியைப் போலவே தனது ஆடைகளை கைத்தறியில் தானே தயாரித்துக்கொண்டார்

சட்டமறுப்பு இயக்கம் (civil disobedience movement), ஒத்துழையாமை இயக்கம் (Non Cooperation Movement), உப்பு சத்தியாகிரகம் (salt satyagraha movement) ஆகியவற்றில் முக்கிய அங்கமாக திகழ்ந்தார்.

முக்கியமாக, உப்பு சத்யாகிரக போராட்டத்தின்போது, இவர் அலினன் கிராமத்தில் உப்பு தயாரிக்கும் தொழிற்சாலையில் உப்பு தயாரித்தார். இது ஆங்கிலேயர்களின் கோபத்தை தூண்ட, கைது செய்யப்பட்டார் மாதங்கி.

கைது செய்து இவரை சிறைக்கு கூட்டிச் செல்லும்போது, தலைநிமிர்ந்தபடி இவர் நடந்துசென்ற காட்சி, அவரது கிராமத்தினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியாக கூறப்படுகிறது.

ஆனால் மிக விரைவாகவே விடுதலை செய்யப்பட்டார். காந்தியின் கொள்கைகளை கடைப்பிடித்ததாலும், அவரைப் போலவே தீர்க்கமாக சிந்தித்து செயல்பட்டதாலும், இவருக்கு காந்தி புரி என்ற பெயர் சூட்டப்பட்டது. பெங்காலி மொழியில் இதன் அர்த்தம் Old Lady Gandhi ஆகும்.

ஆங்கிலேயர்கள் மேடையிலேயே கருப்புக்கொடி ஏந்திய வரலாறு:

1933ல் காங்கிரஸ் நடத்திய பொதுக்கூட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதில், பலத்த காயமடைந்தார் மாதங்கி.

மனந்தளராத பெண்மணி அதே ஆண்டு அப்போதைய ஆளுநர் சர் ஜான் ஆண்டர்சன் பங்கேற்ற கூட்டம் ஒன்றில், பாதுகாவலர்களை மீறிச் சென்று மேடையேறி, ஆங்கிலேயர்களுக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தினார். இதனால் மீண்டும் கைதுசெய்யப்பட்ட மாதங்கி, 6 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

நெற்றிப்பொட்டில் துளைத்த குண்டு:

1942 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில், மிட்னாபூர் கிராமத்தில் காங்கிரஸ் கட்சியினர், பல காவல் நிலையங்களில், அரசு அலுவலகங்களில் போராட்டங்களை நடத்த முடிவெடுத்தனர். இதற்கு 73 வயதான மாதங்கி ஹஸ்ரா தலைமைத் தாங்குவதாக முடிவு செய்யப்பட்டது.

செப்டம்பர் மாதம் 29 ஆம் நாள், தம்லுக் காவல் நிலையத்தை முற்றுகையிட்டது மாதங்கி தலைமையிலான போராட்டக் காரர்கள் குழு. சுமார் 6000 போராட்டக்காரர்கள் இதில் அங்கம் வகித்தனர், பெரும்பாலும் பெண்கள் இருந்தனர்.

அப்போது போராட்டத்தில், காவல் துறையின் தடைகளை மீறி முன்னேறினார் மாதங்கி. காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தத் தொடங்கினர்.

இதில் முதலில் மாதங்கியின் கைகளை துளைத்தது ஒரு குண்டு. தளராமல் முன் சென்றவரை நோக்கி அடுத்த குண்டு பாய்ந்தது. இந்த முறை, நேரே நெற்றிப்பொட்டை துளைக்க, அங்கேயே உயிர்நீத்தார் மாதங்கி. கலவரம் ஓய்ந்து, போராட்டங்கள் முடிவடைந்த பிறகு மாதங்கியின் உடல் கைப்பற்றப்பட்டபோது, தேசியக் கொடியை கையில் ஏந்தியவாறு ரத்தவெள்ளத்தில் இறந்துகிடந்தார் மாதங்கி.

இந்தியா அறிந்திடாத, இன்றையத் தலைமுறை நிச்சயம் அறிந்திடவேண்டிய மாமனிதர்களுள் ஒருவர் மாதங்கி. இனி வரும் நாட்களில் இவரது தியாகங்களை போற்றிடுவோம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?