உம்மன் சாண்டி: "மக்களுடன் மக்களாக வாழ்ந்தவர்" தலைமுறைகள் கடந்த தலைவரின் கதை! Twitter
இந்தியா

உம்மன் சாண்டி: "மக்களுடன் மக்களாக வாழ்ந்தவர்" தலைமுறைகள் கடந்த தலைவரின் கதை!

1970 முதல் 2021 வரை எல்லா தேர்தல்களிலும் புதுப்பள்ளி தொகுதியில் நின்று வெற்றி பெற்றுள்ளார். 18,728 நாட்கள் ஒரே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அரசியல்வாதி இந்தியாவிலேயே வேறு யாருமில்லை!

Antony Ajay R

கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி (79) இன்று காலை மரணமடைந்தார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கட்சி பேதமின்றி நாடுமுழுவதும் இருந்து அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்படுவதுடன், அவரது புகழையும் பாடத்தொடங்கியுள்ளனர்.

கேரளாவின் 10வது முதலமைச்சராக பணியாற்றிய உம்மன் சாண்டி ஒரு மிகச் சிறந்த காங்கிரஸ் தலைவராக அறியப்படுகிறார்.



இப்போது முதல்வராக இருக்கும் பிணராயி விஜயன், "உம்மன் சாண்டி ஒரு திறமையான நிர்வாகி. மக்கள் வாழ்வின் நெருங்கிய ஈடுபாடு கொண்டவர். மக்களுடன் மக்களாக பழகியவர்." எனக் கூறியுள்ளார்.

கேரள காங்கிரஸ், "எங்கள் உட்சபட்ச அன்புக்குரிய தலைவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவது உச்சபட்ச வருத்தத்துக்குரியது.
மக்களிடம் செல்வாக்கு பெற்ற, சக்திவாய்ந்த தலைவரான இவர் தலைமுறைகள் கடந்து அனைத்து தரப்பு மக்களாலும் போற்றப்படுவார்" எனப் பதிவிட்டுள்ளது.

கேரள மாநில காங்கிரஸ் மாணவர் அமைப்பில் (கேரளா ஸ்டூடண்ட்ஸ் யூனியன்) தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய உம்மன் சாண்டி, காங்கிரஸின் மாநில தலைவர் பதவி வரை உயர்ந்த கதையைய் பார்க்கலாம்.

உம்மன் சாண்டி 1943ல் கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி அருகே பிறந்தவர்.

1967ம் ஆண்டு கேரளா ஸ்டூடண்ட்ஸ் யூனியனில் இணைந்தார்.

1970ம் ஆண்டு கேரள மாநில இளைஞர் காங்கிரஸில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


அதே ஆண்டில் புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 27.

2004 - 2006, 2006 - 2011 ஆகிய இரண்டு முறை கேரள முதல்வராக பணியாற்றினார்.

கேரளாவில் ஒரு தொகுதியில் நீண்ட காலம் எம்.எல்.ஏவாக செயல்பட்டவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

1970 முதல் 2021 வரை புதுப்பள்ளி தொகுதியில் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவிலேயே ஒரே தொகுதியில் 53 ஆண்டுகள் எம்.எல்.ஏவாக இருந்தவர் உம்மன் சாண்டி மட்டுமே!

ஐநா சபையின் பொது சேவைக்கான விருதைப் பெற்ற ஒரே இந்திய முதல்வர் உம்மன் சாண்டி மட்டுமே.



தனது கடைசி காலத்தில் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக இருந்தார்.

60 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் சில கரைகளும் இவர் மீது படிந்திருக்கின்றன.

சரிதா நாயர் மீதான பாலியல் சுரண்டல் வழக்கில் இவருக்கு சிபிஐ கிளீன் சீட் வழங்கியது.

கேரளாவை உலுக்கிய சோலார் ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?