பாம்பும் கீரியும் ஒன்றோடு ஒன்று சண்டையிடுவது ஏன்? இவை இயற்கையாகவே எதிரிகளா? canva
இந்தியா

பாம்பும் கீரியும் சண்டையிடுவது ஏன்? இவை இயற்கையாகவே எதிரிகளா?

Keerthanaa R

உயிரினங்கள் படைக்கப்பட்டபோதே, வெவ்வேறு அளவுகளில் வெவ்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டன. உணவுச் சங்கிலியில், ஒரு உயிரினத்தை விட மற்றொரு உயிரினம் பெரியதாக இருந்தன.

பல உயிரினங்கள் இவற்றில் எதிரிகளாகவே இருக்கின்றன. உதாரணமாக கீரிகள் பாம்புகளை சொல்லலாம்.

இந்த பாம்பும் கீரியும் ஏன் எதிரிகளாக இருக்கின்றன என்று யோசித்ததுண்டா?

இயற்கையாகவே இந்த இரண்டு பிராணிகளும் பரம எதிரிகளாக உள்ளன. ஃபாரஸ்ட் வைல்டு லைஃப் என்ற இணையதளம் இது குறித்த அறிக்கை ஒன்றினை வெளியிட்டது.

அதன்படி, கீரிக்கும் பாம்புக்கும் இடையில் உள்ள இந்த பகைமை இயற்கையான உள்ளுணர்வு. பாம்புகள் கீரிகளின் குட்டிகளை தங்களின் இரையாக பார்க்கின்றன.

தாய் கீரிகள் இல்லாத சமயத்தில் குட்டிகளை தாக்குவதும் அவற்றை உண்ண முற்படுவதும் நடக்கின்றன. இதனால் தங்களின் குட்டிகளை காக்க கீரிகளும் பாம்புகளை தாக்குகின்றன.

அதேபோல கீரிகளின் உணவுகளில் பிரதானமானவையாக பாம்புகள் இருக்கின்றன. இந்திய கீரிப்பிள்ளைகள் அவற்றை விட பெரிய பாம்புகளையும் கூட வெல்ல இயலும். கீரிகள் பாம்புகளை தலை மற்றும் பின்புறத்தில் தாக்குதல்களை நடத்துகின்றன. சில கீரிகள் ராஜநாகங்களையும் வெல்லக் கூடிய சக்தியை கொண்டுள்ளன.

இதனால் கீரிகளுக்கும் ஆபத்தில் இல்லாமல் இல்லை. பாம்புகளை கொன்று சாப்பிடும்போது அவற்றின் பற்கள் உள்ளே சென்று காயங்கள் ஏற்பட்டு, ரத்த கசிவு போன்ற காரணங்களால் இவை மரணிக்கின்றன.

கீரிக்கும் பாம்புக்கும் இடையிலான சண்டைகளில் 80 சதவிகிதம் கீரிகளே வெல்கின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?