சந்திரயான் 3: முட்டி மோதும் உலக நாடுகள் - நிலவின் தென் துருவத்தில் அப்படி என்ன சிறப்பு?  Canva
இந்தியா

சந்திரயான் 3: முட்டி மோதும் உலக நாடுகள் - நிலவின் தென் துருவத்தில் அப்படி என்ன சிறப்பு?

சீனா போன்ற முக்கிய நாடுகள் நிலவின் தென் துருவத்தை அடைய முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இத்துனை நாடுகளும் ஏன் முட்டி மோதுகின்றன? இந்த பதிவில்!

Keerthanaa R

சந்திரயான் 3 விண்கலத்தை ஏந்திச்சென்று வெற்றிகரமாக விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கிவிட்டது. இது நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.

இதுவரை சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் நிலவுக்கு தங்களது ஸ்பேஸ் மிஷனை மேற்கொண்டு வெற்றி பெற்றிருந்தாலும், இந்தியாவின் இந்த சந்திரயான் 3 மிஷன் ஸ்பெஷல்.

காரணம், நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய முதல் நாடு இந்தியா தான்.

சீனா போன்ற முக்கிய நாடுகள் நிலவின் தென் துருவத்தை அடைய முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இத்துனை நாடுகளும் ஏன் முட்டி மோதுகின்றன? இந்த பதிவில்

நிலவின் தென் துருவமானது, பல கோடி ஆண்டுகள் வெளிச்சமே படாத பகுதியாகும். இந்த பகுதியின் வெப்பநிலை மைனஸ் 203 டிகிரியைக் கூட தொடும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த இருள் சூழ்ந்த நிலவின் பகுதியில் நீர் பனிக்கட்டிகளின் அளவு அதிகமாக இருப்பது விஞ்ஞானிகளின் ஆர்வத்தை தூண்ட முக்கிய காரணம். இந்த பகுதியின் தரைப்பரப்பில் இருக்கும் பள்ளங்கள் தனித்துவம் வாய்ந்தவை. இவற்றின் உட்புறத்துக்குள் சூரிய ஒளி ஊடுருவவே முடியாது.

இதன் காரணமாக இந்த பள்ளங்கள் குளிர் பொறிகளாக செயல்படுகின்றன.

இந்த பள்ளங்களுக்குள், ஆரம்ப கால சூரிய குடுபத்தில் இருந்த ஹைட்ரஜன், நீர் பனிக்கட்டிகள், மற்றும் பிற ஆவியாகக் கூடிய புதைபடிவங்களை உள்ளடக்கியுள்ளன.

இந்த படிவங்கள் பல ஆண்டுகளாக எந்த மாற்றங்களும் கண்டிருக்க வாய்ப்புகள் இல்லை.

மாற்றங்கள் கண்டிருந்தாலும் அது குறைவே.

ஆக, இவற்றினை ஆராய்ந்தால், சூரியக் குடும்பம் உருவானது எப்படி, இந்த உலகின் தோன்றல்கள் குறித்த பல கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

இந்த விஷயமே விஞ்ஞானிகளை அதிகமாக ஈர்த்தது.

இவ்வளவு அதிசயங்களை உள்ளடக்கியுள்ள நிலாவின் தென் துருவமானது, தன் மீது ஆராய்ச்சிகள் மேற்கொள்ள முதன் முதலில் இந்தியாவுக்கே வழி வகுத்துள்ளது எனலாம்.

சந்திரயான் 1 மிஷனின் போது, நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை இந்தியா முதன் முதலில் கண்டுபிடித்தது.

அதே போல, அதன் அடுத்தக்கட்ட ஆராய்ச்சிக்கு திறவுகோலாக அமைந்திருக்கிறது இந்தியாவின் இந்த சமீபத்திய வெற்றி!

சந்திரயான் 3 என்னென்ன புதிய மர்மங்களை இனி அவிழ்க்க வழிவகை செய்யும் என்பதை காத்திருந்து பார்ப்போம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?