மோடியுடன் மேடையில்  டெலிப்ராம்ப்டர்

 

Twitter

இந்தியா

மோடி பயன்படுத்தும் டெலிப்ராம்ப்டர்களின் வரலாறு தெரியுமா?

Antony Ajay R

உலக பொருளாதார மாநாடு யூடியூப் லைவில் இந்திய பிரதமர் மோடி சில வினாடிகள் பேச முடியாமல் திணறிய வீடியோ இணையதளத்தில் வைரலனது. டெலிப்ராம்ப்டரில் ஏற்பட்ட கோளாருதான் இதற்கு காரணம் எனவும் பிரதமரால் டெலிப்ராப்டர் இல்லாமல் சில வினாடிகள் கூட பேச முடியாது எனவும் காங்கிரஸ் கட்சியினரும் நெட்டிசன்களும் இனையத்தில் விமர்சித்து வருகின்றனர். அதென்ன டெலிப்ராம்ப்டர் என்ற கேள்வி உங்கள் அனைவருக்கும் எழுந்திருக்கும்.

ஒரு மாத காலம் சில புத்தகங்களைப் படித்து அதிலிருந்து குறிப்புகளெடுத்து அரசியல் மேடையில் பேச வேண்டுமா? நிச்சயம் முடியாது , காலம் வேகமாக ஓடுகிறதல்லவா? சரி ஒரு வாரம் குறிப்புகள் எடுத்து மனப்பாடம் செய்து பேச வேண்டுமா? அதுவும் முடியாத காரியம் தான். கடந்த காலங்களில் தேர்தல் களங்களை உற்று நோக்கினால் ஒரு கட்சியின் தலைவர் எல்லா ஊர்களிலும் பேசியாக வேண்டும், ஒரு நாளுக்குக் குறைந்தது இரண்டு, மூன்று மேடைகள் அதிலும் பேசியதையே திரும்பப்பேச முடியாது. ஒரு பொருளை நாட்கணக்கில் அல்ல மணிக்கணக்கில் கூட மண்டையில் வைத்துக்கொள்ள முடியாத தலைவர்கள் சில நொடிகளில் பார்த்து உணர்ச்சிப்பெருக வாசிப்பதற்குப் பயன்படும் சாதனம் தான் டெலிப்ராம்ப்டர்கள். இந்த சாதனங்கள் 1948 முதல் பயன்பாட்டிலிருந்து வருகின்றன.

ஹாலிவுட்டில் அதிக வசனங்களை மனப்பாடம் செய்து பேச சிரமப்பட்ட நடிகர் ஃப்ரெட் பார்டன் ஜூனியருக்கு தான் இந்த சிந்தனை முதலில் உதித்தது. நாடகங்களில் மறக்கப்பட வாய்ப்பிருக்கும் வசனங்களை கியூ கார்டில் எழுதி ஏர்போர்டில் நேம் கார்டு பிடிப்பது போல பிடித்து நிற்பார்கள். இது பெரும்பாலும் ஆடியன்ஸ் கண்ணில் பட்டு அவமானத்தையே பெற்றுக்கொடுத்திருக்கிறது. நாடகத்திலிருந்து சினிமாவாக, தொலைக்காட்சி நிகழ்ச்சியாக நடிப்புக்களை உருமாற்றம் அடைந்தது. அப்போது கியூ கார்டும் அடைந்த உருமாற்றம் தான் இந்த டெலிப்ராம்ப்டர். சூட்கேஸ் மாதிரியான ஒரு பெட்டியை வடிவமைத்து அதனுள் வசனம் எழுதிய சுருள் காகிதத்தை வைத்து மோட்டாரைக் கொண்டு

திணறிய மோடி

வசனம் பேசுபவருக்கு ஏதுவாக சுற்றவிட்டால் எளிதாகப் பேசி விட முடியும் என்பதே அவரது ஐடியா! இதனை கான் என்பவரிடம் சொல்ல கானிடம் வேலை செய்த ஷால்ஃபி எனும் பொறியாளர் கருவியை வடிவமைத்துக்கொடுத்தார். ஏப்ரல் 21, 1949-ல் ஷால்ஃபி, கான் மற்றும் பார்டன் தங்களது வசனம் காட்டும் கருவிக்கான காப்புரிமையைப் பெற்றனர்.

ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அதனால் தான் டெலிப்ராம்ப்டர்(டெலிவிசனில் இருந்து) என்று அழைத்தனர். அந்த சுருள் தாள்களைக் கொண்ட கருவி படப்பிடிப்பு கருவிக்கு மேலாக, கீழாக அல்லது பக்கவாட்டில் வைக்கப்பட்டது. இப்போது நவீன யுகத்தில் பீம்ஸ்பிலிட்டர் எனும் பகுதியளவு சில்வர் சேர்ந்த கண்னாடி மற்றும் மென்பொருள் உதவியுடன் கேமராவில் 45 டிகிரி சாய்த்து வைத்து டெலிப்ராம்ப்டரை எளிதாகப் படித்துவிட முடிகிறது. இது கேமராவில் பதிவாகாமல் இருக்க வளர்ந்துள்ள கேமரா தொழில்நுட்பமும் உதவி செய்துள்ளது.

Teleprompter

டெலிப்ராம்ப்டர் தயாரிப்பாளர்களான பார்டன், கான் மற்றும் ஷால்ஃபியும் ஃபாக்ஸ் 20 செஞ்சுரி நிறுவனத்தில் கொடுத்தனர். ஆனால் நிறுவனம் இந்த கண்டுபிடிப்பை ஏற்கவில்லை. எனவே அவர்கள் டெலிப்ராம்ப்டர் எனும் நிறுவனத்தைத் தொடங்கினர். கொஞ்சம் கொஞ்சமாக டெலிப்ராம்ப்டர் பிரபலமடைந்தது.


1952-ல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வந்தது, அப்போது குடியரசு கட்சியின் முன்னாள் ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர், வேட்பாளர் ஜெனரல் டுவைட் டி. ஐசின்ஹோக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வயதான அவரால் அதிக கருத்துக்களை மனப்பாடம் செய்து பேசமுடியவில்லை. எனவே வேறு வழிகளை யோசித்தவர்களின் கண்கள் புதிய கண்டுபிடிப்பாக ஸ்டூடியோக்களில் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த டெலிப்ராம்ப்டரின் பக்கம் திரும்பின. அந்த தேர்தல் பிரச்சாரத்தில், 58 முக்கிய உரைகளில் 47 டெலிபிராம்ப்ட்கள் பயன்படுத்தப்பட்டன. இப்படித்தான் அரசியலில் குதித்தது டெலிப்ராம்ப்ட் கருவி. தொழில்நுட்பம் வளர வளர கருவியும் ஸ்மார்ட் வடிவம் பெற்றது.

டெலிப்ராம்ப்டருடன் ஒபாமா

தற்போது, ப்ளூடூத் மூலம் லேப்டாப்பில் இணைக்கப்படும் வசதியைக் கொண்ட டெலிப்ராம்ப்டர்கள், உரை நிகழ்த்துவோரின் முன்னே நிறுவப்பட்டிருக்கும். அந்த சாதனம், லேப்டாப்பில் வயர்லெஸ் வசதியுடன் இணையும். மோடி பேசும்போது அவரது சொல்லோட்டத்துக்கு ஏற்றபடி லேப்டாப்பில் இருப்பவர் தமது லேப்டாப் மவுஸை ஸ்க்ரோல் செய்யச் செய்ய, மோடியின் முன்பாக இருக்கும் சாதனம் சொற்களை மேல்நோக்கி செலுத்திக் கொண்டே இருக்கும் ஆவேசமான அல்லது சாதாரணமான உரை ஸ்மார்ட்டாக முடிந்துவிடும்!

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?