food canva
இந்தியா

Facebook -ல் வந்த ஆஃபர்; உணவு ஆர்டர் செய்தவரிடம் 8 லட்சம் திருட்டு- என்ன நடந்தது?

ஃபேஸ்புக் மூலம் உணவு ஆர்டர் செய்த பெண்ணை ஏமாற்றி 8,46,000 ரூபாய் பணம் பறித்துள்ளது ஒரு கும்பல்.

Keerthanaa R

ஃபேஸ்புக்கில் உணவு ஆர்டர் செய்த பெண்ணை ஏமாற்றி எட்டு லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளது ஒரு கும்பல்.

சைபர் கிரைம் சம்பவங்கள் சமீபகாலங்களில் அதிகரித்து வருகின்றன. எஸ்.எம்.எஸ்கள், ஈமெயில்கள் வாட்சப் மெசஞ்சரில் கொடுக்கப்பட்டும் லின்க்களை யாரும் பின்தொடர வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. ஸ்பேம் கால்கள் குறித்தும், யாரிடமும் வாங்கி தகவல்களை பரிமாற்ற வேண்டாம் எனவும் காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஃபேஸ்புக் மூலம் உணவு ஆர்டர் செய்த பெண்ணை ஏமாற்றி 8,46,000 ரூபாய் பணம் திருடியுள்ளது ஒரு கும்பல். மும்பையை சேர்ந்த அந்த பெண் ஃபேஸ்புக்கில் 200 ரூபாய்க்கு 'மகாராஜா போக் தாலி' ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என்ற விளம்பரத்தை பார்த்துள்ளார்.

ஆனால் இது போலியான விளம்பரம் என்று தெரியாமல் அந்த பெண் ஆர்டர் செய்துள்ளார். அதில் கொடுக்கப்பட்டிருந்த லின்ங்கிற்கு சென்று தொலைப்பேசி எண் மற்றும் வங்கிக் கணக்கு குறித்த தகவல்களை அவர் பதிவேற்றியுள்ளார். சிறிது நேரத்தில் ஒருவர் தொடர்புகொண்டு மீண்டும் ஒரு லிங்கை அனுப்பி அதில் தகவல்களை கொடுக்கும்படி கூறியுள்ளார். அதில் அவரது டெபிட் கார்ட் தகவல்களும் அடங்கும்.

Facebook

அந்த நபர் கூறிய அனைத்து தகவல்களையும் கொடுத்த பின்னர், Zoho Assist என்ற செயலியை பதிவிறக்க சொல்லியுள்ளனர். அதன் மூலமாக குற்றவாளிகள் அந்த பெண்ணின் கணக்கிலிருந்து 8 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் பணத்தை தங்களது கணக்கிற்கு மாற்றியுள்ளனர். மொத்தம் 27 பரிவர்த்தனைகள் மூலம் பணத்தை திருடியுள்ளனர்

வங்கியிலிருந்து குறுஞ்செய்தி வந்தபோது தான் அவருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?