திருமணம் Canva
இந்தியா

Microsoft: ”நான் அவரை தான் மணக்க வேண்டுமா?” பெண்ணின் கேள்வியால் அதிர்ந்த இணையம் - ஏன்?

Keerthanaa R

மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வேலையை இழந்த நபரை, தான் திருமணம் செய்துகொள்ளத்தான் வேண்டுமா என பெண் ஒருவர் சமூக வலைத்தளத்தில் கேட்ட கேள்வி பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் பலவும், கடந்த சில மாதங்களில் தங்கள் நிறுவன ஊழியர்களை செயல் திறன் மேம்பாடு, பொருளாதாரம் உள்ளிட்ட சில காரணங்களுக்காக லே ஆஃப் செய்தன.

கூகுள் வெளியேற்றிய 12,000 ஊழியர்களும் ஒவ்வொருவராக தங்கள் பணி நீக்கக் கதையை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

லே ஆஃப்

இதற்கிடையில், இணையத்தில் இளம் பெண் ஒருவரின் கேள்வி சற்றே முகம் சுழிக்கும் படியாக அமைந்துள்ளது.

பெயர் குறிப்பிடப்படாத அந்த பெண்ணுக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. வீட்டார் நிச்சயித்த திருமணம், இந்த மாதம் நடைபெறவுள்ளது.

அவர் மணக்கவிருக்கும் ஆண், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தவர். சமீபத்தில் நடந்த லே ஆஃபில் இவரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

கல்யாணத்திற்கு முன் வேலை பறிபோனதால், தனது வருங்கால கணவரை தான் திருமணம் செய்துகொள்ளவேண்டுமா என்று அவர் சமூக வலைத்தளத்தில் கருத்து கேட்டிருந்தார்

“வரவிருக்கும் கணவர் (upcoming husband) மைக்ரோசாப்ட் லே ஆஃப் ஆல் வேலை இழந்துள்ளார். இவரை நான் திருமணம் செய்துகொள்ளவேண்டுமா?” என்று அவர் கேட்டிருந்தார். இந்த கேள்வியின் ஸ்க்ரீஷாட் இணையத்தில் காட்டுத்தீயாக பரவி, பலரும் அப்பெண்ணை சாடி வருகின்றனர்.

முதலில் அவர் தனது வருங்கால கணவரை இன்னும் மூன்றாவது மனிதர் போல கருதி upcoming husband எனக் குறிப்பிட்டதற்காக விமர்சிக்கப்பட்டார். தொடர்ந்து, வேலைப் போனதால் அவரை கைவிட நினைக்கும் எண்ணம் சுயநலமாக இருப்பதாகவும், இப்படிப்பட்டவர்கள் ஏன் ஃபெமினிசம் பேசவேண்டும் என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன.

இவரது ‘பிரச்னைக்கு’ இணையம் மூன்று மாற்று வழிகளை கொடுத்தது.

ஒன்று, அந்த நபர் விரைவில் வேறு வேலையில் சேருவது, இரண்டாவது, மைக்ரோசாப்ட் பணிநீக்கம் செய்தவர்களுக்கு பெரும் தொகை ஒன்றை வழங்கும் என்பதால், அவரை திருமணம் செய்துகொள்ளலாம்.

மூன்றாவது, மிக முக்கியமாக, அந்த பெண் தன்னை ஹிப்பாக்ரிட் (பாசாங்குக்காரர்) என அழைத்துக்கொள்வது!

இது குறித்து உங்கள் கருத்து என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?