நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் கூட விலையுர்ந்தவையாக உள்ளன. உதரணமாக பேக், செருப்பு, வாட்ச், உணவு பொருட்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.
விலையுயர்ந்த உணவுகளாக பொதுவாக இமயமலையில் வளரும் குங்குமப்பூ மற்றும் காட்டு காளான்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் விலையுர்ந்த பழங்கள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நம் சந்தைகளில் ரூ. 50 முதல் ரூ. 60 வரை கொடுத்து வாங்கிய முலாம்பழம். இந்த நாட்டில் லட்சக்கணக்கில் விலைபோகிறதாம்.
முலாம்பழங்களுக்கு எப்போதும் தேவை இருக்கும், பொதுவாக ஏப்ரல் முதல் மே வரை கிடைக்கும். நம் நாட்டில் ஒரு கிலோ ரூ. 50 முதல் ரூ. 60 வரை, எப்போதாவது ரூ. 100-ஐ எட்டும்.
ஆனால் உலகின் மிக விலையுயர்ந்த முலாம்பழம் வகை இருப்பது குறித்து உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்!
இந்த தனித்துவமான முலாம்பழம் ஜப்பானில் பிரத்தியேகமாக வளர்க்கப்படுகிறது. "யுபாரி கிங்" என்ற பெயரில் அழைக்கப்படும் இது ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் உள்ள யுபாரி நகரில் மட்டுமே பயிரிடப்படும் உலகின் விலையுயர்ந்த பழம் என்று கூறப்படுகிறது.
யுபாரி நகரத்தின் வெப்பநிலை முலாம்பழம் சாகுபடிக்கு மிகவும் பொருத்தமானதால் அதன் பெயரையே வைத்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டில் விடப்பட்ட ஏலத்தில் முலாம்பழம் ரூ. 20 லட்சத்தை எட்டியிருக்கிறது. முந்தைய ஆண்டில், அது ரூ.18 லட்சத்திற்கு விற்கப்பட்டது. இதன் விலை இந்தியாவில் மஹிந்திரா தார் காரின் விலைக்கு சமம்.
அதன் தனித்துவமான சுவையைத் தவிர, யுபாரி கிங் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. முலாம்பழத்தில் பொட்டாசியம் நிரம்பியுள்ளது. இது இரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க வல்லது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust