பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியான Zomato நிறுவன விளம்பரமானது பிரபல மஹாகாலேஷ்வர் கோவிலை அவமதிப்பதாக உள்ளது என பலரும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து சோமேட்டோ நிறுவனம் மன்னிப்பு கேட்டிருக்கிறது.
உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ ஹிருத்திக் ரோஷன் வைத்து ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. அந்த விளம்பரத்தில் ஹிருத்திக் ரோஷன் மகாகல் என்ற இடத்திலிருந்து தளி என்ற உணவை ஆர்டர் செய்வார். அதுதான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த விளம்பரத்தில் அவர் உணவு ஆர்டர் செய்த மகாகல் என்ற இடம் மஹாகாலேஷ்வர் கோவிலைக் குறிக்கிறது என்று மஹாகாலேஷ்வர் கோவில் மதகுருக்கள் தெரிவித்திருக்கின்றனர்.
மத்திய பிரதேசம் உஜ்ஜயினியில் உள்ள மகாகல் கோவிலில் பக்தர்களுக்கு இலவசமாக உணவு கொடுக்கப்படுகிறது. அதை எப்படி ஆன்லைன் டெலிவரி ஆப் மூலம் வாங்க முடியும்? இது மகாகல் கோவிலை அவமதிக்கும் செயல் என மதகுருக்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் இந்த விளம்பரத்தை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், இதற்காக சோமேட்டோ நிறுவனம் மன்னிப்பு கேட்க கோரியும் மகாகல் கோவில் மதகுருக்கள் கண்டனத்தை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து உஜ்ஜயினி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங்விடம் சோமேட்டோ நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர்.
இது குறித்து சோமேட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விளம்பரத்திற்காக மன்னிப்பு கோரியுள்ளது. மேலும் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளிவந்த விளம்பரம் மகாகல் கோவிலைக் குறித்து எடுக்கவில்லை என்றும் உஜ்ஜயினியில் உள்ள மகாகல் என்ற உணவகம் குறித்தே எடுக்கப்பட்டது என்றும் விளக்கம் தெரிவித்துள்ளனர்.
இந்த விளம்பரம் யாருடைய நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் புண்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டது இல்லை என்று சோமேட்டோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust