ட்விட்டரில் சேரி சுற்றுலா குறித்து பகிரப்பட்ட போஸ்டர் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு இந்தியாவின் வறுமையில் வாடும் மனிதர்களை காட்டுவது இந்த நிகழ்வாகும்.
டெல்லியில் சேரி வாழ்வைக் பார்க்க ஒரு ஆளுக்கு 1800 ரூபாய் கட்டணம் என அந்த போஸ்டரில் கூறப்பட்டுள்ளது. @tanishka_s2 என்ற ட்விட்டர் கணக்கை வைத்திருக்கும் பத்திரிக்கையாளர் இந்த போஸ்டரை பகிர்ந்திருந்தார். அவர், "'டெல்லி சேரிகளைப் பற்றிய முதல் பார்வையைப் பெற' 1800 ரூபாய் கட்டணம்" எனப் பகிர்ந்திருந்தார்.
இந்த சேரி சுற்றுலா அல்லது வறுமை சுற்றுலா என்பது பல கேள்விகளை எழுப்பிவருகிறது. பல ஆண்டுகளாகவே தாராவி போன்ற சேரி பகுதிகளை பயணிகள் சுற்றிப்பார்ப்பது வழக்கத்தில் இருக்கிறது. எனினும் இது குறித்த விவாதங்கள் குறைவாகவே எழுந்திருக்கின்றன.
"முதலாளித்துவ சமூகத்தில் தோல்வியுற்ற மனிதர்களை கண்காட்சியாக்கும் நடவடிக்கை" என இதனை நெட்டிசன்கள் சாடி வருகின்றனர்.
"வறுமை நிர்வாணம்" - வசதியான பார்வையளர்களின் பொழுதுபோக்குக்காக வறுமையிலிருக்கும் மக்களை பொருட்களாக பாவிப்பது என ஒரு ட்விட்டர் பயனர் கூறியுள்ளார்
"இது பணக்காரர்களுக்கு இன்பமான அனுபவத்தைக் கொடுப்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. இது அருவருப்பானது" என மற்றொருவர் கூறியுள்ளார்.
"முதலாளித்துவவாதிகள் வறுமையிலிருந்தும் பணம் சம்பாதிக்கின்றனர்" என மற்றொருவர் கூறினார்
மேலும் சில ட்வீட்கள்,
வறுமையை ஓவியமாக வரைதல், புகைப்படமாக எடுத்தல் போன்ற காரணங்களுக்காக சேரிகளில் உலாவுவது ஆரம்பமானது. இந்த ஓவியங்களும் புகைப்படங்களும் பணக்காரர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது.
ஸ்லம் டாக் மில்லியனர் படத்துக்கு பிறகு மும்பை தாராவி சுற்றுலா பிரபலமடைந்தது. இதன் தொடர்ச்சியாகவே டெல்லி சேரி சுற்றுலாவும் பார்க்கப்படுகிறது.
சேரிகளுக்கு உதவ விரும்பும் அறக்கட்டளைப் போன்ற நிறுவனங்கள் இதனை மேற்கொள்கின்றனர். ஆனால், எத்தனை பேர் சுற்றிப்பார்த்தும் இந்தியாவில் சேரிகளின் நிலை மாறுவதே இல்லை.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust