Nostradamus  Twitter
அறிவியல்

பசி, அடுத்த வைரஸ் : 2022 ஆம் ஆண்டில் என்னவெல்லாம் நடக்கும்? - நோஸ்ட்ராடாமஸ் கணிப்புகள்

பிரெஞ்சு அறிஞர் நோஸ்ட்ராடாமஸ் 2022 ஆம் ஆண்டில் என்ன நடக்கும் என்று சில கணிப்புகள் செய்ததாகச் சிலர் நம்புகிறார்கள். அவை செயற்கை நுண்ணறிவின் கை மேலோங்குதல்,பணவீக்கம், பிரான்ஸ் நாட்டின் மீதான படையெடுப்பு ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றன.

NewsSense Editorial Team

பழங்கால வரலாற்றில் எதிர்காலத்தில் என்ன நடக்குமென்று அந்தந்த நாடுகளில் சிலர் அறிஞர்கள் கணித்திருப்பதாகக் குறிப்பிட்ட நாட்டு மக்களில் சிலர் கருதுகிறார்கள். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அய்யா வைகுண்ட நாதர் தனது அகிலத் திரட்டு நூலில் அப்படி சில கணிப்புகள் செய்ததாக அவரது வழிபாட்டுப் பிரிவான அய்யா வழியைப் பின்பற்றுபவர்கள் நம்புகிறார்கள்.

அதே போன்று பிரெஞ்சு அறிஞர் நோஸ்ட்ராடாமஸ் 2022 ஆம் ஆண்டில் என்ன நடக்கும் என்று சில கணிப்புகள் செய்ததாகச் சிலர் நம்புகிறார்கள். அவை செயற்கை நுண்ணறிவின் கை மேலோங்குதல்,பணவீக்கம், பிரான்ஸ் நாட்டின் மீதான படையெடுப்பு ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றன.

கி.பி. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந் பிரெஞ்சு ஜோதிடர்தான் நோஸ்ட்ராடாமஸ். இவர் லெஸ் ப்ரோபெட்டிஸ் என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதினார். இது 942 கவிதை குவாட்ரைன்களின் தொகுப்பாகும், இது எதிர்கால நிகழ்வுகளை வெளிப்படையாக முன்னறிவிக்கிறது.

Nostradamus book

கவிதையில் ஒரு குவாட்ரெய்ன் என்பது ஒரு கவிதையின் ஒரு வசனத்தை உருவாக்கும் நான்கு வரிகளின் தொடர் ஆகும். இது ஒரு சரணம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு குவாட்ரெய்ன் அதன் சொந்த கவிதையாக இருக்கலாம் அல்லது ஒரு பெரிய கவிதைக்குள் ஒரு பிரிவாக இருக்கலாம். இந்தக் கவிதைச் சொல் பிரெஞ்சு வார்த்தையான "குவாட்டர்" என்பதிலிருந்து பெறப்பட்டது, அதன் பொருள் "நான்கு" என்பதாகும்.

நோஸ்ட்ராடாமஸின் இந்த புத்தகம் முதன்முதலில் கி.பி. 1555 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இதில் போர்கள், இயற்கை பேரழிவுகள், படுகொலைகள், அணுசக்தி தாக்குதல்கள் மற்றும் புரட்சிகள் வருவதை முன்னறிந்து சொல்லப்பட்டிருப்பதாகச் சிலர் நம்புகிறார்கள்.

Nostradamus

டூமின் நபி என்பது எதிர்காலத்தில் நடக்கும் மோசமான நிகழ்வுகளைச் சொல்பவர் என்று பொருள். இதற்குப் பொருத்தமாக நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகள் இருந்தன. அவர் விவிலிய நூல்கள் மற்றும் அவரது காலத்தில் நடந்த பிளேக் கொள்ளை நோய் குறித்த அதிர்ச்சியால் ஈர்க்கப்பட்டார்.

அவரது நூலில் கொள்ளைநோய், பஞ்சம், இரத்தம், துக்கம் மற்றும் நெருப்பு ஆகிய வார்த்தைகள் அதிகம் இடம் பெற்றுள்ளன. வரவிருக்கும் 2022 ஆம் ஆண்டிற்கான கணிப்புகளையும் அவர் செய்தார். இந்தக் கணிப்புகள் அவரது நூலில் நேரடியான வார்த்தைகளில் இடம்பெறவில்லை. மாறாக அவரது கவிதைகளுக்கு அப்படியான விளக்கத்தை சிலர் கொடுக்கின்றனர்.

2022 ஆம் ஆண்டில் நடக்குமென அவர் கணித்ததாகக் கூறப்படும் சில நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம்.

பிரான்ஸ் படையெடுப்பு

பிரான்ஸ் படையெடுப்பு

கிழக்கிலிருந்து வரும் அச்சுறுத்தலால் பிரான்ஸ் நாட்டின் மீதான படையெடுப்பு நடைபெறும் என்பது நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகளில் பல இடங்களில் வருகின்றன. இருப்பினும் இந்த குறிப்பிட்ட கணிப்பு 2022 வசந்த காலத்தைக் குறிக்கும் என்று ஊகிக்கப்படுகிறது:

“நீலத் தலையாகும் வெள்ளைத் தலை

அத்தகைய அளவில் நடக்கும் தீங்கு

பிரான்சின் நன்மை இருவருக்குமே இருக்கும்.”

இந்த கணிப்பு மூன்றாம் உலகப் போரின் துவக்கமா? அல்லது 2022 வளைகுடா நாடான கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பையில் பிரான்ஸ் தகுதி பெறுவதைக் குறிக்குமா? என்று விவாதிக்கப்படுகிறது

Currency

பணவீக்கம் மற்றும் பசியின் ஆண்டு

நோஸ்ட்ராடாமஸ் கணிக்கும் மற்றொரு பயங்கரமான சாத்தியம் என்னவென்றால் தோல்வியடைந்து வரும் பொருளாதாரத்தில் விலைவாசி உயர்வு ஆகும்.

“மடாதிபதிகள் இல்லை, துறவிகள் இல்லை,

கற்றுக்கொள்ள புதியவர்கள் இல்லை;

மெழுகுவர்த்தியை விட தேன் விலை அதிகம்”

"கோதுமையின் விலை மிக அதிகம்,

அந்த மனிதன் கலக்கமடைந்தான்

விரக்தியடைந்த மனநிலையில் சாப்பிடும் சக மனிதன்”

நோஸ்ட்ராடாமஸ் பணவீக்கம் மற்றும் விண்ணைத் தொடும் விலைகளால் உலகளாவிய பஞ்சம் ஏற்படும் என்றும் கணித்தார். பொது மக்களது பட்டினி ஒரு மோதலையும், காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் இயற்கை வளங்களுக்காக மக்கள் போராடுவதையும் ஏற்படுத்தும்.

அரசியல் ஸ்திரமின்மை, கொரோனா வைரஸ் தொற்று மற்றும் எரிவாயு விநியோகத்தில் பற்றாக்குறை ஆகியவை ஏற்கனவே பணவீக்க ஏற்றத்தை உலகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ளன. உணவு மற்றும் எரிசக்தி கட்டணங்களின் விலையும் அதிவேகமாக உயர்ந்துள்ளன.

கேள்வி: #EatTheRich – செல்வந்தரைச் சாப்பிடு இயக்கத்தை நோஸ்ட்ராடாமஸ் கணித்தாரா? அல்லது இந்தக் கணிப்பு உருவகமாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டுமா? எதுவாக இருந்தாலும், 2022 ஆம் ஆண்டு பணவீக்கமும் பசியும் நவீன கால பிரெஞ்சுப் புரட்சிக்கு இட்டுச் சென்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Climate Change

புவி வெப்பமடைதல் மோசமடையும்

நோஸ்ட்ராடாமஸ் காலநிலை மாற்றம் மிகவும் தீவிரமானதாக மாறும். உயரும் வெப்பநிலை கடலில் மீன்களை பாதி வேகவைத்து விடும் என்று கணித்துள்ளார். மனித இனம் 40 ஆண்டுகளுக்கு மழையைப் பார்க்காது என்றும், பின்னர் மழை இறுதியாகப் பெய்யும் போது, ​​நாடுகளை அழிக்கும் 'பெரும் வெள்ளம்' ஏற்படும் என்றும் அவர் தனது கணிப்புகளில் பரிந்துரைத்தார்.

"சூரியனைப் போலத் தலை ஒளிரும் கடலைக் கடக்கும்.

கருங்கடலின் உயிருள்ள மீன்கள் அனைத்தும் கொதிக்கும்.

ரோட்ஸ் மற்றும் ஜெனோவா (13 ஆம் நூற்றாண்டில் போது கிரேக்க பிராந்தியத்தில் உள்ள ஜெனோசிஸ் அரசு ரோட்ஸ் அரசை ஆக்கிமரித்தது)

அரை பட்டினி இருக்கும்

அவற்றைக் கடப்பதற்கு உள்ளூர் மக்கள் உழைக்க வேண்டும்.

ஒருவேளை நாம் கடலில் மீன் கொதிப்பதைப் பார்க்க மாட்டோம். ஆனால் உலகம் முழுவதும் நடக்கும் வெகுஜன அழிவு நிகழ்வை நாம் கடந்து செல்கிறோம். உணவுச் சங்கிலி சிக்கல்கள், இயற்கை வாழ்விடங்களின் அழிவு, மீன்களின் எண்ணிக்கை குறைதல், வெப்ப அலைகள், வெள்ளம் மற்றும் வறட்சி ஆகியவை உலகம் முழுவதும் மிகவும் அதிகமாகி வருகின்றன. இந்த புவி வெப்பமடைதல் 2022 இல் மோசமாகிவிடும் என்று நோஸ்ட்ராமாஸ் கருதியதில் ஆச்சரியம் இல்லை.

Crypto Currency

கிரிப்டோ கரன்சியின் எழுச்சி

நோஸ்ட்ராடாமஸால் 1555 ஆம் ஆண்டிலேயே க்ரிப்டோவின் இருப்பைக் கணிக்க முடிந்ததாகக் கூறப்படுகிறது. இதோ அந்த கணிப்பு:

"தங்கம் மற்றும் வெள்ளியின் பிரதிகளது விலைகள் உயர்த்தப்பட்டன

அவை திருட்டுக்குப் பிறகு ஏரியில் வீசப்பட்டன

கடன்களால் அனைத்தும் தீர்ந்து கரைந்து போனது கண்டுப் பிடிக்கப்பட்டது

அனைத்து சான்றிதழ்கள் மற்றும் பத்திரங்கள் அழிக்கப்படும்"

கிரிப்டோ கரன்சி வர்த்தகம் வெள்ளி மற்றும் தங்கத்தில் செய்யப்படா விட்டாலும், தங்கத்தின் விலை தற்போது அதிகரித்து வருகிறது. மேலும் சிலிக்கான் வேலி பொறியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கிரிப்டோ கரன்சி ஸ்டார்ட்அப்களுடன் இணைந்து வருகின்றனர். நோஸ்ட்ராடாமஸ் தற்செயலாக சொன்ன தீர்க்கதரிசனம் உறுதிப்படுத்தப்பட்டதா? 2022 ஆம் ஆண்டு தான் இதற்குப் பதில் சொல்லும்.

artificial intelligence

செயற்கை நுண்ணறிவின் எழுச்சி

கடந்த சில பத்தாண்டுகளில் தொழில்நுட்பம் மிகப்பெரிய வேகத்தில் வளர்ச்சியடைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் என்ன வளர்ச்சிகள் ஏற்படும் என்பதைக் கணிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இதுவே கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு செயற்கை நுண்ணறிவு பற்றிய நோஸ்ட்ராடாமஸின் கருதுகோளை இன்னும் சுவாரசியமாக்குகிறது.

"உயர்ந்த மலையின் மீது இரவு முழுவதும் சந்திரன்,

தனிமையான மூளையுடன் புதிய முனிவர் அதைப் பார்க்கிறார்:

அவரது சீடர்களால் அழியாதவராக இருக்க அவர் அழைக்கப்பட்டார்.

தெற்கே கண்கள். மார்பில் கைகள், நெருப்பில் உடல்கள்."

செயற்கை நுண்ணறிவு எந்தெந்த துறைகளில் வரும் என்பதற்கு முடிவே இல்லை. அவை ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், முன் கணிப்பு உரை முதல் முக அங்கீகாரம் மற்றும் ஓட்டுநர் இல்லாமல் ஓடும் கார்கள் வரை பல விதங்களில் இருக்கலாம். TIME - டைம் இதழ் சமீபத்தில் டெஸ்லா மற்றும் அவரது SpaceX ஸ்பேஸ்எக்ஸு க்காக எலோன் மஸ்க்கை '2021 ஆம் ஆண்டின் சிறந்த நபர்' என்று பாராட்டியது. அதே நேரத்தில் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட ரோபோக்கள் ஒவ்வொரு நாளும் நடைமுறைக்கு வருகின்றன.

தொழில்நுட்பத்தை அதிகம் நம்புவது குறித்துப் பல நிபுணர்கள் மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக ரோபோக்கள் விசயத்தில் அவர்கள் கவலைப்படுகின்றனர். நாஸ்ட்ராடாமஸ் எதிர்காலத்தில் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளைப் பற்றி முன்னறிந்து இருந்தார். அவற்றை அவர் நேரடியான வார்த்தைகளில் சொல்லவில்லை. அவற்றினை உருவகப்படுத்தி இன்று சிலர் விளக்கமளிக்கின்றனர்.

எது எப்படியோ இந்த கணிப்புகளில் எது உண்மையாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?