யூஜின் ஷூமேக்கர்: நிலவுக்கு எடுத்து செல்லப்பட்ட மனித சாம்பல் - யார் இவர்? Twitter
அறிவியல்

யூஜின் ஷூமேக்கர்: நிலவுக்கு எடுத்து செல்லப்பட்ட மனித சாம்பல் - யார் இவர்?

பூமியில் இருந்து ஒரே ஒரு நபருடைய சாம்பல் மட்டுமே இதுவரை நிலவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. யார் அந்த நபர். எதற்காக இந்த கௌரவம் வழங்கப்பட்டது என விரிவாகக் காணலாம்.

Antony Ajay R

சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக செயலபடுத்தி நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு எனும் சாதனையைப் படைத்துள்ளது இந்தியா.

விக்ரம் லேண்டர் இறங்கிய இடத்துக்கு சிவசக்தி என்ற பெயரை அறிவித்துள்ளார் பிரதமர் மோடி. நிலவில் முதன்முறையாக பல நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

இதேப்போல பூமியில் இருந்து ஒரே ஒரு நபருடைய சாம்பல் மட்டுமே இதுவரை நிலவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. யார் அந்த நபர், எதற்காக இந்த கௌரவம் வழங்கப்பட்டது என விரிவாகக் காணலாம்.



யூஜின் மெர்லே ஷூமேக்கர் என்பவர் 1928ம் ஆண்டு ஏப்ரல் 28ம் ஆண்டு பிறந்தவர், அறிவியல் துறையில் ஆகச்சிறந்த பணிகளை ஆற்றியுள்ளார். விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.

அமெரிக்கரான இவர் தனது பணிகளுக்காக முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷால் தேசிய அறிவியல் பதக்கம் வழங்கப்பெற்றார்.

அமெரிக்காவின் புவியியல் கணக்கெடுப்பில் வானியல் ஆராய்ச்சி திட்டத்தின் முதல் இயக்குனராக பதவிவகித்தார்.


அரிசோனாவில் உள்ள பேரிங்கர் விண்கல் பள்ளம் உள்ளிட்ட பள்ளங்கள் குறித்து தனது ஆய்வுகளுக்காக அரியப்படுகிறார்.

மற்ற அறிவியலாளர்களுடன் இணைந்து 6.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் 12 கிலோமீட்டர் வரை பெரிதான விண்கல் பூமியைத் தாக்கியது குறித்து அறிந்தார்.

அந்த மோதலில் டைனோசர்கள் முழுவதுமாக அழிந்தன. டைனோசர்கள் மட்டுமல்லாமல் 80 விழுக்காடு உயிர்கள் காணாமல் போனது.

மெக்சிக்கோவின் யுகடன் தீபகற்பத்தில் நடந்த இந்த நிகழ்வை அறிந்ததன் மூலம் பூமியின் கடந்த காலத்தை நமக்கு வெளிச்சமிட்டு காட்டியதிலும் யூஜின் மெர்லே ஷூமேக்கரின் பங்கு அதிகம்.


நிலவை தூரத்தில் இருந்து ஆராய்ந்தவர் யூஜின். இவருக்கு நிலவை சென்றடைய வேண்டும் என்ற ஆசை தீவிரமாக இருந்தது

ஆனால் எதிர்பாராதவிதமாக 1997 ஜூலை 18ம் தேதி மரணமடைந்தார். இவரது பணிகளை கௌரவிக்க நாசா முடிவு செய்தது. அதன் படி நிலவுக்கு இவரது அஸ்தியும் ஒருமுறை கொண்டுசெல்லப்பட்டது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?