QR கோடுகள் நம் வாழ்வின் அங்கமாக இருக்கின்றன. எப்போது பணம் வாங்குவது கொடுப்பது எல்லாம் கடைகளில் இருக்கும் QR கோடுகளை ஸ்கேன் செய்துதான்.
பொதுமக்களாகிய நாம் ஸ்கேன் செய்வது பெரும்பாலும் பணம் வழங்க மட்டும்தான். வைஃபை பகிர அல்லது கூப்பன்களை ஆக்டிவேட் செய்ய சில நேரங்களில் QRகளை பயன்படுத்தியிருப்போம்.
நம் ஆதார்கார்ட் முதல் எல்லா அடையாள அட்டைகளிலும் இதுபோன்ற QR இருப்பதைப் பார்க்க முடிகிறது. பல இடங்களில் இதன் அவசியம் நமக்குப் புரிவதில்லை.
இந்த காலத்தில் திருமண பத்திரிகைகளில் மண்டபத்துக்கு வழி சொல்ல கூட QRகளை அச்சிடுகின்றனர். நாம் தினசரி கடந்து செல்லும் இந்த கருப்பு, வெள்ளைக் கட்டங்கள் சில ஆண்டுகளில் நம் வாழ்வு முழுவதும் நிறைந்திருக்கப் போகின்றன. QR கோடின் கதையைத் தெரிந்துகொள்ளலாம்.
QR கோடுக்கு ஒரு முன்னோடி இருக்கிறது. அதுதான் UPC code (Universal Product Code). நீளமான கோடுகள் நெருக்கியும் விலகியும் தடித்தும் சிறுத்தும் தனித்துவமான அமைப்பை ஏற்படுத்தியிருக்கும்.
கிட்டத்தட்ட எல்லா பொருட்களிலும் இப்படி கோட் இருப்பதைப் பார்க்கலாம். சூப்பர் மார்கெட்டில் கணக்கு போடும் நபர் ஒரு கருவியால் இதை ஸ்கேன் செய்தால் விவரங்கள் கம்பியூட்டரில் தெரியவரும்.
இன்றுவரை பார் கோடுகள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் அதன் அடுத்தகட்டமாக QR கோடுகள் வருவதற்கு என்ன காரணம்?
1950-70களில் உலக அளவில் சந்தைகள் பெரிதாக வளருகின்றன. விதவிதமான பொருட்கள் விற்கப்படுகின்றன. பல நகரங்களில் புதிய புதிய கடைகள் முளைத்தெழுகின்றன.
இந்த நிலையில் வல்லுநர்கள் பொருட்களை தடம் காண முன்னால் இருந்த கண் போன்ற கோடுக்கு (Bullseye Code) பதிலாக இன்று நாம் காணும் செங்குத்து பார்கோடுகளை உருவாக்கினர்.
பார்கோடுகள் பொதுமக்களாலும் வணிகர்களாலும் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதன் மூலம் பொருட்களை ஸ்கேன் செய்வது மிகவும் எளிமையாகவும் நம்பிக்கைக்குரியதாகவும் இருந்தது.
ஆனால் சந்தை வளர வளர அதற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. 2010களில் பொருட்களில் அதிக தகவல்களை கடத்த வேண்டிய நிலை உருவானது. அதில் பார்கோடுகள் தோற்றன.
மேலும் பார் கோடுகளை ஸ்கேன் செய்யும் கருவி விலை உயர்ந்தது. அதனால் எல்லாராலும் பார்கோடுகளைப் பயன்படுத்த முடியவில்லை.
முக்கியமாக பார்கோடுகளை குறிப்பிட்ட திசையில் வைத்துதான் ஸ்கேன் செய்ய முடியும். இது கூட்டம் நிறைந்த மார்கெட்டுகளில் நீளமான வரிசை உருவாக காரணமாக அமைந்தது. பெரு நிறுவனங்களுக்கு மெதுவாக பொருட்கள் தயாரிக்கப்படுவது விருப்பத்துக்குரிதயாத இல்லை.
பார்கோடில் இருந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட ஒரு நிறுவனம் ஜப்பானிய வாகன தயாரிப்பு கம்பெனியான டென்சோ வேவும் ( Denso Wave) ஒன்று.
பார்கோடில் குறைந்த தகவல்களை மட்டுமே கடத்த முடிந்ததால் ஒரு பொருளிலேயே 10 பார்கோட் ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டிய நிலை இருந்தது. பார் கோட் பிரச்னை அதன் உற்பத்தி வரை பிரதிபலித்தது.
டென்ஸோ வேவில் வேலை செய்த மசஹிரோ ஹரா என்ற பணியாளர் ஒரு நாள் கோ என்ற ஜப்பானிய விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தார். 19x19 என கட்டங்களுல் வெள்ளை, கருப்பு காய்களை நகர்த்தி விளையாடும் விளையாட்டு.
அதை விளையாடும் போதுதான் செங்குத்தான பார்கோடுக்கு பதிலாக கட்டம்கட்டமான வடிவத்தைப் பயன்படுத்தினால் அதிக தகவல்களை வழங்க முடியும் என்ற சிந்தனை அவருக்கு வந்திருக்கிறது.
இதை அவரது குழுவுடன் பகிர்ந்துகொண்டார். அவர்களது உழைப்பில் உருவானதுதான் QR கோட். ஆனால் இது இன்று உலக அளவில் பிரபலமாகும் என்றோ, சாமனிய மனிதர்கள் வரை சென்றடையும் என்றோ அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.
செல்போன்களில் கேமரா வந்தபிறகு மாற்றங்கள் மின்னல் வேகமெடுத்தது. QR கோடை ஸ்கேன் செய்ய சிறந்த கருவி கேமராதான். ஜப்பானின் ஷார்ப் என்ற செல்போன் நிறுவனம் முதல் முதலாக QR ஸ்கேன் செய்யும் தொழில்நுட்பத்தை மொபைலில் கொண்டுவந்தது. இனி எல்லாரும் தங்கள் கையில் QR ஸ்கேன் செய்யும் கருவியோடு இருக்கிறார்கள்.
2010 முதல் QR தொழில்நுட்பம் வளர்ந்து வந்தாலும் 2020 கோவிட் தொற்றின் போது அதிவேகமெடுத்தது.
ஒரு கடையில் ரூபாய் தாளை தொடாமலே பணம் கொடுக்க. ஹோட்டலில் எதையும் தொடாமலே மெனுவை தெரிந்துகொள்ள. மெட்ரோவில் டிக்கெட் வாங்க என எல்லாமே QR மயமானது.
தொற்று நோய் பரவல் முடிந்துவிட்டாலும் நமது வசதிக்காக இன்றும் QR பயன்படுத்தி வருகிறோம். எல்லா கொடுக்கல் வாங்கலும் QR தரும் நம்பகத்தன்மை மீது தான் நடக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust