Earth Canva
அறிவியல்

வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைட் கண்டுபிடிப்பு : ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன?

பூமியின் வளிமண்டலத்தில் நைட்ரஜன், ஆக்சிஜன், கார்பன் டை ஆக்ஸைட் என மூன்று முக்கிய வாயுக்கள் நிறைந்திருக்கின்றது. அதே போன்ற வளிமண்டல அமைப்பை தேடிக் கொண்டிருந்த போது, நம் சூரிய குடும்பத்துக்கு வெளியே ஒரு கோளின் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

Gautham

மனித இனத்தின் தோற்றம் முதல் இன்று வரை, ஒவ்வொரு நாளும் விண்வெளியும் அண்ட பேரண்டங்களும் தனக்குள் ஒளித்து வைத்திருக்கும் ரகசியங்களைக் காட்டி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டே தான் இருக்கிறது.


ஒரு உயிர் வாழ வேண்டுமானால் காற்று மிக அவசியம். ஆகையால் தான் பூமியைப் போல வளிமண்டல அமைப்பு வேறு ஏதேனும் கோள்களில் இருக்கின்றனவா என அறிவியல் உலகம் தொலைநோக்கிகள், ஆராய்ச்சி வாகனங்கள், விண்கலங்கள் என ஒட்டுமொத்த விண்வெளியையே சலித்துக் கொண்டிருக்கிறது.

பூமியின் வளிமண்டலத்தில் நைட்ரஜன், ஆக்சிஜன், கார்பன் டை ஆக்ஸைட் என மூன்று முக்கிய வாயுக்கள் நிறைந்திருக்கின்றது. அதே போன்ற அமைப்பு வளிமண்டல அமைப்பை தேடிக் கொண்டிருந்த போது, நம் சூரிய குடும்பத்துக்கு வெளியே ஒரு கோளின் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கான ஆதாரத்தை அண்ட பேரண்டப் புகழ்பெற்ற ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி உறுதி செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி கோள் உள்ள சூரியக் குடும்பத்துக்கு வெளியே, ஒரு பெரிய வாயு கோள் சூரியனைப் போன்றதொரு நட்சத்திரத்தைச் சுற்றிக் கொண்டு இருப்பதாகவும், அக்கோள் 700 ஒளி ஆண்டு தொலைவில் இருப்பதாகவும் நாசா வெப் என்கிற அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அக்கோளின் பெயர் WASP - 39 B என்றும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அது என்ன WASP - 39 B?

வியாழன் கோளின் நிறையில் கால் பங்கு மட்டுமே அல்லது கிட்டத்தட்ட சனி கிரகத்தின் நிறை கொண்ட இக்கோள், சுமார் வியாழன் கோளை விட 1.3 மடங்கு பெரிதாக இருப்பதாக நாசா குறிப்பிடுகிறது. இக்கோளின் வெப்ப நிலை சுமார் 1,600 டிகிரி ஃபாரன்ஹீட் அல்லது 900 டிகிரி செல்ஷியஸ் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இக்கோள், தன் நட்சத்திரத்தை மிக அருகிலிருந்து சுற்றுகிறது. நான்கு பூமி நாட்களுக்குள் இக்கோள் தன் மைய நட்சத்திரத்தை ஒரு முறை சுற்றி வந்துவிடுகிறது.

WASP - 39 B கோள் கடந்த 2011ஆம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்டது. நாசாவின் ஹெப்பல் மற்றும் ஸ்பிட்சர் தொலைநோக்கிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இக்கோளில் நீராவி, சோடியம், பொட்டாஷியம் போன்றவை இருப்பதாக கூறப்பட்டது. இப்போது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் உதவியோடு இக்கோளில் கார்பன் டை ஆக்ஸைட் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் பொருத்தப்பட்டு இருந்த இன்ஃப்ரா ரெட் ஸ்பெக்டோகிராப் சாதனத்தைப் பயன்படுத்தி WASP - 39 B கோளைக் கண்காணித்த போது, 4.1 மைக்ரான் முதல் 4.6 மைக்ரான் வரையான பகுதியில், அக்கோளின் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நம் சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள் ஒன்றில் கார்பன் டை ஆக்ஸைட் கண்டுபிடிப்பது இதுவே முதல் முறை.

ஒரு கோளின் வளிமண்டலத்தில் என்ன மாதிரியான வாயுக்கள் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமானது, அப்போது தான் அக்கோள் எப்படி உருவானது, எப்படி மேம்பட்டு வந்தது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?