aliens  NewsSense
அறிவியல்

'ஏலியன் சிக்னலாக இருக்கலாம்' : சர்ச்சையான சீன ஆய்வு - என்ன, எங்கே?

Gautham

பூமியில் வாழும் மனித இனம் எப்போதும் மற்ற கோள்களில் ஏதேனும் உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனவா என்கிற கேள்விக்கு விடை காண முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

சீனா ஸ்கை ஐ என்கிற பெயரில் ஒரு பிரமாண்ட தொலைநோக்கியை நிறுவி ஏலியன் சிக்னல்கள் தொடர்பாக ஆராய்ந்து வருகிறது. அத்தொலைநோக்கி, ஏலியன்கள் வாழ்ந்து வருவதற்கான சிக்கல்களைக் கண்டுபிடித்ததாக ஓர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. ஆனால் அவ்வறிக்கை திடீரென வலைதளங்களிலிருந்தும் நீக்கப்பட்டது.

ராட்சத ரேடியோ தொலைநோக்கியான ஸ்கை ஐ, பூமியைத் தவிர மற்ற கோள்களில் உயிர்கள் வாழ்ந்து வருவதற்கான மின்காந்தப் புலன் சிக்கல்களைக் கண்டுபிடித்ததாகச் சீன அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி டெய்லி'-ல் செய்தி வெளியானது.

Aliens

பூமிக்கு வெளியே மற்ற கோள்களில் வேறு சில உயிர்கள் வாழ்ந்து வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக, தொழில்நுட்ப ரீதியிலான தடயங்கள் இருப்பதாகப் பிரசுரமான அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

என்ன ஆனதோ ஏதானதோ தெரியவில்லை, அவ்வறிக்கை திடீரென புதன்கிழமை சீன அரசின் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி டெய்லி வலைத்தளத்திலிருந்து நீக்கப்பட்டதாக டைம்ஸ் பத்திரிகை கூறியுள்ளது.

பெய்ஜிங்கின் நார்மல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இக்கண்டுபிடிப்பை மேற்கொண்டு ஆராய்ந்து வருவதாக இண்டிபெண்டன்ட் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

aliens

ஸ்கை ஐ ரேடியோ தொலைநோக்கி கண்டுபிடித்தது, பூமியில் இருக்கும் ரேடியோக்களின் இடையூறுகளாக இருக்கலாம் என மேற்கூறிய பல்கலைக்கழகத்தின் முதன்மை விஞ்ஞானி சாங் டோன்ஜே (Zhang Tonjie) கூறியுள்ளார்.

மேலும், அந்த சந்தேகத்துடைய சிக்னல் பூமியிலிருந்து வந்த மற்ற இடைமறிக்கப்பட்ட ரேடியோ சிக்னலாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிற போதிலும், அதை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு அதிக நாட்கள் தேவைப்படும், அது ஒரு நீண்ட நெடிய செயல்முறை என அவர் விளக்கினார்.

SETI (search for extraterrestrial intelligence) என்று அழைக்கப்படும் எலியன்களைக் குறித்து ஆராயும் குழுவைச் சேர்ந்த டான் வெர்திமெர் (Dan Werthimer) சீனாவில் உள்ள நார்மல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களோடு இணைந்து பணியாற்றி வருகிறார். இவர் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்.

Aliens

ஸ்கை ஐ மூலம் கண்டுபிடிக்கப்பட்ட சிக்னல்கள், ஏலியன்களின் சிக்னல்களாக இருக்கலாம் என்கிற சீனாவின் வாதத்தை மறுக்கிறார் அவர். பொதுவாகவே இதுபோன்ற ரேடியோ சிக்னல்கள், பூமியிலிருந்து வந்தவையாகத் தான் இருக்கும். பூமியில் ரேடியோ அலைவரிசை மாசுபாடு காரணமாக இது ஏற்பட்டிருக்கலாம் ஆனால் அது எலியன்களால் அல்ல என ஸ்பேஸ்.காம் என்கிற வலைத்தளத்திடம் கூறியுள்ளார் டேன்.

பூமி கோளின் மேற்பரப்பிலிருந்த படி SETI கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வது மிகவும் சிரமமாக இருக்கிறது. அந்த அளவுக்குப் பூமியில் ரேடியோ அலைவரிசை மாசுபாடு அதிகமாக இருக்கிறது. பூமியில் நிறைய டிரான்ஸ்மிட்டர்கள் மற்றும் செயற்கைக் கோள்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. எனவே சில பல ரேடியோ அலைவரிசைகளை SETI அமைப்பால் பயன்படுத்தவே முடியாத அளவுக்கு மாசடைந்துள்ளதாக டேன் கூறியுள்ளார்.

சுமார் 500 மீட்டர் விட்டம் கொண்ட இந்த ராட்சத ரேடியோ தொலைநோக்கி, கடந்த 2020ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. விண்வெளியில் உள்ள மற்ற கோள்களில் ஏலியன்கள் இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பதே இதன் நோக்கம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?