மனித பரிணாம வளர்ச்சி Twitter
அறிவியல்

மனித பரிணாம வளர்ச்சி மாறப் போகிறது ஏன் தெரியுமா? - அதிர்ச்சி தகவல்

NewsSense Editorial Team

காலநிலை மாற்றத்தால் வரலாற்றில் மனிதர்கள் பல்வேறு புதிய வாழ்விடங்களில் வாழப் பழகிக் கொண்டனர் மற்றும் ஏற்றுக் கொள்ளத் தொடங்கினர்.

பல்வேறு வானியல் காரணிகளால் காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டன. அதில் புவியின் அட்ச ரேகை மாறியது, சூரியனைச் சுற்றி வரும் புவியின் சுற்று வட்டப் பாதையில் மாற்றம் ஏற்பட்டது, சூரியனிலிருந்து வரும் கதிர்வீச்சில் எவ்வளவு புவியை வந்தடைகிறது... போன்ற பல்வேறு காரணங்களால் இந்த காலநிலை மாற்றங்கள் நிகழ்ந்தன என நேச்சர் என்கிற சஞ்சிகையில் ஓர் ஆய்வு பிரசுரமாகியுள்ளது.

இந்த மாற்றங்கள் தான் பனி யுகத்துக்கும், வெப்பமான இன்டர்கிலேஷியல் காலத்துக்கு எல்லாம் வழிவகுத்ததாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த காலநிலை மாற்றங்கள் தான் உணவு எங்கே கைக்கு எட்டும் தூரத்தில் கிடைக்கும், எங்குப் புதிதாகக் குடியேற வேண்டும், எந்த வாழ்விடத்தைப் புதிதாக ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை எல்லாம் தீர்மானித்தன என்று அந்த ஆய்வு கூறுகிறது.

காலநிலை மாற்றம்

"சில பழங்கால பல இனக் குழுக்களைச் சேர்ந்த மனிதர்கள், பல்வேறு காலநிலையை விரும்பினாலும், வானியல் காரணிகளால் புவியின் அட்சரேகை மாறியது மற்றும் புவியின் சுற்று வட்டப்பாதை மாறியதால் ஏற்பட்ட காலநிலை மாற்றங்களுக்கு அவர்களது வாழ்விடங்கள் அம்மாற்றங்களை ஏற்று விடைகொடுப்பதாக இருந்தன" என சயின்ஸ் அலர்ட்.காம் என்கிற வலைத்தளத்திடம் கூறியுள்ளார் தென்கொரியாவின் புசன் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த காலநிலை இயற்பியலாளரான ஆக்செல் டிம்மெர்மேன்.

ஹோமோ நியாண்டர்தலென்சிஸ், ஹோமோ எரெக்டஸ், ஹோமோ ஹைடெல்பெர்கென்சிஸ், ஆப்பிரிக்க ஹோமோ, ஹோமோ ஹாபிலிஸ் மற்றும் ஹோமோ எர்காஸ்டர், ஹோமோ சேபியன்ஸ் போன்ற மனித இனங்கள் தங்களது சுற்றுச்சூழலைத் திட்டமிட்டன.

காலநிலை மாற்றம் மற்றும் மனித பரிணாம வளர்ச்சி ஆகியவை தான் முந்தைய ஆராய்ச்சி தலைப்புகளாக இருந்தன.

நன்கு ஆராய்ந்து அதன் பழமை கணக்கிடப்பட்ட புதைபடிம எச்சங்கள் மற்றும் அகழாய்வு கலைப் பொருட்களின் தரவுகளை ஒருங்கிணைத்து, ஆராய்ச்சியாளர்கள் நிரப்பப்படாமல் இருந்த இடங்களை நிரப்பினர். கடந்த 20 லட்சம் ஆண்டுகளின் புவியின் காலநிலை வரலாற்றைத் திரும்பப் பெற ஆய்வாளர்கள் ஒரு சூப்பர் கம்ப்யூட்டரைக் கூட பயன்படுத்தினர்.

அவர்களின் கண்டுபிடிப்புப் படி ஹோமோ எரெக்டஸ் மற்றும் ஹோமோ செபியன்ஸ் ஆகிய இரு மனித இனக்குழுக்களுக்குப் பெரிய சுற்றுச்சூழல்கள் இருந்துள்ளன.

தொடக்க கால ஆப்பிரிக்க ஹோமோ செபியன்கள் கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவில் தஞ்சமடைந்துள்ளனர். நியாண்டதர்தால்கள் ஐரோப்பாவில் அதிகம் காணப்பட்டனர்.

ஹோமோ ஹைடெல்பெர்கென்சிஸ் இனக்குழு தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா, யூரோஏஷியா என்றழைக்கப்படும் ஐரோப்பிய மற்றும் ஆசிய பகுதிகளில் வாழத் தொடங்கினர்.

இந்த ஐந்து மனித இனக்குழுக்களுக்கும் ஒரு குறிப்பிட்ட வாழ்விட சூழல்களில் வாழ வேண்டும் என்கிற விருப்பு வெறுப்புகள் இருந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் காலநிலை மாற்றத்துக்கு தக்கவாறு தங்கள் வாழ்வை மாற்றிக் கொண்டனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?