World disaster Twitter
அறிவியல்

மனிதக் குலத்தை அழிக்கப் போகும் பயங்கரங்கள் எவை தெரியுமா?

Govind

ஹாலிவுட் படங்கள் பூமி அழிவதைப் பற்றி விரிவாகக் காட்டுகின்றன. அதில் உலகம் முழுவதிலும் உள்ள நகரங்கள் லாஸ் ஏஞ்செல்லஸ், பாரிஸ், தில்லி துவங்கி டோக்கியோ, கேப்டவுண், சிட்னி, பிரேசிலியா வரை சுக்கு நூறாகின்றன. சில படங்களில் வேற்றுக்கிரக தாக்குதல். சிலவற்றில் கடல் அலைகள் உலகை மூழ்கடித்தல் அல்லது தொற்று நோயால் மனிதர்கள் சோம்பிகளாக மாறுதல் என்று ஏதோ ஒரு வகையில் பேரழிவின் கதைகளைச் சொல்கின்றன.

இருத்தலியல் அபாயங்கள்

ஒரு சிறு கோளோ இல்லை வால்நட்சத்திரமோ அல்லது அணுசக்திப் போரோ மனிதக்குலத்தை அழிக்கப் போதுமானவை. இவை வெறும் சினிமாக் காட்சிகளாக இருந்தாலாம் நம் மனதில் பதியும். இருப்பினும் படம் முடிந்த பிறகு சில நாட்களில் நாம் அந்த அழிவு சிந்தனையிலிருந்து விடுபட்டு விடுவோம்.

ஆனால் உண்மையில் உலகெங்கிலும் உள்ள பல ஆராய்ச்சியாளர்கள் இத்தகைய உலக அழிவுக்கான சாத்தியக்கூறுகளுடன்தான் தங்கள் நாட்களைக் கழிக்கிறார்கள். அவர்களின் பணி எளிதானது அல்ல. ஏலியன்கள் படையெடுப்புகள் முதல் பேரழிவு தரும் சிறுகோள் தாக்குதல் வரை பூமிக்கு உள்ள அபாயங்களை அவர்கள் ஆய்வு செய்கிறார்கள். இவற்றில் சில ஆபத்துகள் மற்றவற்றை விட நம்பத்தகுந்தவை என்று அவர்களிடையே ஒருமித்த கருத்து உள்ளது.

இந்த அபாயத்திற்கு ஆராய்ச்சியாளர்கள் வைத்திருக்கும் பெயர் "இருத்தலியல் அபாயங்கள்". இங்கே குறிப்பிடப்படும் சில அபாயங்கள் ஒரு மாதிரி மட்டுமே. அவை அநேக ஆராய்ச்சியாளர்கள் மனதில் இருக்கும் அபாயங்களில் சில.

earth

அணு ஆயுதப் போர்

இரண்டாம் உலகப் போரின் முடிவில் அமெரிக்க வீசிய சிறு அணுக்குண்டு ஜப்பானின் யூரேஷிமா, நாகசாகியில் ஏற்படுத்திய பேரழிவு பாதிப்புகளை நாம் அறிவோம். இன்றைக்கு மனிதக் குலத்தின் உயிர்வாழ்வதற்கான அபாயங்களில் இதுவே மிகப்பெரும் சாத்தியத்தோடு உள்ளது.

உக்ரைன் போரில் ரஷ்ய அதிபர் தனது அணு ஆயுதங்களைத் தயார் நிலையில் இருக்குமாறு உத்திரவிட்டார். மறுபுறம் நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் ஒரு மோதல் உருவனால் அது 3ஆம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என்று அமெரிக்க அதிபர் முதல் பலரும் சொல்கிறார்கள்.

இன்றைக்கு அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல், பாகிஸ்தான், சீனா, இந்தியா, வட கொரியா போன்ற நாடுகள் அணு ஆயுதங்களை வைத்திருக்கின்றன. மேலும் சில நாடுகள் அதிக செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை உற்பத்தி செய்தால் நாடுகளுக்கிடையே பதட்டங்கள் அதிகரிக்கும். அப்போது அணு ஆயுதப் போருக்கான அச்சுறுத்தல் அதிகரிக்கிறது.

பூமியின் மக்கள் தொகையில் பெரும்பகுதியை அணு ஆயுதங்கள் அழிக்கலாம் என்று பல மாடலிங் அல்லது மாதிரிகள் ஒருமித்த கருத்தினைக் கூறுகின்றன. இதனால் குளிர்காலம், வெப்பநிலை, உணவு உற்பத்தி அனைத்தும் பெரும் பாதிப்பை அடையும். சூரிய ஒளி பூமியை அடைவதை அணுக்கரு புகை தடுக்கும். எனினும் சிலர் மட்டும் தப்பிப் பிழைக்கலாம். அவர்களது வாழ்க்கையும் நரகமாகவே இருக்கும்.

Nuclear war

உலகளாவிய தொற்று நோய்கள் - பேண்டமிக்

உயிரி தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு ஆராய்ச்சியாளர்கள் கணித்திருக்கும் மற்றொரு இருத்தலியல் ஆபத்து. உயிரித் தொழில்நுட்பத்தின் துஷ்பிரோயகம் கொடிய, விரைவாகப் பரவும் நோய்க்கிருமிகளை உருவாக்குகிறது. இந்த நூற்றாண்டில் மனிதனால் உருவாக்கப்பட்டவற்றில் முக்கியமானது உயிரியல் என்றால் அதிலிருந்து நமக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் மிகப்பெரியதாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இயற்கையான நோய்க்கிருமியைக் காட்டிலும் குறிப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு நோய்க்கிருமியானது கொடியதாகவும், உலக மக்கள் தொகையின் பெரும்பகுதியைக் கொல்லக் கூடியதாகவும் இருக்குமென்று ஆக்ஸ்போர்டின் உயிரியில் பேராசிரியர் நெல்சன் கூறுகிறார்.

இயற்கையான நோய்க்கிருமி எவ்வளவு பயங்கரமாக இருந்தாலும் அதற்கு நோக்கமென்று எதுவுமில்லை. ஆனால் மனிதன் உருவாக்கும் நோய்க்கிருமி ஒரு நோக்கத்தோடு உலகை அழிக்கும் வல்லமை கொண்டது.

கோவிட் 19 கிருமி ஒரு ஆய்வகத்தில் உருவாக்கப்படவில்லை என்று அனைத்து ஆதாரங்களும் கூறுகின்றன. அதனால் இத்தகைய நிகழ்வு நடப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றே நெல்சன் நம்புகிறார்.

covid Situation

காலநிலை மாற்றம்

மனித உயிர்வாழ்விற்கான அச்சுறுத்தல்களில் காலநிலை மாற்றத்தைத் தவிர்க்க முடியாது. இது ஏற்கனவே நமது கோளில் பல உயிரினங்களின் வீழ்ச்சி மற்றும் அழிவை நோக்கி உந்தித் தள்ளுகிறது. இது மனிதக் குலத்திற்கும் நடக்குமா?

காலநிலை மாற்றத்திற்கான விளைவுகளில் உணவுப் பாதுகாப்பின்மை, நீர்ப் பற்றாக்குறை, தீவிர வானிலை நிகழ்வுகள் முக்கியமானவை. பிராந்திய அளவில் இவை மனித உயிர் வாழ்வைப் பெருமளவில் அச்சுறுத்துகின்றன. சென்னையில் கடந்த பத்தாண்டுகளில் இருமுறை பெரு வெள்ளம் வந்திருக்கிறது. அதே போலப் பல நாடுகளில் தொடர் வறட்சி, தொடர் வெள்ளம் போன்றவை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

இருத்தலியல் ஆபத்தைப் பெருக்கும் ஒன்றாகக் காலநிலை மாற்றம் இருக்கிறது. புவி வெப்பமயதாலை குறைப்பதற்கு உலக நாடுகள் சுணக்கம் காட்டுவதிலிருந்து இது அரசியல் துறையோடும் உறவு கொண்டிருக்கிறது. எனவே காலநிலை மாற்றம் இந்த உலகை மிகவும் ஆபத்தான இடமாக மாற்றுகிறது.

காலநிலை மாற்றத்தின் விளைவுகளான உணவு பற்றாக்குறை, நீர்ப் பற்றாக்குறை போன்றவை சர்வதேச பதட்டங்களை உருவாக்குகிறது. அதனால் கூட நாடுகளிடையே போரோ இல்லை அணுசக்தி போரோ தூண்டப்படலாம்.

Climate Change

ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கும் இருத்தலியல் அபாயங்கள்

ஒரு அழிவு மற்றொரு அழிவைத் தூண்டுவது இருத்தலியல் அபாயங்கள் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருப்பதைக் காட்டுகிறது. பெரும்பாலான மனிதக் குல நாகரீகங்கள், அவை சிந்து சமவெளி நாகரீகமோ, மெசபடோமிய நாகரீகமோ பல காரணங்களால் அழிந்து போனதை வரலாறு நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. எனவே அணுசக்தி போர், தொற்று நோய், காலநிலை மாற்றம் போன்றவை நூற்றுக்கு நூறு உலகை அழிக்காவிட்டாலும் ஒன்றை ஒன்று தூண்டி அழிவைப் பேரழிவாக மாற்றும் வல்லமை கொண்டது.

ஒரு பேரழிவு நடந்தால் என்ன மிஞ்சும்?

ஒரு பேரழிவு நிகழ்வு பூமியில் சில நூறு அல்லது ஆயிரம் மனிதர்கள் மட்டும் உயிர் பிழைத்தவர்களாக விட்டுச் செல்லக்கூடும். அதன் பிறகு மனிதக்குலம் ஒரு இனம் என்பது கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

ஒரு அழிவு மனிதக் குலத்தின் ஒரு பகுதியை அழிக்கக் கூடும். ஆனால் அதன் விளைவாக உலகளாவிய பாதுகாப்பின்மை மற்றும் மோதலைத் தூண்டலாம்.

இப்படி படிப்படியாகக் கூட அழிவு என்பது ஒன்று சேர்ந்து பேரழிவு நடக்கலாம். அழிவு எப்படி இருக்கும் என்பதைக் கூட கணித்து விடலாம். ஆனால் அரசியல் காரணங்களால் இந்த அழிவுகள் எப்படிக் கைகோர்த்து பேரழிவாக நடக்கும் என்பதைக் கணிப்பது சிரமம். என்றாலும் யதார்த்தத்தில் இந்த வாய்ப்பு நிறையவே இருக்கிறது.

Disaster

தொழில் நுட்ப அபாயம்

தொழில் நுட்ப முன்னேற்றங்கள் கூட மனித இனத்தின் திறனைக் குறைக்கும் ஒன்றாக இருக்கலாம். ஒரு விண்வெளிப் போட்டி, செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, புத்திசாலித்தனமாக ரோபோக்கள் போன்றவை மனிதர்கள் மீது பரவலான கண்காணிப்பைச் சுமத்தலாம்.

மேலும் இவை உடல் ரீதியாகவும், சிந்தனை ரீதியாகவும் நம்மை விஞ்சலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இறுதியில் நாம் மனிதனாக இருப்பதன் பொருள் என்ன என்ற எண்ணத்தையே மாற்றலாம்.

Technology

மனித நேயம்

வரலாறு நம்மிடம் மனிதக் குலத்தின் சரிவையும் ஏற்றத்தையும் விரிவாகப் பதிவு செய்திருக்கிறது. அதிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டோம் என்றால் இருத்தலியல் அபாயங்களை எதிர்கொள்ள முடியும். அதற்கு மக்களும், நிறுவனங்களும், உலகநாடுகளும் ஒன்று படவேண்டும். அப்போது மட்டுமே இத்தகைய பேரழிவுகளைத் தவிர்க்க முடியும். அல்லது ஒன்றுபட்டு எதிர்த்துப் போராட முடியும்.

கோவிட் 19 தொற்று நோயையே எடுத்துக் கொள்ளுங்களேன். சீனாவிலிருந்து துவங்கி அமெரிக்கா வரை அது கோரத்தாண்டவம் ஆடியது.

ஆனால் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அந்த நோயை எதிர்த்து உலகம் போராடியது. பல நாடுகள் தடுப்பு மருந்துகளைக் கண்டு பிடித்தன. கணிசமான மக்கள் தடுப்பூசிகளைப் போட்டிருக்கிறார்கள். சர்வதசே சமூகம் ஒன்றுபட்டுப் போராடியதால் இதைச் சாதிக்க முடிந்திருக்கிறது.

இந்த ஒத்துழைப்பு தொடருமா, தொடராதா என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியாது. உக்ரைன் போர் அதற்கு ஒரு சான்று. எனினும் ரஷ்யாவில் கூட கடும் அடக்குமுறை சட்டங்கள் இருப்பினும் பலர் போருக்கு எதிராகக் குரல் கொடுத்து சிறையில் அடைபட்டிருக்கின்றனர். பலர் நாட்டை விட்டு வெளியேறியிருக்கின்றனர். இந்த மனிதநேயம் பெரும்பாலான மக்கள், நாடுகளிடையே பரவும் போது பேரழிவுகளைச் சந்திப்பது சாத்தியமாகலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?