இந்த உலகம் இயங்குவது குறித்த மர்மங்கள் புராதான மனிதன் தொட்டு இன்றைய நவீன மனிதன் வரை தொடர்கிறது. அதிலும் வேற்றுக்கிரக வாசிகள் நாம் வசிக்கும் பூமிக்கு வந்தனரா என்பது ஆர்வமூட்டும் ஒரு மர்மக்கதை. குறிப்பாக அமெரிக்காவில் இக்கதைகள் பல்வேறு புனைவுகளாக, திரைப்படங்களாக வந்து கொண்டே இருக்கின்றன. இன்றளவும் இது குறித்த செய்திகள் அமெரிக்க மக்களிடையே பிரபலம்.
UFO
ஒரு பிரபலமான பொருளில் யூஎஃப்ஓ என்பது சந்தேகத்திற்குரிய வேற்றுக்கிரக விண்கலத்தைக் குறிக்கிறது. இருப்பினும் அதன் பொருள் மற்றும் வரையறை விளங்கிக் கொள்ள இயலாத தன்மையினைக் கொண்டிருக்கிறது. யூஎஃப்ஓ-வின் காட்சிகள் வரலாறு முழுவதும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பதிவாகியுள்ளன. இது இயல்பாகவே மற்ற கிரகவாசிகள் பூமிக்கு வருகை தந்தனரா என்ற கேள்விகளை எழுப்புகிறது. இந்த ஆர்வத்தின் அடிப்படை இரண்டாம் உலகப் போருக்கு பின்பு வளர்ச்சியடைந்த ராக்கெட் விண்வெளித் துறையில் இருக்கிறது. இந்த ஆர்வமே யூஎஃப்ஓ குறித்த ஏராளமான திரைப்படங்கள் மற்றும் புத்தகங்கள் வருவதற்கு காரணம்.
பறக்கும் தட்டுக்கள்
முதல் நன்கு அறியப்பட்ட UFO பார்வை 1947 இல் நிகழ்ந்தது. தொழிலதிபர் கென்னத் அர்னால்ட் தனது சிறிய விமானத்தில் பறக்கும் போது வாஷிங்டனில் உள்ள மவுண்ட் ரெய்னர் அருகே ஒன்பது அதிவேக பொருட்களின் குழுவைப் பார்த்ததாகக் கூறினார்.
அர்னால்ட் அந்த பிறை வடிவ பொருட்கள் அடங்கிய குழுவின் வேகத்தை மணிக்கு பல ஆயிரம் மைல்கள் என மதிப்பிட்டார். மேலும் அவை "தண்ணீரில் தட்டிச் செல்லும் தட்டுகள் போல" நகர்ந்தன என்றார். அதை செய்தியாக்கிய நாளிதழ்கள் அவற்றை பறக்கும் தட்டுக்கள் என்று அழைத்தன.
ரோஸ்வெல் காட்சி
அர்னால்ட் பறக்கும் பொருட்களைப் பார்த்த அதே ஆண்டு, பண்ணையார் மேக் பிரேசல், நியூ மெக்சிகோவில் உள்ள ரோஸ்வெல்லில் உள்ள ராணுவ விமான நிலையத்திற்கு அருகில் 200 கெஜம் நீளமுள்ள மர்மமான சிதைவை கண்டார். இது பறக்கும் தட்டு ஒன்றின் எச்சம் என உள்ளூர் செய்தித்தாள்கள் தெரிவித்துள்ளன. செய்தித்தாள் புகைப்படம் வேறுவிதமாக பரிந்துரைத்திருந்தாலும், இது ஒரு வானிலை பலூன் என்று அமெரிக்க இராணுவம் அதை மறுத்து ஒரு அறிக்கையை வெளியிட்டது.
இதைத்தொடர்ந்து 1950-களில் யூஎஃப்ஓ குறித்த சதிக்கோட்பாடுகள் பல்கிப் பெருகின. செயற்கைத் தோல் மற்றும் அலுமினிய எலும்புகள் கொண்ட பொருட்கள் நியூ மெக்சிகோ மாநில வானத்தில் இருந்து விழுந்ததாக ஒரு செய்தி. அவை அவசரமாக இராணுவ வாகனங்களால் எடுக்கப்பட்டன. முந்தைய ரோஸ்வெல் காட்சியை நம்பியவர்களுக்கு இதை அரசாங்கம் திட்டமிட்டு மறைப்பது போலத் தோன்றியது. ஆனால் நடந்த கதையோ வேறு. விமானங்களில் இருந்து அவசரகாலத்தில் விமானிகள் தப்பிப்பதற்கு இத்தகைய டம்மி உருவங்களை கீழே பறக்க விட்டதாக இராணுவம் கூறியது.
ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ரோஸ்வெல் இடிபாடுகள் இராணுவத் திட்டத்தின் ஏற்பாடு என்ற உண்மை வெளிவந்தது. அதாவது ரகசிய அணு உளவுத் திட்டமான மொகுலின் ஒரு பகுதி என அதை ஒப்புக் கொண்டு அமெரிக்க இராணுவம் அறிக்கை வெளியிட்டது.
Project Blue Book
இக்காலத்தில்அடையாளம் காணப்படாத வான்வழி நிகழ்வுகளின் பார்வை அதிகரித்தது. மேலும் 1948 ஆம் ஆண்டில் அமெரிக்க விமானப்படை இந்த வான்வழி மர்மங்கள் குறித்த விசாரணையை ப்ராஜெக்ட் சைன் என்று தொடங்கியது. அப்போது அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் பனிப்போர் பதற்றம் அதிகரித்து வந்தது. மேலும் அமெரிக்க விசாரணையில் ஈடுபட்டவர்களின் ஆரம்பக் கருத்து என்னவென்றால், யுஎஃப்ஒக்கள் பெரும்பாலும் அதிநவீன சோவியத் விமானங்களாக இருக்கலாம். இருப்பினும் சில ஆராய்ச்சியாளர்கள் அவை வேற்று கிரக கருதுகோள் (ETH) என்று அழைக்கப்படும் பிற உலகங்களிலிருந்து வந்த விண்கலங்களாக இருக்கலாம் என்று பரிந்துரைத்தனர்.
ஒரு வருடத்திற்குள் யூஎஃப்ஓ பற்றிய அமெரிக்க விமானப்படையின் பிராஜக்ட் சைன் பிராஜக்ட் கிரட்ஜ் என்று மாற்றப்பட்டது. 1952-ம் ஆண்டில் அத்திட்டம் நீலப் புத்தக பிராஜக்ட் என்று மாற்றப்பட்டு வெகு காலம் ஆய்வு செய்தது. இது ஓஹியோ மாநிலத்தில் உள்ள டேட்டனில் இருக்கும் ரைட் பாட்டர்சன் விமானப்படைத் தளத்தில் அமைக்கப்பட்டது. 1952 முதல் 1969 வரை நீலப் புத்தகப் புராஜக்ட் திட்டத்தின் படி 12,000 நிகழ்வுகள் ஆராயப்பட்டன. அந்த நிகழ்வுகள் இரண்டாக வகைப்படுத்தப்பட்டன. முதலாவது மனிதனால் உருவாக்கப்பட்ட வானியல், வளிமண்டலம் குறித்தான பொருட்கள். இரண்டாவது வகை அடையாளம் காணப்படாத பொருட்கள் என வகைப்படுத்தப்பட்டது. மொத்தத்தில் இரண்டாவது வகையின் சதவீதம் 6 மட்டுமே.
யுஎஃப்ஒக்களின் படங்கள் மற்றும் புகைப்படங்களையும் அவர்கள் மதிப்பாய்வு செய்தனர்
என்ன விளக்கம் கொடுத்தாலும் அமெரிக்க மக்களிடையே யூஎஃப்ஓ குறித்த உணர்ச்சிகரமான தேடல் அதிகரித்துக் கொண்டே இருந்தது. 1952 ஆம் ஆண்டின் கோடையில் வாஷிங்கடன் டி.சி.யில் உள்ள தேசிய விமான நிலையத்திற்கு அருகில் ஒரு தொடர் ரேடார் மற்றும் காட்சிப் பார்வைகள் நிகழ்ந்தன.
உண்மையில் இந்த நிகழ்வுகள் காற்றில் வெற்றநிலை குறித்து நகரத்தில் ஏற்படும் மாற்றங்களைக் குறித்து நடத்தப்பட்டவை. இருந்த போதிலும் இந்த விளக்கத்தை பலர் ஏற்கவில்லை. இதற்கிடையில் யூஎஃப்ஓ குறித்த புதிய செய்திகள், அறிக்கைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதில் ஒரு சாதனையையே படைத்தது.
இந்த நிகழ்வுகளை ஆராய ஒரு நிபுணர் குழுவை நிறுவுவதற்கு அமெரிக்க அரசாங்கத்தை மத்திய புலனாய்வு அமைப்பு தூண்டியது. அதன்படி குழுவானது தலைவர் எச்.பி. ராபர்ட்சன், கலிஃபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் பசடேனா, கலிஃபோர்னியாவில் உள்ள இயற்பியலாளர் மற்றும் பிற இயற்பியலாளர்கள், ஒரு வானியலாளர் மற்றும் ராக்கெட் பொறியாளர் ஆகியோரை உள்ளடக்கியது. ராபர்ட்சன் குழு 1953 இல் மூன்று நாட்கள் கூடி, இராணுவ அதிகாரிகளையும் புராஜெக்ட் நீலப் புத்தகம் தலைவரையும் பேட்டி கண்டது. யுஎஃப்ஒக்களின் படங்கள் மற்றும் புகைப்படங்களையும் அவர்கள் மதிப்பாய்வு செய்தனர்.
அவர்களின் முடிவுகளின்படி (1) 90 சதவீத பார்வைகள் வானியல் மற்றும் வானிலை நிகழ்வுகள் (எ.கா., பிரகாசமான கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள், விண்கற்கள், அரோராக்கள், அயன் மேகங்கள்) அல்லது விமானம், பலூன்கள், பறவைகள் மற்றும் தேடுதல் விளக்குகள் போன்ற பூமிக்குரிய பொருட்களால் நடந்தவை. (2) மேலும் இந்த யூஎஃப்ஓ நிகழ்வுகளால் வெளிப்படையான பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை; மற்றும் (3) வேற்று கிரக வாசிகளின் பறக்கும் தட்டுக்களை அங்கீகரிக்க எந்த ஆதாரமும் இல்லை. இருப்பினும் இக்குழுவின் அறிக்கையின் சில பகுதிகள் 1979 வரை இரகசியமாக வைக்கப்பட்டன. மேலும் இந்த நீண்ட கால ரகசியம் அரசாங்கத்தின் மூடிமறைப்பு பற்றிய சந்தேகங்களைத் மக்களுக்கு ஏற்படுத்தியது.
இவ்வளவு செலவு செய்து வேற்றுக்கிரக பறக்கும் தட்டுக்கள் பற்றிய அறிவியல் உண்மைகளை மக்களுக்கு எடுத்துக் கூறினாலும் மக்கள் அவற்றை நம்புவதாக இல்லை. ஏன்? அடுத்த பாகத்தில் பார்ப்போம்.
- தொடரும்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust