மனித மூதாதையர்கள்  Twitter
அறிவியல்

ஹாபிட் : மனித குல மூதாதையர்கள் இன்னும் இந்தோனேசியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா?

மனித குல வரலாற்றில் ஹாபிட்டுகள் வாழ்ந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஹாபிட் போன்ற மனித மூதாதையர்கள் இந்தோனேசிய தீவில் இன்றும் மறைந்திருக்கலாம் என்கிறார் ஒரு வரலற்றறிஞர்

NewsSense Editorial Team

ஹாபிட் என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் என்ன? ஜே.ஆர்.ஆர். டோல்கீனின் நாவல்களில் ஹாபிட்ஸ் என்பது ஒரு கற்பனையான இனம். அவர்கள் சராசரி மனித உயரத்தில் பாதிதான் இருப்பார்கள். எழுத்தாளர் டோல்கியன் ஹாபிட்களை பல்வேறு மனித இனமாக அல்லது அதன் நெருங்கிய உறவினர்களாக முன்வைத்தார். எப்போதாவது டோல்கீனின் எழுத்துக்களில் அவர்கள் அரை உயரவாசிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

டோல்கீனின் கற்பனைப்படி அவர்கள் வெறுங்காலுடன் வாழ்கின்றனர். அவர்களின் உள்ளங்கால்கள் இயற்கையாகவே கடினமான தோல் கொண்டது மற்றும் மேல் பக்கம் சுருள் முடியால் மூடப்பட்டிருக்கும். அதனால் அவர்களுக்குக் காலணிகள் தேவையில்லை.

இதையே மேம்படுத்தி நம்மைப் போன்ற ஆனால் மூன்று மூன்றரை அடி கொண்ட மனிதர்கள் வாழ்வதாக "லார்ட் ஆஃப் ரிங்ஸ்" ஹாலிவுட் திரைப்படத்தில் காட்டியிருப்பார்கள். இவையெல்லாம் கற்பனையென்றாலும் மனித குல வரலாற்றில் ஹாபிட்டுகள் வாழ்ந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஹாபிட் போன்ற மனித மூதாதையர்கள் இந்தோனேசிய தீவில் மறைந்திருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

லார்ட் ஆஃப் ரிங்ஸ் கதாப்பாத்திரம்

7,00,000 மற்றும் 60,000 ஆண்டுகளுக்கு இடையில் புளோரஸ் தீவில் ஒரு சிறிய ஆரம்பகால மனிதர் இருந்தார் என்று கருதப்படுகிறது. புளோரஸ் தீவு இப்போது இந்தோனேசியா என்று அறியப்படுகிறது.

ப்ளீஸ்டோசீன் சகாப்தம் என்பது புவியியல் காலகட்டமாகும். இது கடந்த பனி யுகத்தை உள்ளடக்கியது. பனிப்பாறைகள் உலகின் பெரும் பகுதிகளை ஆக்கிரமித்த காலம். ப்ளீஸ்டோசீன் சகாப்தம் அல்லது வெறுமனே ப்ளீஸ்டோசீன் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சகாப்தம் சுமார் 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி 11,700 ஆண்டுகளுக்கு முன்பு முடிந்தது என்று ஸ்ட்ராடிகிராஃபிக்கான சர்வதேச ஆணையம் தெரிவித்துள்ளது.

ஹோமோ ஃப்ளோரெசியென்சிஸ் "புளோரஸ் மேன்"; புனைபெயர் "ஹாபிட்" என்பது சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு நவீன மனிதர்களின் வருகை வரை, இந்தோனேசியாவின் புளோரஸ் தீவில் வசித்து வந்த உயரம் குறைந்த தொன்மையான மனித இனமாகும்.

ப்ளீஸ்டோசீன் காலத்தின் பிற்பகுதியிலிருந்த ஹோமோ ஃப்ளோரெசியென்சிஸ், 'ஹாபிட்' என்ற செல்லப்பெயர் பெற்றது. ஏனெனில் அவை 3 அடி மற்றும் 6 அங்குல உயரம் மட்டுமே இருந்தன. மேலும் வழக்கமான மனிதர்களை விட மூன்றில் ஒரு பங்கு மூளையை மட்டுமே கொண்டிருந்தன.

மனித மூதாதையர்கள்

அவை 12,000 ஆண்டுகளுக்கு முன்பு அவை அழிந்துவிட்டன என்று பல ஆண்டுகளாக ஆய்வுகள் முடிவு செய்தன. ஆனால் இப்போது, ​​இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு மானுடவியலாளர், ஹோம் ஃப்ளோரெசியென்சிஸ் உண்மையில் அழிந்துவிட்டதா என்பது யாருக்கும் தெரியாது என்றும் அவை இன்னும் இந்தோனேசிய தீவில் உயிருடன் இருக்கலாம் என்றும் வாதிடுகிறார்.

ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற மானுடவியலாளர் கிரிகோரி ஃபோர்த், தனது புதிய புத்தகத்தில், புளோரஸ் தீவில் "குரங்கு-மனிதன்" பண்டைய மூதாதையரின் தொடர்புள்ளவையாக இருக்கலாம் என்றும் எப்படியாவது நவீன உலகில் அவை வாழ்ந்து வரலாம் என்று கூறுகிறார்.

"இந்த இனம் எப்போது அழிந்தது என்பது எங்களுக்குத் தெரியாது அல்லது இது அழிந்துவிட்டதா என்பது எங்களுக்குத் தெரியாது" என்று ஃபோர்த் லைவ் சயின்ஸ் பத்திரிகையிடம் கூறினார்.

ஃபோர்த் 1984 இல் தனது ஆராய்ச்சியைத் தொடங்கியதிலிருந்து காட்டில் வாழும் மனித உருவங்கள் பற்றிய பல அறிக்கைகளையும் கதைகளையும் சேகரித்துள்ளார்.

மனித பரிணாம வளர்ச்சி

2003 இல் புளோரஸில் உள்ள லியாங் புவா குகையிலிருந்து 4 அடிக்கும் குறைவான உயரத்திலிருந்த மனித உருவம் கொண்ட உயிரினத்தின் ஒரு பகுதி பெண் எலும்புக்கூட்டை விஞ்ஞானிகள் குழு தோண்டி எடுத்த பிறகு அவர் மேலும் ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார்.

அந்த நேரத்தில்தான் விஞ்ஞானிகள் அந்த மாதிரிக்கு 'ஹாபிட்' என்று பெயரிட்டனர். அந்தப் பெயர் எழுத்தாளர் ஜே.ஆர்.ஆர். டோல்கெய்னின் கற்பனைப் படைப்பு. அப்போதிலிருந்து, ஹாபிட் மக்கள் ஒருபோதும் அழிந்து போகவில்லை என்று வதந்திகள் பரவின.

ஹாபிட் போன்ற மனித மூதாதையர்களை 30க்கும் மேற்பட்டோர் நேரில் பார்த்ததற்கான சாட்சி இருப்பதாக ஃபோர்த் கூறினார்.

"அவர்கள் என்னிடம் கூறியதை இப்படி விளக்கலாம். அது என்னவென்றால், சேபியன்ஸ் அல்லாத ஹோமினின் தற்போதைய காலம் அல்லது மிக சமீபத்திய காலம் வரை புளோரஸில் உயிர் வாழ்ந்தனர்" என்று அவர் கூறினார்.

அவரது புத்தகம் ஒரு குரங்காகவோ அல்லது மனிதனாகவோ தோன்றாத ஒரு சடலத்தைப் பற்றிய கூற்றுகளையும் விவரிக்கிறது. தோண்டி எடுக்கப்பட்ட எச்சம் ஹோமோ ஃப்ளோரெசியென்சிஸின் விளக்கத்துடன் பொருந்துவதாகத் தோன்றியது.

இருப்பினும், உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள் இந்தக் கூற்றை முழுமையாக நம்பவில்லை.

"யதார்த்தமாக, இந்த தீவில் கவனிக்கப்படாத ஒரு பெரிய பழைய மூதாதையர் இனம் இன்றைய நவீன மனித குலம் அதிகம் வாழும் பகுதியில் வாழ்வதற்கான வாய்ப்பு 100 சதவீதம் இல்லை" என்று விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தின் பழங்கால மானுடவியல் நிபுணர் ஜான் ஹாக்ஸ் லைவ் சயின்ஸிடம் கூறினார்.

இதன்படி ஹாபிட்டுகள் தற்காலத்தில் வாழவில்லை என்பதை ஏற்றாலும் அவர்கள் 12 நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்தனர் என்பதை அறிவியல் உலகம் ஏற்கிறது. இந்த உலகமும், மனித குல வரலாறும் எவ்வளவு சுவாரசியமானது மற்றும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கு ஹாபிட் பற்றிய இந்த செய்தி ஒரு சான்று.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?