Mars என்ற பெயர் ஏன் கொடுக்கப்பட்டது தெரியுமா? - செவ்வாய் கிரகம் பற்றிய சுவாரஸ்ய உண்மைகள் Twitter
அறிவியல்

Mars என்ற பெயர் ஏன் கொடுக்கப்பட்டது தெரியுமா? - செவ்வாய் கிரகம் பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்

Antony Ajay R

சூரிய குடும்பத்தில் பூமிக்கு மிக அருகில் உள்ளதும், மர்மங்கள் நிறைந்ததுமானது செவ்வாய் கிரகம்.

தூசி நிறைந்த, குளிரான, பாலைவன உலகமாக தான் செவ்வாய் கிரகத்தை நமக்கு தெரியும். அங்கும் பருவகாலங்கள், பனிக்கட்டிகள், பள்ளத்தாக்குகள், எரிமலைகள் இருப்பதை அறிந்திருக்கிறீர்களா?

சூரிய குடும்பத்திலேயே செவ்வாய் பற்றி தான் நாமும் அதிகமாக அறிந்து வைத்திருகிறோம். அங்கு ஏலியன்கள் இருக்கின்றனவா என்பது குறித்து ஆய்வுகள் நடத்தி வருகிறோம். ரோவர்களை அனுப்பி அதன் மேற்பரப்பில் ஆராய்ச்சி செய்கிறோம்.

ஆனாலும் செவ்வாய் கிரகம் குறித்து விடையற்ற கேள்விகளே நம்மிடம் அதிகமாக இருக்கின்றன.

மனித இனம் பூமியை விட பெரிதாக வளரும் போது செவ்வாயில் குடியேறலாம் என்பது பல அறிவியல் அறிஞர்களின் கனவு. உலகப் பணக்காரர் எலான் மஸ்கும் கூட இதையே கூறிவருகிறார். ஆனால் செவ்வாய் மனிதர்களை வரவேற்க தயாராக இருக்கிறதா?

4.5 பில்லியன் ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் இருக்கும் செவ்வாய் கிரகம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

பல புராணங்கள் மனித வரலாற்றில் செவ்வாய் பற்றி பேசியுள்ளன. ஆனால் அவற்றை விட அற்வியல் பூர்வமாக நாம் அறிந்துள்ள தகவல்கள் சுவாரஸ்யமானவை.

1. செவ்வாயில் தண்ணீர் இல்லாததால் பெரிதும் வறண்டு காணப்படுகிறது. ஆனால் செவ்வாயின் வரலாற்றுப்படி அங்கு இதற்கு முன்னர் தண்ணீர் இருந்திருக்கலாம் என கண்டறிந்துள்ளனர். செவ்வாயில் இருக்கும் பள்ளங்கள் தண்ணீரினிலாயே உருவாகியிருக்கும்.

Mars

2. செவ்வாயில் எவரெஸ்ட் சிகரத்தை விட பல மடங்கு பெரிதான மலை உள்ளது. மவுண்ட் ஒலிம்பஸ் என்ற அந்த மலை 25 கிலோ மீட்டர் நீளமானது. எவரெஸ்ட் 8.8 கிலோ மீட்டர் உயரம் தான். இது தான் சூரிய கிரகத்திலேயே உயரமான கிரகமாக அறியப்படுகிறது.

3. செவ்வாய் கிரகத்துக்கு மார்ஸ் என்ற பெயர் ரோமானிய கடவுளிடம் இருந்து வந்தது. போர்களின் கடவுளான மார்ஸ் பெயரை சூட்டுவதற்கு செவ்வாயின் இரத்த சிவப்பு நிறம் தான் காரணம் எனக் கூறுகின்றனர்.

4. செவ்வாய் கிரத்துக்கும் வியாழன் மற்றும் சனியில் இருப்பது போல வளையங்கள் கிடைக்கும். நாசா கூறுவதன் படி 30 முதல் 50 மில்லியன் ஆண்டுகளில் செவ்வாயின் துணைக்கோலான ஃபோபோஸ் (Phobos) சிதைந்து அதன் குப்பைகள் வளையமாக செவ்வாயை சுற்றிவரத் தொடங்கும். மார்ஸில் இன்னொரு துணைக்கோளும் இருக்கிறது.

5. மிகப் பெரிய மலையைப் போலவே மிகப் பெரிய பள்ளத்தாக்குகளையும் செவ்வாய் கொண்டுள்ளது. வால்ஸ் மரைனெரிஸ் என்ற பள்ளத்தாக்கு 4200 கிலோமீட்டர் பரப்பளவு உடையது. மேலும் 7 கிலோமீட்டர் ஆழமானதும் கூட.

6. பூமியிலிருந்து செவ்வாய்க்கு செல்லும் முன்னரே செவ்வாய் பூமிக்கு வந்ததாக அறிவியல் அறிஞர்கள் நம்புகின்றனர். ஆமாம், விண்கல் தாக்குதலாலோ அல்லது பிற வெடிப்புகளாலோ செவ்வாயில் இருந்து பிரிந்த பாறை துகள்கள் பூமியில் விழுந்ததாக கூறி அவற்றை "Martian Meteorites" என்ற பெயரில் பாதுகாக்கின்றனர்.

7. செவ்வாயில் பனிபிரதேசங்கள் இருக்கின்றன என்பதை கண்டறிந்துள்ளனர். இவைதான் முற்காலத்தில் தண்ணீராக இருந்திருக்கலாம்.

8. உலகில் உள்ள எல்லா வளர்ந்த, வளரும் நாடுகளும் செவ்வாய் கிரகத்துக்கு செல்ல விரும்புகின்றன. அதில் முதன் முதலாக வெற்றி கண்டது அமெரிக்கா தான். ரஷ்யாவின் செவ்வாய்க்கு விண்கலன்களை அனுப்பும் திட்டங்கள் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. இந்தியாவின் மங்கல்யான் வெற்றிகரமாக செவ்வாயை அடைந்தது. 1950 முதல் இன்றுவரை 50க்கும் மேற்பட்ட செவ்வாய் திட்டங்களை உலக நாடுகள் செயல்படுத்தியிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை தோல்வியில் முடிந்திருக்கின்றன.

மங்கல்யான்

9. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் இறங்க பெரும் தடையாக இருப்பது குறைந்த காற்றழுத்தம், கடுமையான குளிர் மட்டுமல்ல. அங்கு அடிக்கடி வரும் தூசிப் புயலும் தான். எவ்வளவு பாதுகாப்பான உடை அணிந்திருந்தாலும் செவ்வாயின் தூசிப் புயலுக்கு பின் உயிர்பிழைத்திருக்க முடியாது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?